கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் இருந்து 50க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி மாணவர்கள் சுற்றுலா சென்றனர்.
சுற்றுலா பேருந்தை விருத்தாசலம் அருகே உள்ள சேப்பலாநத்தம் பகுதியைச் சேர்ந்த தினகரன் (வயது 36) ஓட்டிச் சென்றார்.
இந்நிலையில் சிதம்பரம் அருகே வயலூர் கிராமத்தில் அருகில் வந்த போது பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மரத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது
இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர் படுகாயம் அடைந்தார். மாணவர்கள் காயம் இன்றித் தப்பினர்.
இதனைத் தொடர்ந்து ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக பேருந்து ஓட்டுநரை சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அண்ணாமலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.



