வாக்காளர் சிறப்பு தீவிரதிருத்தம் குறித்து, திருவண்ணாமலை தெற்கு, வடக்கு மாவட்டத் திற்குட்பட்ட, 8 சட்டமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு, திமுக வடக்கு மண்டல தேர்தல் பொறுப்பாளரும், பொதுப்பணித்துறை அமைச்சருமான எ.வ.வேலு சிறப்புரையாற்றினார்.
திருவண்ணாமலை, மலப்பாம்பாடி, கலைஞர் திடல் -தளபதி அரங்கத்தில், இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சட்டப்பேரவைத் துணைத் தலைவர் கு.பிச்சாண்டி தலைமை வகித்தார். போளூர் தொகுதி பார்வையாளர்கள் டாக்டர் எ.வ.வே. கம்பன், திருவண்ணாமலை டாக்டர் இரா.மாசிலாமணி, கீழ்பென்னாத்தூர் எஸ்.பி.மணிமாறன், செங்கம் டாக்டர் மாலதிநாராயணசாமி, கலசப்பாக்கம் பா.செந்தமிழ்ச்செல்வன், ஆரணி ஊரல் அண்ணாதுரை செய்யாறு டாக்டர் ஆர்.டி.அரசு, வந்தவாசி கே.செந்தில்குமார் ஆகியோர்
முன்னிலை வகித்தனர்.
வடக்கு மாவட்ட செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம். எஸ்.தரணிவேந்தன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
கூட்டத்தில் கலந்து கொண்டு வடக்கு மண்டல பொறுப்பாளரும், பொதுப்பணித்துறை அமைச்சருமான எ.வ.வேலு ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினார். ஆலோசனைக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, சட்டமன்ற உறுப்பினர்கள் செங்கம் மு.பெ.கிரி, கலசப்பாக்கம் பெ.சு. தி.சரவணன், வந்தவாசி எஸ்.அம்பேத்குமார். செய்யாறு ஓ.ஜோதி தெற்கு மாவட்ட அவைத் தலைவர் கோ.சண்ணன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் இராபுஸ்ரீதரன், பொன்.முத்து, மாவட்ட பொருளாளர்எஸ். பன்னீர்செல்வம், மாவட்ட துணை செயலாளர்கள் பிரியா விஜயரங்கன், மாவட்ட அவைத் தலைவர் இரா.ராஜசேகர், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் விஜயலட்சுமிரமேஷ், வடக்கு மாவட்ட நிர்வாகிகள்
ஆர்.சிவானந்தம், ஆர். வேல்முருகன், கே.வி. ராஜ்குமார், மாவட்ட பொ ரு டி.ஏ.தட்சணாமூர்த்தி, மாவட்ட ளா ள ர் து ணை செ யலாளர்கள் ந.பாண்டுரங்கள், க.லோக நாதன், ஜெயராணிரவி, மாநகர செயலாளர் ப.கார்த்திவேல்மாறன், மற்றும் திமுக தேர்தல் பார்வையாளர்கள், பணிக்குழு ஒருங்கிணைப்பாளர்கள், வாக்குச்சாவடி முகவர்கள், தகவல் தொழிற்நுட்பக்குழு, வழக்கறிஞர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.



