நவம்பர் மாதம் 14.ஆம் தேதி தேசிய குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. தொடர்ந்து 18-ம் தேதி குழந்தை பாலியல் சுரண்டல், துஷ்பிரயோகம் மற்றும் வன்முறையைத் தடுப்பதற்கும் குணப்படுத்துவதற்கான உலக தினமாகவும், 19-ம்தேதி உலக குழந்தை வன்முறைக்கு எதிரான தினமாகவும், 20-ம்தேதி உலக குழந்தைகள் தினமாகவும் பின்பற்றப்படுகிறது.
அதனடிப்படையில் நேற்றைய தினம் தேசிய குழந்தைகள் தினத்தையெட்டி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் சார்பாக “குழந்தைகளுக்காக நடை” என்ற தலைப்பின் கீழ் கையெழுத்து இயக்கம் மற்றும் திருவண்ணாமலை அரசு தொழிற்பயிற்சி மைய மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்ட பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் தொடங்கி வைத்தார். இந்த பேரணியானது மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலிருந்து வேங்கிக்கால் ஊராட்சி மன்ற அலுவலகம் வரை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செல்வி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



