திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட சிறுகொத்தான் கிராமத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் சார்பில் ரூ.4.50 கோடி மதிப்பீட்ல் புதிதாக கட்டப்பட்ட வட்ட செயல்முறை கிடங்கு கட்டப்பட்டுள்ளது. இந்த கிடங்கினை சென்னையிலிருந்து காணொலிகாட்சிவாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.
தொடர்ந்து சிறுகொத்தான் கிராமத்தில் வட்ட செயல்முறை கிடங்கு திறப்புவிழா நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் ஆராஞ்சி ஏ.எஸ்.ஆறுமுகம் தலைமை தாங்கினார்.
மண்டல மேலாளர் நிர்மலாபிரியதர்ஷினி முன்னிலை வகிக்க கண்காணிப்பாளர் ஏ ஆனந்தராஜ் அனைவரையும் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி புதியதாக கட்டப்பட்டுள்ள வட்ட செயல்முறை கிடங்கில் குத்துவிளக்கேற்றிவைத்து பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தார்.
இதில் துணைப்பதிவாளர் (பொதுவிநியோக திட்டம்) ப.வினோத், கூட்டுறவு சார்பதிவாளர் தமிழரசி, வட்ட வழங்கல் அலுவலர் கலையரசி. உதவி செயற்பொறியாளர் த.பூமிநாதன், உதவி பொறியாளர் டி.டி.வரதராஜன், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் ராஜேந்திரன், கீழ்பென்னத்தூர் பேரூராட்சி நகர செயலாளர் த.க.அன்பு, பேரூராட்சி தலைவர் கோ.சரவணன். முன்னாள் பேரூராட்சி தலைவர் ச.கூ.பன்னீர்செல்வம், கீழ்பென்னாத்தூர் ஒன்றிய துணை செயலாளர் சிவக்குமார், அரசு ஒப்பந்ததாரர் கே.எஸ்.பூபதி, திமுக கிளை செயலாளர்கள் பி.கே.ஹரிஹரன், கே.சிவா உள்பட அரசு அலுவலர்கள் முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் திமுக முன்னோடிகள் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
முடிவில் உதவி மேலாளர் ஆர்.சாந்தி நன்றி கூறினார்.



