Friday, March 6, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

விருதுநகரில் தென்மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு: தி.மு.க.வை எந்த கொம்பனாலும் தொட்டுப்பார்க்க முடியாது

முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு

admin by admin
08/02/2026
in செய்திகள், தமிழ்நாடு, மாவட்டங்கள்
0
விருதுநகரில் தென்மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு: தி.மு.க.வை எந்த கொம்பனாலும் தொட்டுப்பார்க்க முடியாது
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெறவாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன.

பிரசாரம், பொதுக்கூட்டம், கூட்டணி, தொகுதி பங்கீடு, நலத்திட்டப்பணிகள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை என பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில், திமுக தென்மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் விருதுநகரில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது,

விருதுநகர் என்றாலே பெருந்தலைவர் காமராஜர்தான் நினைவுக்கு வருவார். விருதுநகரில் மாநாடு நடத்தினால் அடுத்த தேர்தலில் திமுக வெற்றிபெறுவது உறுதி.

AlsoRead

தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!

ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை: ராணுவம் அதிரடி உத்தரவு!

ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி

இளைஞரணி யை தொடங்கியபோது விருதுநகரில் எனது காலடித்தடம் பதியாத இடமே கிடையாது. நம்பிக்கையாக இருக்கும் உங்களை பார்க்கும்போது எனது நம்பிக்கைக்குமே உற்சாகம் வருகிறது.

விருதுநகரில் 2004ல் தென்மண்டல மாநாடு நடத்தினோம். தேர்தலில் 40க்கு 40ல் வெற்றிபெற்றோம். 2019ல் பரப்புரையை தொடங்கி வெற்றிபெற்றோம். திமுக மாநாடு வாரம் வாரம் நடக்கக்கூடியதாக மாறிவிட்டது. இம்மாதம் மட்டும் 5 மாநாடு நடக்க உள்ளது. 7வது முறையாக திமுக ஆட்சிமைக்கும். தேர்தலில் மெத்தனமாக இருக்கக்கூடாது. இன்னும் பல நூற்றாண்டுகள் ஆனாலும் திமுகவை எந்த கொம்பனாலும் தொட்டுப்பார்க்க முடியாது.

தமிழுக்கு பல்வேறு கால கட்டங்களில் ஆபத்து வந்தபோது போராடி தந்துள்ளோம். இன்றைக்கும் இந்தியை திணிக்கும் ஆபத்து தலைக்குமேல் கத்திபோல் தொங்கிக்கொண்டிருக்கிறது. சாதனைகளில் தமிழ்நாட்டிற்கு நிகர் தமிழ்நாடுதான். அனைத்து துறையிலும் நம்பர் 1 மாநிலமாக இருந்தாலும் பட்ஜெட்டில் தமிழ்நாட்டில் ஒன்றும் கொடுக்கவில்லை.

எடப்பாடி பழனிசாமி என்.டி.ஏ. பழனிசாமியாக மாறிவிட்டார். நானும் ரவுடிதான் என்பதுபோல் நான் தான் கூட்டணிக்கு தலைமை என எடப்பாடி பழனிசாமி புலம்பிக்கொண்டிருக்கிறார். தனக்கு பதவி கொடுத்தவர்களேயே எடப்பாடி பழனிசாமி கட்சியை விட்டு நீக்கினார். தேர்தலில் அதிமுக மிகப்பெரிய தோல்வியை அடையப்போகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Tags: இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்புதிராவிட முன்னேற்ற கழகம்முதல்வர் மு.க.ஸ்டாலின்விருதுநகர்
Previous Post

தேவாலயத்தில் நடந்த கொலை: குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

Next Post

“என் ஊர் என் கனவு” கடலூருக்கான சிறப்புத் திட்டம்

Related Posts

Tamil Nadu Rajya Sabha Members

தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!

05/03/2026
Iran Navy

ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை: ராணுவம் அதிரடி உத்தரவு!

05/03/2026

ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி

05/03/2026

மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்

05/03/2026

“எளிய தொண்டரை எம்.பி.யாக்கும் காங்கிரஸ்!” -கிறிஸ்டோபர் திலக் குறித்து செல்வப்பெருந்தகை பெருமிதம்

05/03/2026

சென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. தர்மாதிகாரி நியமனம்

05/03/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!
  • ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை: ராணுவம் அதிரடி உத்தரவு!
  • ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி
  • மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்
  • “எளிய தொண்டரை எம்.பி.யாக்கும் காங்கிரஸ்!” -கிறிஸ்டோபர் திலக் குறித்து செல்வப்பெருந்தகை பெருமிதம்

Recent Comments

  1. Pearl4024 on “தி.மு.க. அரசின் திட்டங்கள் மக்களிடம் பேசுபொருளாக மாறியுள்ளன”
  2. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved