கடந்த 11.03.2020 அன்று வள்ளலார் நகர், பட்டாபிராமில் உள்ள பென்டிகாஸ்ட் தேவாலயத்தின் உள்ளே எனோஸ் (வயது 62), (த/பெ ஜான் செல்லையன்) என்பவரை தொழில் போட்டியில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக மோசஸ் (27) என்பவர் கத்தியால் மார்பில் குத்திக் கொலை செய்தார்.
இச்சம்பவம் தொடர்பாக பட்டாபிராம் போலீசார் எதிரியை கைது நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி நடவடிக்கை மேற்கொண்டனர்.
இவ்வழக்கின் மீது புலன் விசாரணை மேற்கொண்டு இறுதி அறிக்கையை தாக்கல் செய்து வழக்கின் மீதான விசாரணை திருவள்ளூர், முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நீதிமன்ற விசாரணையில் எதிரியின் மீதான குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்ட நிலையில் திருவள்ளூர் முதன்மை மாவட்ட நீதிபதி குற்றச்சாட்டுக்குள்ளான எதிரி மோசசுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10,000/-அபராதமும் அபராதம் கட்டத் தவறினால் 1 ஆண்டு சிறை தண்டனையும், சட்டப்பிரிவு 506(ii)-ன் படி 3 ஆண்டுகள் சிறைதண்டனையும் விதித்து உத்தரவிட்டார்.
மேற்கண்ட தண்டனைகளை எதிரி ஒரே நேரத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார்.



