Sunday, September 6, 2026
36 °c
Tiruvannamalai
32 ° Mon
33 ° Tue
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

கடலோர மாவட்டங்களின் வளர்ச்சிக்காக ரூ.18 ஆயிரம் கோடிக்கு திட்டங்கள் மத்திய அரசிடம் பரிந்துரை

அமைச்சர் எ.வ.வேலு தகவல்

admin by admin
19/02/2026
in செய்திகள், தமிழ்நாடு
0
தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பு செல்வப்பெருந்தகை கோரிக்கைகள் வழங்கினால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்
0
SHARES
16
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

தமிழக கடலோரமாவட்டங்களின் வளர்ச்சிக்காக மத்திய அரசின் சாகர்மாலா 2.0 திட்டத்தின்கீழ், ரூ.18 ஆயிரம் கோடிமதிப்பிலான திட்டங் ள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

AlsoRead

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் 98-வது வாரியக் கூட்டம், அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் அவர் பேசிய தாவது: கடல்சார் கட்டமைப்புகளை உருவாக்கி சிறுதுறைமுகங்களை மேம்படுத்தி, தமிழகத்தை முன்னணி கடல்சார் மாநிலமாக உருவாக்கும் நோக்கில், கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக கடந்த 40 ஆண்டுகளாக செயல்பாட்டில் இல்லாத கடலூர் துறைமுகம் தற்போது தனியார் துறைமுக இயக்கு நிறுவனம் மூலம் மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. நாகப்பட்டினத் திலிருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு இயக்கப்படும் பன்னாட்டுப் பயணிகள் படகு போக்குவரத்து கடந்த 2023-ல் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக இயக்கப்பட்டு வருகிறது.

ராமேசுவரத்தில் அக்னிதீர்த்தம் மற்றும் பாம்பன் பகுதிகளில் மிதக்கும் தோணித்துறைகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ராமேசுவரத்திலிருந்து இலங்கையின் தலைமன்னாருக்கு பயணிகள் சேவையை தொடங்க, ராமேசுவரத்தில் பன்னாட்டு வசதியுடைய பயணிகள் முனையம் மற்றும் தோணித்துறை அமைக்க மத்திய அரசின் நிதியுதவி கோரி சுருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.

சாகர்மாலா 2.0 திட்டம்: கடலூரில் மத்திய மற்றும் மேற்கு மாவட்டங்களிலுள்ள சரக்குகளை கையாள புதிய பசுமை வளத்துறைமுகம் அமைக்கவும், தேவனாம்பட்டினம் அருகே உள்ள நூற்றாண்டு பழமையான துறைமுக அலுவலர் குடியிருப்பு வளாகத்தை கடல்சார் பாரம்பரிய அருங்காட்சியக வளாகமாக மாற்றுவதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

மேலும் தமிழக கடலோர மாவட்டங்களின் வளர்ச்சிக்காக, மத்திய அரசால் தொடங்கப்பட்ட சாகர்மாலா 2.0 திட்டத்தின் கீழ், நிதியுதவி கோரி ரூ.18 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.

இக்கூட்டத்தில் பொதுப்பணித்துறை செயலர் மங்கத்ராம் சர்மா, நெடுஞ்சாலைகள் துறை செயலர் இரா.செல்வராஜ், தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் முதன்மை செயலர் தி.ந.வெங்கடேஷ். மாநில துறைமுக அலுவலர் ம.அன்பரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags: அமைச்சர் எ.வ.வேலுதலைமை செயலகம்பரிந்துரை
Previous Post

புழல் சிறையில் கைதிகளிடம் திடீர் சோதனை;

Next Post

முதலமைச்சர் ஸ்டாலினுடன் ஓ.பன்னீர் செல்வம் சந்திப்பு

Related Posts

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

18/08/2026
அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

18/08/2026

சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

16/08/2026

கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை வேண்டும்

16/08/2026

அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

16/08/2026

மணிப்பூரில் முடக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளை திறக்க இரு தரப்பினரும் இணைந்து செயல்பட வேண்டும்

16/08/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
  • மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்
  • டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக 100 சிக்சர்கள்:
  • அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:
  • சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved