Wednesday, March 18, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

“தெலுங்கு, கன்னட உடன்பிறப்புகளுக்கு உளம்நிறைந்த உகாதி வாழ்த்து” – முதல்வர் மு.க.ஸ்டாலின்

Balaji by Balaji
18/03/2026
in தமிழ்நாடு
0
mkstalin

mkstalin

0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களின் புத்தாண்டான உகாதி திருநாளை முன்னிட்டு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்,

AlsoRead

தொடர் விடுமுறை: தமிழகம் முழுவதும் 1,224 சிறப்பு பேருந்துகள் இயக்கம் – போக்குவரத்துத் துறை அறிவிப்பு

“யாருடனும் கூட்டணியில்லை; தனித்தே போட்டி” – இஃப்தார் நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் அதிரடி!

“சொல்வதற்குச் சாதனை, கொள்கை இல்லாதவர்கள் ஆபாசங்களை பேசுகின்றனர்” – முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

“உகாதிப் பண்டிகையைக் கொண்டாடும் தெலுங்கு, கன்னட உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது உளம்நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டில் உகாதி திருநாளுக்கு அரசு விடுமுறை அளித்தது தொடங்கி, நம் மாநிலத்தில் வாழும் மொழிச்சிறுபான்மையின மக்களுக்கு என்றும் காவலரணாகத் திராவிட முன்னேற்றக் கழக அரசு திகழ்ந்து வருகிறது.

திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழிகளைப் பேசும் தென்மாநில மக்கள் அனைவரும் ஒற்றுமையாகச் செயல்பட்டு, இந்தி ஆதிக்கத்தையும் திணிப்பையும் வீழ்த்திட வேண்டும் என்பதையும், மாநில சுயாட்சியை நிலைநாட்ட வேண்டும் என்பதையும் தொடர்ந்து வலியுறுத்தி வரும் இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம்.

அண்மைக் காலங்களில், வரிப்பகிர்வில் தென்னிந்திய மாநிலங்களுக்கு இழைக்கப்படும் அநீதி, தொகுதி மறுவரையறையால் நாடாளுமன்றத்தில் நமது வலிமையைக் குறைக்கும் சதி, திராவிடப் பண்பாட்டை மதிக்காத ஒன்றிய பா.ஜ.க. அரசின் போக்கு ஆகியவற்றுக்கு எதிராக நாம் ஒன்றிணைந்து போராடி வருகிறோம்.

இந்த ஒற்றுமை தொடரவும், மென்மேலும் வலுப்பெறவும் என இந்த உகாதி நாளில் உறுதியேற்போம்! வண்ணக் கோலம், அறுசுவையும் அடங்கிய பச்சடி, விருந்துடன் எழுச்சியோடும் மகிழ்ச்சியோடும் உகாதியைக் கொண்டாடும் தெலுங்கு, கன்னட மொழிபேசும் உடன்பிறப்புகள் அனைவருக்கும் மீண்டும் எனது உகாதி நல்வாழ்த்துகள்! வரும் மே மாதம் அமையவுள்ள திராவிட மாடல் 2.0-அரசுக்கும் இந்த உகாதி தொடக்கமாக அமையட்டும்!”

Tags: Delimitation ConspiracyDMK Government InitiativesDravidian Model 2.0Hindi Imposition ProtestMK Stalin Ugadi WishesSouth Indian States UnityState AutonomyTamil Nadu CM Ugadi MessageTax Apportionment IssueTelugu Kannada People TN
Previous Post

“சொல்வதற்குச் சாதனை, கொள்கை இல்லாதவர்கள் ஆபாசங்களை பேசுகின்றனர்” – முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

Next Post

வாக்காளர் அடையாள அட்டை இல்லையென்றாலும் வாக்களிக்கலாம் – 12 மாற்று ஆவணங்கள் எவை?

Related Posts

Holiday Special Buses Tamil Nadu

தொடர் விடுமுறை: தமிழகம் முழுவதும் 1,224 சிறப்பு பேருந்துகள் இயக்கம் – போக்குவரத்துத் துறை அறிவிப்பு

18/03/2026
tvk vijay

“யாருடனும் கூட்டணியில்லை; தனித்தே போட்டி” – இஃப்தார் நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் அதிரடி!

18/03/2026

“சொல்வதற்குச் சாதனை, கொள்கை இல்லாதவர்கள் ஆபாசங்களை பேசுகின்றனர்” – முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

18/03/2026

தமிழக தேர்தல் 2026: திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு

18/03/2026

தமிழக தேர்தல்: வீட்டிலிருந்தே வாக்களிக்க ‘படிவம் 12D’ – தபால் வாக்கு பெறுவது எப்படி? முழு விவரம்!

18/03/2026

234 தொகுதிகளிலும் தவெக தனித்துப்போட்டி: விஜய் எடுத்த அதிரடி முடிவு! – ஆதவ் அர்ஜுனா அறிவிப்பு

18/03/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • தொடர் விடுமுறை: தமிழகம் முழுவதும் 1,224 சிறப்பு பேருந்துகள் இயக்கம் – போக்குவரத்துத் துறை அறிவிப்பு
  • டெல்லி சோகம்: அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து – 3 குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழப்பு!
  • “யாருடனும் கூட்டணியில்லை; தனித்தே போட்டி” – இஃப்தார் நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் அதிரடி!
  • வாக்காளர் அடையாள அட்டை இல்லையென்றாலும் வாக்களிக்கலாம் – 12 மாற்று ஆவணங்கள் எவை?
  • “தெலுங்கு, கன்னட உடன்பிறப்புகளுக்கு உளம்நிறைந்த உகாதி வாழ்த்து” – முதல்வர் மு.க.ஸ்டாலின்

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved