Friday, March 6, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

ஒரு ரூபாய் அட்வான்ஸ் வாங்கிய எம்.ஜி.ஆர்!.

M.Pandiyaraj, Sub Editor by M.Pandiyaraj, Sub Editor
23/03/2025
in சினிமா
0
ஒரு ரூபாய் அட்வான்ஸ் வாங்கிய எம்.ஜி.ஆர்!.
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

எம்.ஜி.ஆர்., ஒரு ரூபாய் மட்டும் அட்வான்ஸ் வாங்கிக் கொண்டு நடத்த படம் கோடிகளை குவித்த எவர்கிரீன் சூப்பர் ஹிட் படமானது.

சிறு வயது முதலே வறுமையையும், கஷ்டங்களையும் பார்த்து வளர்ந்ததாலோ என்னவோ யாரும் பட்டினியோடு இருக்கக் கூடாது என நினைத்தவர் எம்.ஜி.ஆர். அதேபோல், நமக்கு யாராவது உதவ மாட்டார்களா.. நம்மை தூக்கிவிட மாட்டார்களா என பல வருடங்கள் ஏங்கியிருக்கிறார்.

அதனால்தான் எல்லோருக்கும் உதவ வேண்டும். நம்மால் முடிந்த வரை பலரையும் மேலே தூக்கிவிட வேண்டும் என வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர். நினைத்தது போலவே வாழ்ந்தும் காட்டினார்.  இவரிடம் உதவி பெற்றவர்கள் பலரும் உண்டு.

யாரையும் எதிரியாக நினைக்க மாட்டார். இவரை எதிரி என நினைத்து காயப்படுத்தியவர்களுக்கும் அவர் உதவினார் என்பதுதான் ஹைலைட். 1950, 60களில் ஒரு பழக்கம் இருந்தது. எம்.ஜி.ஆரை வைத்து படமெடுக்கும் இயக்குனர்கள் சிவாஜி பக்கம் செல்ல மாட்டார்கள்.

அதேபோல், சிவாஜியை வைத்து படமெடுத்த சில இயக்குனர்கள் எம்.ஜி.ஆர் படங்களை இயக்க மாட்டார்கள். இதற்கு படங்களை தயாரிக்கும் நிறுவனங்களும் ஒரு முக்கிய காரணம். ஏனெனில், அப்போது சில இயக்குனர்கள் தயாரிப்பு நிறுவனத்தின் இயக்குனராகவே இருப்பார்கள்.

சிவாஜியை வைத்து கர்ணன், பலே பாண்டியா, கப்பலோட்டிய தமிழன் என பல திரைப்படங்களை இயக்கியவர் பி.ஆர்.பந்துலு. சிவாஜியை வைத்து இவர் இயக்கிய சில படங்கள் சரியாக ஓடாமல் போய் நஷ்டம் அடைந்தார்.  எனவே, எம்.ஜி.ஆரிடம் சென்று பேசி, அவரை வைத்து ஒரு படமெடுக்க முடிவு செய்தார்.

பி.ஆர்.பந்துலுவை பார்த்த எம்.ஜி.ஆர். மகிழ்ச்சியுடன் அவரை வரவேற்று பேசினார். பந்துலு தனது ஆசையை சொல்லவும் ‘கண்டிப்பாக நடிக்கிறேன்’ என சொன்னார். கதையை பற்றி பந்துலு பேச துவங்க ‘கதை இருக்கட்டும். எனக்கு எவ்வளவு அட்வான்ஸ் கொடுப்பீங்க’ என சிரித்துக் கொண்டே கேட்க பந்துலு பதறிப்போனார். ஏனெனில் அவர் பணம் எதையும் எடுத்து செல்லவில்லை.

அப்போது பந்துலுவுடன் சென்றிருந்த வசனகர்த்தா ஆர்.கே.சண்முகம் உடனே வெளியே போய் பந்துலுவின் கார் ஒட்டுனரிடம் ஒரு ரூபாயை வாங்கி வந்து பந்துலுவிடம் கொடுக்க அவர் அதை எம்.ஜி.ஆரிடம் கொடுத்தார். அதை மகிழ்ச்சியுடன் எம்.ஜி.ஆர் வாங்கி கொண்டார்.

AlsoRead

நடிகைகளின் உடலை ‘ஜூம்’ செய்யும் வீடியோக்கள்: ருக்மணி வசந்த், சப்தமி கௌடா கடும் கண்டனம்!

“எனது வீடு வெறும் கட்டிடம் அல்ல; மக்களின் அன்பால் நிறைந்த ஆலயம்!” – நடிகர் அமிதாப் பச்சன் நெகிழ்ச்சி

கேரளா ஸ்டோரி 2: தடை நீக்கம் – கேரள உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

அப்படி உருவான படம்தான் ஆயிரத்தில் ஒருவன். இப்படம் பல லட்சங்களை வசூலித்தது. இப்போது கூட இந்த படம் தமிழகத்தில் எங்கோ ஒரு இடத்தில் ஒரு திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கிறது. பலமுறை தொலைக்காட்சிகளிலும் இப்படத்தை பார்க்க முடியும்.

 அப்படிப்பார்த்தால் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் வசூல் கோடிகளை தாண்டியிருக்கும் என கணிக்கலாம்!.

Tags: MGR CINEMAஆயிரத்தில் ஒருவன்எம்.ஜி.ஆர்.எம்.ஜி.ஆர்.நினைவுகள்
Previous Post

பெண்களுக்கான பளு தூக்குதல் போட்டி

Next Post

சூரிய பகவானை வழிபட என்ன செய்ய வேண்டும்?

Related Posts

Rukmini Vasanth

நடிகைகளின் உடலை ‘ஜூம்’ செய்யும் வீடியோக்கள்: ருக்மணி வசந்த், சப்தமி கௌடா கடும் கண்டனம்!

03/03/2026
Amitabh Bachchan Jalsa House

“எனது வீடு வெறும் கட்டிடம் அல்ல; மக்களின் அன்பால் நிறைந்த ஆலயம்!” – நடிகர் அமிதாப் பச்சன் நெகிழ்ச்சி

03/03/2026

கேரளா ஸ்டோரி 2: தடை நீக்கம் – கேரள உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

28/02/2026

சர்வதேசத் தொடரை நிராகரித்த தீபிகா படுகோன்: ‘த ஒயிட் லோட்டஸ்’ வாய்ப்பை தவிர்த்தது ஏன்?

28/02/2026

‘தாய் கிழவி’ – பாசமும் பகையும் கலந்த நகைச்சுவை விருந்து!

27/02/2026

‘ஆண்பாவம் பொல்லாதது’ படக்குழுவினர் அண்ணாமலையார் கோயிலில் தரிசனம்

10/11/2025

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அதிரடி மாற்றம்: மேற்கு வங்க ஆளுநராக நியமனம் – பின்னணியும் அரசியல் பரபரப்பும்!
  • தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!
  • ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை: ராணுவம் அதிரடி உத்தரவு!
  • ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி
  • மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்

Recent Comments

  1. Pearl4024 on “தி.மு.க. அரசின் திட்டங்கள் மக்களிடம் பேசுபொருளாக மாறியுள்ளன”
  2. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved