Monday, June 8, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதடா… கர்ணா…

M.Pandiyaraj, Sub Editor by M.Pandiyaraj, Sub Editor
28/03/2025
in சினிமா
0
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதடா… கர்ணா…
0
SHARES
14
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

தமிழ் சினிமாவில் டிஎம்எஸ் வாய்ஸ் கம்பீரமானது. அந்த குரலே இன்னொருவருடன் சேர்ந்து பாடும்போது லைட்டா ஜகா வாங்கும்னா, அந்த ஒரே குரல், சீர்காழி கோவிந்த ராஜனுடைய வெண்கலக்குரல் கிட்டதான்..

தெய்வம் படத்தில் திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்.. பாடலாகட்டும், சந்திரோதயம் படத்தில்,” காசிககு போகும் சன்யாசி”, பாடலாகட்டும்.. இரட்டை குரலில் சீர்காழியின் ஆதிக்கமே மேலோங்கியிருக்கும்.

அப்படிப்பட்டவர் தனித்துபாடும் போது என்றால், கேட்கவா வேண்டும். விநாயகனே வினை தீர்ப்பவனே.., என்று சீர்காழியை கேட்க ஆரம்பித்தால், அந்த விடியற்காலைப் பொழுது அவ்வளவு பக்தி மயமாகி விடும்..

நீயல்லால் தெய்வமில்லை

எனது நெஞ்சே நீ வாழும் எல்லை

முருகா ..

AlsoRead

‘வாரண்ட்’ வெப் தொடரில் ஹீரோவாக அறிமுகமாகும் பிரசாந்த் பாண்டியராஜ்

“வெறுப்பை பரப்பும் Political IT Wing” – நிவேதா பெத்துராஜ் குற்றச்சாட்டு

ஆஸ்கர் 2026: மகுடம் சூடிய ‘ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்’ – சிறந்த நடிகர் மைகேல் பி. ஜோர்டன்! முழு வெற்றியாளர் பட்டியல்

முழு பாடலையும் கேட்க கேட்க சீர்காழியின் ஏற்ற இறக்க குரல் வளர்த்தால் மனது உருகிக் கொண்டே போகும்..

பக்தியில் திளைத்து, திரையில் குழைத்து, கடைசியில் அரசியல் மேடைகளிலெல்லாம் தவறாமல் ஒலிக்கும் சரித்திர குரலாகிவிட்டது சீர்காழியின்  குரல்.,

அதிமுக மேடையா?

நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்.. என உலகம் சுற்றும் வாலிபன் படப்பாடல் பட்டையைகிளப்பும்.

ஜெயலலிதாவிற்கு வரவேற்பா, வெற்றிக் களிப்பா,  முத்துசிப்பி படத்தில் உள்ள….தொட்ட இடம் துலங்க வரும் தாயக்குலமே வருக..கணீர் கணீர் என சீர்காழி குரல் எகிறும்…இரண்டு பாடல்களிலும் என்ன கம்பீரமான குரல்..

திரை, மேடை என இரண்டிலும் குரல் வளத்தால் ஒரே நேரத்தில் கலக்கும் இசை மேதைகள் மிகவும் குறைவு..

கர்நாடக  இசைமேதைகள், பக்திப்பாடல்கள் என ஒரு பக்கத்திற்கு ஈடுகொடுத்து சாகசம் செய்துகொண்டே இன்னொரு பக்கம் திரைப் பாடல்கள் மூலமும் மக்களின் உள்ளங்களை கொள்ளை கொண்ட சீர்காழி கோவிந்தராஜன்,  நடிப்பு அவதாரத்தையும் விடவில்லை.

ஏராளமான படங்களில் நடித்தார்.  அகத்தியன் படத்தில் கதாநாயகனாகவே அசத்தியவர். எம்.கே.டி, பி.யூ.சின்னப்பா, டி.ஆர் மகாலிங்கம், திருச்சி லோகநாதன், சி.எஸ்.ஜெயராமன் போன்றோர் குரல் வளத்தால் கொடி கட்டிபறந்தவர்கள். என்றாலும் அட்சர சுத்தம் விஷயத்தில் இவர்களின் குரல்களில் பிசிறுகள் இருக்கவே செய்யும்..

ஆனால் பிசிறே இல்லாமல் தமிழை அப்படியொரு சுத்தமாக கணீர் குரலில் முதன் முதலாக கொடுத்தவர். ஜாம்பவான் டிஎம்எஸ்கூட துல்லியமான உச்சரிப்பில் இவருக்கு பின்னால் தான். ஒரு புறம் பக்திப்பாடல் இவரின் குரலால் உருப்பெற்று சாகாவரத்துடன் இன்றளவும் ஒலிக்கின்றன. இன்னொரு புறம் திரைப்பாடல்கள்..

உழைப்பதில்லா உழைப்பை .. என நாடோடி மன்னனில் மக்கள் திலகத்திற்காக உச்சத்தில் போன குரல், நாகேஷுக்காக நீர் குமிழியில் ஆடி அடங்கும் வாழ்க்கை யடா.. என நேர்மாறான அடக்கத்தின் வடிவமாக. திகழும்..

“நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே..”

பட்டணந்தான் போகலாமடி,,,

அறுபடை வீடு கொண்டதிருமுருகா..

தேவன் கோவில் மணியோசை.

பணம் பந்தியிலே..குணம் குப்பையிலே

எங்கிருந்தோ வந்தான் இடைஞ்சாதி நான் என்றான்.

அமுதும் தேனும் எதற்கு…

வெற்றிவேண்டுமா போட்டு பாரடா எதிர்நீச்சல்

இப்படி போய்க்கொண்டே இருக்கும் அவரின் சாகாவரம் பெற்ற கானங்களின் பட்டியல்..

கேட்ட மாத்திரத்தில் உருக வைக்கும்.கர்ணன் படத் தின் ”உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது….” பாடலின் கம்பீரக்குரல். புதிதாக கேட்கும் ஒவ்வொரு தலைமுறைக்கும் வியப்பின் குறீயிடாகவே இருக்கும்.

Tags: cinema newsseerkali govindarajan
Previous Post

நாட்டின் 3-வது பெரிய கோடீஸ்வரர் ஆனார் ரோஷினி நாடார்

Next Post

கள்ளக்குறிச்சியில் பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட் 

Related Posts

‘வாரண்ட்’ வெப் தொடரில் ஹீரோவாக அறிமுகமாகும் பிரசாந்த் பாண்டியராஜ்

‘வாரண்ட்’ வெப் தொடரில் ஹீரோவாக அறிமுகமாகும் பிரசாந்த் பாண்டியராஜ்

08/05/2026
Niveda Pethuraj

“வெறுப்பை பரப்பும் Political IT Wing” – நிவேதா பெத்துராஜ் குற்றச்சாட்டு

21/03/2026

ஆஸ்கர் 2026: மகுடம் சூடிய ‘ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்’ – சிறந்த நடிகர் மைகேல் பி. ஜோர்டன்! முழு வெற்றியாளர் பட்டியல்

16/03/2026

ஜனநாயகன் பட மறு தணிக்கை திடீர் ஒத்திவைப்பு: வெளியீட்டுத் தேதியில் மாற்றம்?

09/03/2026

தெலங்கானா அரசின் 2025 ‘கத்தார்’ விருதுகள்: நாக சைதன்யா, ராஷ்மிகா, கமல்ஹாசனுக்கு உயரிய விருதுகள்!

08/03/2026

நடிகைகளின் உடலை ‘ஜூம்’ செய்யும் வீடியோக்கள்: ருக்மணி வசந்த், சப்தமி கௌடா கடும் கண்டனம்!

03/03/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • “பாஜகவிலிருந்து விலக இதுதான் காரணம்” – அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!
  • “அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – நயினார் நாகேந்திரன் பேச்சு
  • கேரளாவின் கடன் ரூ.5.07 லட்சம் கோடி: பினராயி விஜயன் – வி.டி. சதீசன் இடையே அரசியல் மோதல்!
  • டெல்லி ஓட்டலில் பயங்கர தீ விபத்து: வெளிநாட்டினர் உட்பட 21 பேர் பரிதாப பலி – விதிமீறல்களே காரணமா?
  • ஆரணி தாலுகா அலுவலகத்தில் முடங்கிய பணிகள்: சான்றிதழ்கள் கிடைக்காமல் பொதுமக்கள், விவசாயிகள் கடும் அவதி!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved