Sunday, September 6, 2026
36 °c
Tiruvannamalai
32 ° Mon
33 ° Tue
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

அடுத்த கமல்ஹாசன் என போற்றப்பட்டவரை தெரியுமா?

M.Pandiyaraj, Sub Editor by M.Pandiyaraj, Sub Editor
01/04/2025
in சினிமா
0
அடுத்த கமல்ஹாசன் என  போற்றப்பட்டவரை தெரியுமா?
0
SHARES
210
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

எத்தனையோ நடிகர்கள் தோன்றி மறைந்தாலும் அவர்கள் நடித்த ஒரு சில படங்கள் காலத்திற்கும் அவர்களை நினைவுப்படுத்திக் கொண்டே இருக்கும்.  குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னாளில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கப் போகிறவர் தான் என்ற நம்பிக்கையோடு சினிமாத் துறையில் அடியெடுத்து வைத்தவர் தான் காஜா ஷெரீப்.  இயக்குநர் இமயம் கே.பாலச்சந்தரால் அடுத்த கமல்ஹாசன் என்று புகழப்பட்டவர் தான் காஜா ஷெரீப். 1980-களில் தமிழின் முன்னணி படங்கள் அனைத்திலும் குழந்தை நட்சத்திரமாக இருந்தார்.

மகேந்திரன் இயக்கிய தமிழ் சினிமாவின் எவர்கிரீன் படமாக உதிரிப்பூக்கள் திரைப்படத்தில் ‘‘அழகிய கண்ணே.. அரும்புகள் நீயே’’ பாடல் மூலம் அப்பாவி முகமும், அழகிய தோற்றமும் கொண்டு காண்போர் நெஞ்சை கலங்க வைத்தவர் மாஸ்டர் காஜா ஷெரீப். அதனைத் தொடர்ந்து வந்த புதிய வார்ப்புகள் படத்திலும் குழந்தையாகவே தனது நடிப்பால் ரசிகர்களை அசர வைத்தார்.

AlsoRead

செக் மோசடி வழக்கு: நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை

‘வாரண்ட்’ வெப் தொடரில் ஹீரோவாக அறிமுகமாகும் பிரசாந்த் பாண்டியராஜ்

“வெறுப்பை பரப்பும் Political IT Wing” – நிவேதா பெத்துராஜ் குற்றச்சாட்டு

அதன்பின் கே.பாக்யராஜ் நடித்து வெளியான படம் அந்த ஏழு நாட்கள், அதில் பாலகாட்டு மாதவன் கதாபாத்திரத்தில் பாடகராக நடித்திருந்தார் பாக்கியராஜ் . அதில் அவருக்கு சிஷ்யனாக ‘டோலாக்’. பையனாக தோன்றி கோபியாகவே வாழ்ந்திருந்தார் காஜா ஷெரீப். ‘சம்சாரம் அது மின்சாரம்’ படத்தில் நடிகரும் இயக்குனருமான விசுவின் இரண்டாவது மகனாகவும் ரகுவரனின் தம்பியாகவும் நடித்திருப்பார். மேலும் பாக்யராஜூடன் மீண்டும் சுவர் இல்லாத சித்திரங்கள் படத்திலும் நடித்திருந்தார்.

காஜா ஷெரீப் நடிப்பைப் கண்டு மிரண்டு போன இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்தர் இவரை அடுத்த கமல்ஹாசன் என்று வாழ்த்தினார். மேலும் ரஜினியுடன் போக்கிரி ராஜா, தனிக்காட்டு ராஜா, ரங்கா போன்ற படங்களிலும் நடித்துப் புகழ் பெற்றார். குழந்தை நட்சத்திரமாகவே பல படங்களில் நடித்தவருக்கு ஏனோ டூயட் பாடும் வாய்ப்பு மட்டும் கிடைக்கவில்லை.

1980-90 காலகட்டங்களில் அசைக்க முடியாத குழந்தை நட்சத்திரமாக பலருக்கும் அறிமுகமான காஜா ஷெரீப் அதன் பிறகு நடிப்பதைக் குறைத்துக் கொண்டார். கடைசியாக தலைமகன் படத்தில் நடித்திருந்தார். பல திறமைகள் இருந்தும் நடிப்பில் தொடர்ந்து ஜொலிக்காமல் போன காஜா ஷெரீப் தற்போது மலேசியா, சிங்கப்பூர், துபாய் போன்ற நாடுகளில் கலை நிகழ்ச்சிகள் ஏற்பாட்டாளராகப் பணிபுரிந்து வருகிறார்.

Tags: cinema newsHaja SeriffNext Kamal
Previous Post

எம்.ஜி.ஆருக்கு பிறகு பெண்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் மோகன்

Next Post

செங்கோட்டையனை தன்வசப்பபடுத்த முதலில் திட்டமிட்ட தி.மு.க.,?

Related Posts

செக் மோசடி வழக்கு: நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை

செக் மோசடி வழக்கு: நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை

23/07/2026
‘வாரண்ட்’ வெப் தொடரில் ஹீரோவாக அறிமுகமாகும் பிரசாந்த் பாண்டியராஜ்

‘வாரண்ட்’ வெப் தொடரில் ஹீரோவாக அறிமுகமாகும் பிரசாந்த் பாண்டியராஜ்

08/05/2026

“வெறுப்பை பரப்பும் Political IT Wing” – நிவேதா பெத்துராஜ் குற்றச்சாட்டு

21/03/2026

ஆஸ்கர் 2026: மகுடம் சூடிய ‘ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்’ – சிறந்த நடிகர் மைகேல் பி. ஜோர்டன்! முழு வெற்றியாளர் பட்டியல்

16/03/2026

ஜனநாயகன் பட மறு தணிக்கை திடீர் ஒத்திவைப்பு: வெளியீட்டுத் தேதியில் மாற்றம்?

09/03/2026

தெலங்கானா அரசின் 2025 ‘கத்தார்’ விருதுகள்: நாக சைதன்யா, ராஷ்மிகா, கமல்ஹாசனுக்கு உயரிய விருதுகள்!

08/03/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
  • மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்
  • டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக 100 சிக்சர்கள்:
  • அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:
  • சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved