Friday, March 6, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

தீபாவளி ரேஸில் வென்றது யார்? கோலிவுட்டில் புதிய வசூல் சக்கரவத்தி இவர்தான்!

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
04/11/2024
in சினிமா
0
தீபாவளி ரேஸில் வென்றது யார்? கோலிவுட்டில் புதிய வசூல் சக்கரவத்தி இவர்தான்!
0
SHARES
28
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

 தீபாவளி பண்டிகை என்றாலே பல படங்கள் திரையரங்குகளில் வெளியாவது வழக்கம். அந்த வகையில், இந்த வருடமும் பல திரைப்படங்கள் வெளியானது. தமிழில் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, கவின் ஆகியோர் நடித்துள்ள படங்கள் வெளியாக, தெலுங்கு மற்றும் இந்தி மொழியில் அம்மொழிகளின் முக்கிய ஹீரோக்கள் நடித்துள்ள படங்கள் வெளியாகிறது. இந்த ரேஸில் வெற்றி பெற்ற படங்களை காண்போம்.

ப்ளடி பெக்கர்

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தயாரிப்பில் வெளியாகியுள்ள முதல் படம் ப்ளடி பெக்கர். இந்தப் படத்தினை நெல்சன் திலீப்குமாரிடம் நீண்டகாலமாக உதவி இயக்குநராக பணியாற்றிய சிவபாலன் முத்துகுமார் ப்ளடி பெக்கர் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆகியுள்ளார். படத்தில் கவின் பிச்சைக்காரராக நடித்துள்ளார். உடல் மொழி, வசன உச்சரிப்பு, முக பாவணை என அனைத்திலும் ஸ்கோர் செய்துவிட்டார் கவின்.இருந்தும் கலவையான விமர்சனங்களை தான் இப்படம் பெற்றது பாக்ஸ் ஆபீஸிலும் படம் பெரிதாக ஜொலிக்கவில்லை என்பதே நிஜம்.

பிரதர்

AlsoRead

நடிகைகளின் உடலை ‘ஜூம்’ செய்யும் வீடியோக்கள்: ருக்மணி வசந்த், சப்தமி கௌடா கடும் கண்டனம்!

“எனது வீடு வெறும் கட்டிடம் அல்ல; மக்களின் அன்பால் நிறைந்த ஆலயம்!” – நடிகர் அமிதாப் பச்சன் நெகிழ்ச்சி

கேரளா ஸ்டோரி 2: தடை நீக்கம் – கேரள உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் என காமெடி ஜானரில் படங்கள் இயக்கி மக்கள் மனதில் இடம் பிடித்தவர் ராஜேஷ். அடுத்தடுத்து அவர் இயக்கிய படங்கள் சரியாக போகாத நிலையில் புதியதாக தற்போது ஜெயம் ரவியை வைத்து பிரதர் என்ற படத்தை இயக்கியுள்ளார். ஜெயம் ரவி, பிரியங்கா மோகன், பூமிகா உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் தான் இசை. பல புதிய படங்களுக்கு இடையில் இப்படமும் கடந்த அக்டோபர் 31ம் தேதி வெளியாகி இருந்தது. முதல் நாளில் ரூ. 2.5 கோடியும், இரண்டாம் நாளில் ரூ. 2.2 கோடியும் வசூல் ஆகியிருந்தது. மூன்றாம் நாளான சனிக் கிழமை முற்றிலும் சரிந்து ரூ. 1.9 கோடியும் வசூல் ஆனது. நான்காவது நாளான நேற்று ஓட்டுமொத்தமாகவே வெறும் ரூ.ஒரு கோடி மட்டுமே வசூல் ஆகியுள்ளது. இன்னும் படத்தின் அதிகாரப்பூர்வமான வசூல் குறித்து படக்குழு எதுவும் தெரிவிக்கவில்லை. வார இறுதி நாளிலேயே படத்தின் வசூல் இந்த அளவிற்கு குறைந்துள்ளதால், படக்குழு வருத்தத்தில் உள்ளது.

லக்கி பாஸ்கர்

நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் தீபாவளி பண்டிகைக்கு வெளிவந்த படம் தான் லக்கி பாஸ்கர். வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவான இப்படத்தில் துல்கர் சல்மானுடன் இணைந்து மீனாட்சி சவுத்ரி, ராம்கி ஆகியோர் நடித்திருந்தனர்.மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ள லக்கி பாஸ்கர் திரைப்படம் 3 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் 3 நாட்களில் ரூ. 40 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

அமரன்

 ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘அமரன்’. சோனி நிறுவனம், கமல்ஹாசன் மற்றும் மகேந்திரன் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படம் அனைத்து மொழிகளிலும் வெளியாகி இருக்கிறது.

மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையப்படுத்தி இப்படத்தை இயக்கி இருக்கிறார் ராஜ்குமார் பெரியசாமி.
தமிழக முதல்வர் ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பல்வேறு திரையுலகினர் படக்குழுவினரை வெகுவாக பாராட்டி இருக்கிறார்கள். பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியாகி விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்ற ‘அமரன்’ தற்போது வசூல் ரீதியாகவும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

அமரன் திரைப்படம் உலகளவில் முதல் நாளில் ரூ.42.3 கோடியை வசூலித்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்த நிலையில், இப்படம் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி உலகளவில் ரூ. 150 கோடி வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படம் 200 கோடிகளுக்கு மேல் வசூல் செய்யும் என எதிர்பார்க்கபடுகிறது. ரஜினி விஜய் அஜித் இவர்களுக்கு பிறகு மூன்றே நாளில் 100 கோடிக்கு மேல் வசூல் செய்த ஒரே நபர் சிவகார்த்திகேயன் தான். இவரை தற்போது கோலிவுட்டின் புதிய வசூல் சக்கரவர்த்தி என நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்

Tags: அமரன்கவின்சிவகார்த்திகேயன்துல்கர் சல்மான்பிரதர்ப்ளடி பெக்கர்லக்கி பாஸ்கர்ஜெயம் ரவி
Previous Post

‘பிளாக் ஹோல் டிரிபிள்’ அமைப்பு கண்டுபிடிப்பு!

Next Post

திண்டிவனத்தில் தனியார் பேருந்திற்கு பயணிகளை மாற்றிவிடும் அவலம்!

Related Posts

Rukmini Vasanth

நடிகைகளின் உடலை ‘ஜூம்’ செய்யும் வீடியோக்கள்: ருக்மணி வசந்த், சப்தமி கௌடா கடும் கண்டனம்!

03/03/2026
Amitabh Bachchan Jalsa House

“எனது வீடு வெறும் கட்டிடம் அல்ல; மக்களின் அன்பால் நிறைந்த ஆலயம்!” – நடிகர் அமிதாப் பச்சன் நெகிழ்ச்சி

03/03/2026

கேரளா ஸ்டோரி 2: தடை நீக்கம் – கேரள உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

28/02/2026

சர்வதேசத் தொடரை நிராகரித்த தீபிகா படுகோன்: ‘த ஒயிட் லோட்டஸ்’ வாய்ப்பை தவிர்த்தது ஏன்?

28/02/2026

‘தாய் கிழவி’ – பாசமும் பகையும் கலந்த நகைச்சுவை விருந்து!

27/02/2026

‘ஆண்பாவம் பொல்லாதது’ படக்குழுவினர் அண்ணாமலையார் கோயிலில் தரிசனம்

10/11/2025

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!
  • ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை: ராணுவம் அதிரடி உத்தரவு!
  • ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி
  • மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்
  • “எளிய தொண்டரை எம்.பி.யாக்கும் காங்கிரஸ்!” -கிறிஸ்டோபர் திலக் குறித்து செல்வப்பெருந்தகை பெருமிதம்

Recent Comments

  1. Pearl4024 on “தி.மு.க. அரசின் திட்டங்கள் மக்களிடம் பேசுபொருளாக மாறியுள்ளன”
  2. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved