Friday, March 6, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

அமெரிக்க அதிபர் தேர்தல் இந்தியாவிற்கு சொல்லும் செய்தி!

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
06/11/2024
in தலையங்கம்
0
அமெரிக்க அதிபர் தேர்தல் இந்தியாவிற்கு சொல்லும் செய்தி!
0
SHARES
87
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

ரொம்பவும் எதிர்பார்க்கப்பட்ட தேர்தல் ஒருவழியாக நடந்து முடிந்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலைபோல் உலக அளவில் எதிர்பார்க்கப்படகூடிய தேர்தல் வேறு எதுவும் இல்லை எனலாம். காரணம் அமெரிக்காத்தான் உலகின் பெரும்பாலான நாடுகளுக்கு கடன் கொடுக்கும் வட்டி கடை முதலாளியாக இருந்து வருகிறது. அத்துடன் உலகின் பெரும்பாலான நாடுகள் தங்களிடையேயான வர்த்தகத்திற்கு அமெரிக்க டாலர்களை நம்பி இருக்கின்றன. அதனால் நேரடியாகவோ. மறைமுகமாகவோ அமெரிக்க அரசியலில் ஏற்படும் எந்த மாற்றமும் உலகத்தை நேரடியாக பாதிக்கக்கூடியது.

தலையங்கம்

மற்ற நாடுகளுக்கும் அமெரிக்கவுக்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசமே அந்நாடு இரு கட்சி ஆட்சி முறை அமலில் உள்ள நாடு என்பதுதான். 30க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் அந்நாட்டில் இருந்தாலும், முக்கிய கட்சிகள் என்பது குடியரசு கட்சி அல்லது ஜனநாயக கட்சி ஆகிய இரண்டு மட்டுமே. இந்த இரு கட்சிகளில் ஒன்றுதான் வெற்றி பெற்று, அதன் வேட்பாளர் அதிபராக அமர்வார். அந்த கட்சியின் வெளியுறவு கொள்கைதான் அந்நாட்டின் அடுத்த 4 ஆண்டுகால ஆட்சி செல்லும் திசையை தீர்மானிக்கும்.

இந்த இரு கட்சிகளில் குடியரசுக்கட்சி வெளிப்படையான இந்திய ஆதரவு நிலைப்பாடுக்கொண்டது. ஜனநயாக கட்சி இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாடு கொண்டது. இதனால் ஜனநாயக கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் தருணங்களில் அமெரிக்கா ஆதரவு பாகிஸ்தான் பக்கம் சாய்வதும், அந்த காலகட்டங்களில் இந்தியாவிற்கு எதிரான பாகிஸ்தான் நடவடிக்கை அதிகரிப்பதும், உலகம் பலமுறை கண்டவை என்பது குறிப்பிடத்தக்கது. 

AlsoRead

அண்ணாமலையார் கோயிலில் 3 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்

மக்களை மிரட்டும் ஆன்லைன் மோசடி

அவசியம் தனிமனித ஒழுக்கம்!

இம்முறை ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிசும். குடியரசு கட்சி சார்பில்  டெனால்ட் டிரம்பும் போட்டியிட்டனர். கமலா ஹாரிஸ் அமெரிக்கவாழ் இந்தியர் என்று சொன்னாலும், அவர் கட்சி மட்டுமல்லாமல் அவரும் இந்திய எதிர்ப்பு மனநிலை கொண்டவர்தான். அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் அதிபராகியுள்ளார் என்று வேண்டுமானால் நாம் பெருமைப்பட்டுக் கொள்ளலாமே தவிர, இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாடுதான் அமெரிக்காவின் செயல்பாடாக இருக்கும். அதே சமயம் டெனால்ட் டிரம்ப் இந்திய ஆதரவாளர் என்பது மட்டுல்லாமல், தனிப்பட்ட முறையில் பிரதமர் மோடியின் மீது மிகுந்த அபிமானம் கொண்டவர். இதை அவரே வெளிப்படையாக தெரிவித்துள்ளார். எனவே டிரம்ப் அமெரிக்க அதிபராக வருவதுதான் இந்தியாவிற்கு நலன் பயக்கும் என்ற எதிர்பார்ப்பே மேலோங்கி இருந்தது.

கமலா ஹாரிஸ் வெற்றிபெற்றிருந்தால் அமெரிக்காவுடன் நல்லுறவுகளை தக்க வைத்துக்கொள்ளவே இந்தியா கடும் முயற்சிகளை மேற்கொள்ளவேண்டியிருந்திருக்கும். ஆனால் அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் கை ஓங்கியது இந்தியாவிற்கு நல்லதே என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். டிரம்ப் அதிபரானதால் தீவிரவாத எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளிலும் அமெரிக்காவின் ஆதரவு இந்தியாவிற்கு இருக்கும். மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் டிரம்புக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

Tags: தலையங்கம்
Previous Post

மயிலம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தரிசனம்!

Next Post

சென்னை மாநகராட்சி 31வது வார்டில் புதுப்பிக்கப்பட்ட பூங்கா திறப்பு!

Related Posts

அண்ணாமலையார் கோயிலில் 3 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்

அண்ணாமலையார் கோயிலில் 3 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்

09/02/2026
மக்களை மிரட்டும் ஆன்லைன் மோசடி

மக்களை மிரட்டும் ஆன்லைன் மோசடி

13/11/2024

அவசியம் தனிமனித ஒழுக்கம்!

08/11/2024

சமுதாய தலைவர்களின் கடமை

07/11/2024

காற்றில் பறக்கும் மேடை நாகரீகம்!

05/11/2024

வீட்டு பெண் பணியாளர்கள்: தனி கவனம் செலுத்துமா அரசு?

04/11/2024

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!
  • ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை: ராணுவம் அதிரடி உத்தரவு!
  • ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி
  • மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்
  • “எளிய தொண்டரை எம்.பி.யாக்கும் காங்கிரஸ்!” -கிறிஸ்டோபர் திலக் குறித்து செல்வப்பெருந்தகை பெருமிதம்

Recent Comments

  1. Pearl4024 on “தி.மு.க. அரசின் திட்டங்கள் மக்களிடம் பேசுபொருளாக மாறியுள்ளன”
  2. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved