Friday, March 6, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

திருவண்ணாமலையின் புதிய வரலாற்றைக் கூறும் சோழர் கால நடுகல் கல்வெட்டு கண்டுபிடிப்பு

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
16/12/2023
in செய்திகள், மாவட்டங்கள்
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் துணைத்தலைவரும்    கூடலூர் அரசு கலைக்கல்லூரி முதல்வர்  முனைவர் வே. நெடுஞ்செழியன் அவர்கள் அளித்த தகவலின் படி, திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தைச் சேர்ந்த ச. பாலமுருகன், முனைவர் எ.சுதாகர், பழனிசாமி, மதன்மோகன் ஆகியோர்கள் கூட்டாக ஆய்வு செய்ததில்,  திருவண்ணாமலை நகரம் திண்டிவனம் சாலையருகே அமைந்துள்ள வேடியப்பன் கோயிலில் நடுகல் கல்வெட்டு, முதலாம் பராந்தகன் கல்வெட்டு, எதிரே உள்ள சிலையில் ஒரு வரிகல்வெட்டு என மொத்தம் 3 கல்வெட்டுகள் கண்டறிப்பட்டன.

நடுகல்லின் பின்புறம் கிபி 928 ஆண்டில் எழுதப்பட்டுள்ள கல்வெட்டில், வரலாற்றுக்கு பல புதிய தகவல்கள் தரும் செய்திகள் கிடைத்துள்ளன. இதன்படி இன்றைக்கு 1093 ஆண்டுகள் பழமை உடையதாக இக்கல்வெட்டு விளங்குகிறது. இக்கல்வெட்டில் ஸ்ரீ பராந்தகன் இருமுடி சோழனுக்கும் அவரின் மனைவியும் இப்பகுதியை ஆட்சி செய்த சிற்றரசன் வைரமேக வாணகோவரையரின் மகள் செம்பியன் மாதேவிக்கும் பிறந்தவர் கண்டராதித்த சோழர் என்று கண்டாதித்தர் பிறப்பு பற்றி இக்கல்வெட்டு கூறுகிறது . இன்னும் தெளிவாக “செம்பியன் மாதேவியார் திருவயிற்றில் பிறந்த ஸ்ரீ கண்டராதிச்சன்” என்று இக்கல்வெட்டு கூறுகிறது. இதிலிருந்து பராந்தக சோழருக்கும் வைரமேக வாணகோவரையர் மகளுக்கும் பிறந்தவர் கண்டராதித்தர் என்பது தெளிவாக புலனாகிறது. இருப்பினும் திருக்கோவிலூர் அருகே உள்ள கரடி என்ற ஊரில் கிபி 947 இல் எழுதப்பட்டுள்ள முதலாம் பராந்தகன் கல்வெட்டு இவருக்கும் சோழ மாதேவி என்பவரும் மகனாகப் பிறந்தவர் கண்டராதித்தர் என்று கூறுகிறது. இதிலிருந்து செம்பியன் மாதேவி சோழ மாதேவி என்னும் பெயர்கள் ஒருவரையே சுட்டுகிறது என்று கருதலாம்.

மேலும்,  இக்கல்வெட்டு அண்ணாமலையாருக்கு மதிய உணவு பூஜை படையலின் அதே நேரத்தில் இருபது காபாலிக துறவிகளுக்கும் உணவு கொடுக்கப்பட வேண்டும் என்பதற்காக கண்டராதித்தர் வைச்சபூண்டி என்ற ஊர் முழுவதையும் துறவிகளுக்கு கொடுத்துள்ளார். இதன் மூலம் கண்டராதித்தர் காபாலிக சைவ வழி துறவிகளையும்  ஆதரித்துள்ளார் என்று அறிய முடிகிறது. காபாலிகளர்களின் ஆச்சாரியராக அதாவது குருவாக வல்லக்கொன்றை சோமீசுவரர் கங்காளபடாரர் என்பவர் இருந்துள்ளார். இவரும் இவருடைய சீடர் வாஜஸ்பதி வக்கானி படார முதலிகளும் இவருடைய சிஷ்யர்கள் மற்றும் இந்த சிஷ்யர்களின் சிஷ்யர்கள் ஆகியோரும் வைச்ச பூண்டி கிராமத்தில் இருந்து கிடைக்கும் வரி பொன் மற்றும் நிலங்களை அனுபவிக்க வேண்டும் என்றும் இக்கல்வெட்டு கூறுகிறது. இதிலிருந்து சைவத்தின் ஒரு பிரிவாக விளங்கிய காபாலிகம் காளாமுகம் ஆகியவை திருவண்ணாமலையில் பராந்தகன் காலத்தில் அரச ஆதரவு பெற்று சிறப்புடன் இருந்தது என்பதை அறிகிறோம். அப்பிரிவினை கண்டராதித்தர் ஆதரித்தார் என்பதையும் அறிகிறோம். வைச்ச பூண்டி கிராமத்தை காபாலிகர்களின் கையில் இருக்கும் கபால ஓட்டில் நீர் வார்த்து கண்டராதித்தர் தர்மமாக கொடுத்துள்ளார்.  காளாமுகம், காபாலிகம் ஆகிய சமய பிரிவுகள் திருவண்ணாமலை பகுதியில் பரவி விளங்கியதை இக்கல்வெட்டு உணர்த்துகிறது. கண்டராதித்த சோழர் வைரமேக வாணகோவரையர் குடும்பத்து இளவரசிக்கு பிறந்தவர் என்ற புதிய தகவலை இக்கல்வெட்டு கூறுகிறது. பராந்தக சோழருக்கு இருமுடி சோழன் என்ற பட்டம் இருந்தது என்பதை இக்கல்வெட்டால் அறிகிறோம்.

இந்த கல்வெட்டு அமைந்துள்ள நடுகல் சோழர்கால சிற்ப அமைதி கொண்ட நடுகல்லாகும். இதில் வீரன் தனது வலது கையில் குறுவாளும் இடது கையில் வில்லும் வைத்துக்கொண்டுள்ளார். வீரனின் தலையில் கரண்ட மகுடமும் காதில் பெரிய குண்டமும் இடுப்பில் கச்சை ஆடையும் வாள் உறையும் உள்ளது.  இரண்டு கால்களும் மடக்கி எதிரியை தாக்க ஓடுவது போல அழகுடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பத்திற்குக் கீழ் இரண்டு வரிக்கல்வெட்டு சிதைந்த நிலையில் உள்ளது. இதில் ஒருபத்தாவது புதநாட்பாடி நாட்டு… என்று எழுத்து மட்டும் படிக்கும் படி உள்ளது. மற்றவை பொரிந்துபோயுள்ளன.

இந்த கோயிலின் எதிரில் உள்ள சிறிய அளவு சிற்பத்தில் ஆண், பெண் என இரண்டு உருவாங்கள் உள்ளன. இந்த உருவாங்களின் மேல்புறத்தில் ஒரு வரி கல்வெட்டு காணப்படுகிறது. இந்த கல்வெட்டில் – ஸ்ரீமாஹேஸ்வர நம்பி என்று பொறிக்கப்பட்டுள்ளது. இந்த மாகேஸ்வர நம்பி என்பவர் சிவனின் பக்தராகலாம்.

இந்த கல்வெட்டைப் படித்தும் விளக்கம் அளித்த கல்வெட்டறிஞர்கள் சு. இராகோபால்  மற்றும் இல. தியாகராஜன், சு.ராஜவேல் ஆகியோர்கள் இந்த கல்வெட்டு அரிய புதிய செய்திகளைக் கொண்டிருக்கும் சிறப்பான கல்வெட்டும் என்றும் தெரிவித்தனர். திருவண்ணாமலை நகரிலே கிடைத்த இந்த நடுகல் கல்வெட்டும்  பின்புறம் உள்ள கல்வெட்டும், எதிரே உள்ள கல்வெட்டும் வெவ்வேறு காலத்தியது ஆகும். இந்த கல்வெட்டுகள் மூலம் திருவண்ணாமலை கோயில் வரலாறு பற்றியும் வைச சமயப் பிரிவான கபாலிகம், காளமுகம் பற்றியும், கண்டராதித்தன் பிறப்பு பற்றியும் குறிப்பிடும் சிறப்பான கல்வெட்டாகும்.  இந்த கல்வெட்டுகளை அரசு ஆவணப்படுத்தி பாதுகாக்கவேண்டும் என வரலாற்று ஆர்வலர் கோருகின்றனர்.

கல்வெட்டு

1.            ஸ்வஸ்தி ஸ்ரீ மதிரை கொ-

2.            ண்ட கோப்பரகேசரி பந்

3.            மற்க்கு யாண்டு 21 ஆவது

4.            அண்ணா நாட்டு திருவண்ணா-

5.            மலை மஹாதேவர்  மத்யான

6.            ம் அமிது செயும்போது உ-

AlsoRead

தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!

ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை: ராணுவம் அதிரடி உத்தரவு!

ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி

7.            ண்பதாக ஸ்ரீ பராந்தகன் இ-

8.            ருமுடி சோழன் மஹாதேவி-

9.            வயிரமேக வாணகோவரை-

10.          யர் மகளார் செம்பியன் ம-

11.          ஹாதேவியார் திருவயிற்றில்

12.          பிறந்த ஸ்ரீ கண்டராதிச்சன் இ

13.          ருபதின்மர் கபாலிகர் நெயிட்டி

14.          காக்கும் அவகளுக்கு ஆசார்ய்யராயுள்

15.          ள வல்லக் கொன்றை ஸோமீஸ்வர க-

16.          ங்காள படாரருடை சிஸ்யர் வாஜுஸபதி வ-

17.          க்காணி படாரர் முதலிகளார் அவருடைய சி-

18.          ஸ்ய ப்ரசிஸ்யர் ஆள்வதாக பொன்னும்பு

19.          கவுமடங்க குடுத்(வூர்) வைச்ச பூண்டி

20.          சந்திராதித்தவல் ஆள்வதாக கபா.

21.          லத்தட்டி குடுத்தேன் வல்லகொன்றை

22.          ஸ்ரீ[ப]டாரர்க்கு இவ்வூர்

Previous Post

நாட்டேரிகிராமத்தில்புதியகல்வெட்டுகள்

Next Post

தண்டராம்பட்டு அடுத்த தொண்டமானூரில் 5000  ஆண்டு பழமையான

Related Posts

Tamil Nadu Rajya Sabha Members

தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!

05/03/2026
Iran Navy

ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை: ராணுவம் அதிரடி உத்தரவு!

05/03/2026

ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி

05/03/2026

மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்

05/03/2026

“எளிய தொண்டரை எம்.பி.யாக்கும் காங்கிரஸ்!” -கிறிஸ்டோபர் திலக் குறித்து செல்வப்பெருந்தகை பெருமிதம்

05/03/2026

சென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. தர்மாதிகாரி நியமனம்

05/03/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!
  • ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை: ராணுவம் அதிரடி உத்தரவு!
  • ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி
  • மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்
  • “எளிய தொண்டரை எம்.பி.யாக்கும் காங்கிரஸ்!” -கிறிஸ்டோபர் திலக் குறித்து செல்வப்பெருந்தகை பெருமிதம்

Recent Comments

  1. Pearl4024 on “தி.மு.க. அரசின் திட்டங்கள் மக்களிடம் பேசுபொருளாக மாறியுள்ளன”
  2. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved