மாவட்ட போலீஸ் சூப்பரெண்டு உத்தரவு
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே நாளில் 423 போலீசார் பணியிட மாற்றம் செய்து எஸ்.பி கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.
லோக்சபா தேர்தல் தேதி பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் தேர்தல் கமிஷன் அறிவிக்கும் என எதிர்பாக்கப்படுகிறது. ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் அரசு அதிகாரிகளை இம்மாத இறுதிக்குள் பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
போலீஸ் துறையில் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிபவர்கள், சொந்த ஊரில் பணிபுரிந்தவர்கள் என முதல் நிலை போலீசார், முதல் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் வரை மொத்தம் 371 பேர் நேற்று முன் தினம் பணியிட மாற்றம் செய்து எஸ்பி கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.
போலீஸ் ஸ்டேசன்களில் உள்ள காலி பணியிடங்களுக்கு ஆயுதப்படை பிரிவிலிருந்து 52 போலீசார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் போலீஸ் துறையில் ஒரே நாளில் 423 போலீசார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது