ஜோலார்பேட்டையில் வழக்கறிஞரை தாக்கிய விவகாரத்தில் 8 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர் .
திருப்பத்துர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்து கோடியூர் பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்செல்வன் 48. இவர் திருப்பத்துர் ஒருங்கிணைத்த நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார் .இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பாரத கோவில் மீசைக்காரன் வட்டத்தை சேர்ந்த விஜி என்பவர், வழக்கறிஞர் தமிழ்செல்வனை தொடர்பு கொண்டு தனது வீட்டின் ஒரு பகுதியை சிலர் இடிப்பதாக தெரிவித்தனர்.
வழக்கறிஞர் தமிழ்ச்செல்வன் அங்கு சென்றார். அப்போது , அதே பகுதியை சேர்ந்த கண்ணதாசன் என்பவரும் வழக்கறிஞர் தமிழ்ச்செல்வனுக்கும் இடையே தகராறு எற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த கண்ணதாசன் உள்ளிட்ட சிலர் தமிழ்ச்செல்வனை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர் . இதில் காயம் அடைந்த தமிழ்செல்வன் திருப்பத்துர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ,
இது குறித்து தமிழ்செல்வன் கொடுத்த புகாரின் பேரில், ஜோலார்பேட்டை காவல் துறையினர் கண்ணதாசன் ,புஷ்பநாதன் ,ஜெயக்குமார் ,அன்பு மற்றும் கிருஷ்ணமூர்த்தி உட்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்