Friday, March 6, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

கடலூர் மாவட்டத்தில் புதிய திட்ட பணிகளுக்கு அமைச்சர் அடிக்கல்

Elumalai, Sub Editor by Elumalai, Sub Editor
07/02/2025
in மாவட்டங்கள்
0
கடலூர் மாவட்டத்தில் புதிய திட்ட பணிகளுக்கு அமைச்சர் அடிக்கல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

கடலூர் மாவட்டத்தில் புதிய திட்ட பணிகளுக்கு அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டினார்.

கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம், சொக்கன் ஓடை குறுக்கே ரூ.9 கோடி மதிப்பீட்டில் குச்சிப்பாளையம் ஒழுங்கியம் கட்டும் பணிக்கு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டினார்.

இதனைத்தொடர்ந்து  மஞ்சக்குப்பம் முதல் குண்டுஉப்பலவாடி கிராமம் வரை, பெண்ணயாற்றின் வலது கரையில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் நிரந்தர வெள்ளத் தடுப்பு பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

இதில் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் மற்றும் கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்ததாவது:         

சிதம்பரத்தில் உள்ள சொக்கன் ஓடை வாய்க்காலின் கடைமடையில் தண்ணீரை தேக்கி பாசனத்திற்கு பயன்படுத்துவதற்கும், வெள்ள காலங்களில் வெள்ளநீரை வெளியேற்றியும் மற்றும் உப்பனாற்றிலிருந்து கடல்நீர் வாய்க்காலில் உட்புகாமல் இருக்க ஷட்டருடன் கூடிய ஒழுங்கியம் அமைப்பது மற்றும் கரையை மண் கொண்டு பலப்படுத்துவது அவசியமாகிறது.

சொக்கன் ஓடையின் கடைமடை பகுதியில் ஒழுங்கியம் அமைத்துதர பொதுமக்கள் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் ரூ.9 கோடி மதிப்பீட்டில் சொக்கன் ஓடை குறுக்கே குச்சிப்பாளையம் ஒழுங்கியம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

இவ்வொழுங்கியம் கட்டுவதன் மூலம் 1450 ஏக்கர் விவசாய நிலங்கள் உகந்தமுறையில் பாசனவசதி பெறும். மேலும் உப்புநீர் உட்புகுதல் தடுக்கப்படும் மற்றும் நிலத்தடிநீர் மேம்பட்டு சுமார் 5300 மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக பயன்பெறும் வகையில் அமையும்.

AlsoRead

ஓட்டப்பிடாரம் திமுக எம்எல்ஏ சண்முகையாவின் சகோதரர் கார் விபத்தில் படுகாயம்: மதுரையில் பரபரப்பு!

அய்யா வைகுண்டர் அவதார தினம்: “சமத்துவக் கனலை விதைத்தவர்” – முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில் பொங்கல் விழா: லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்று கின்னஸ் சாதனை!

பெண்ணையாற்றில் பாதிப்பு ஏற்படுத்தும் பகுதிகளில் முதற்கட்டமாக மஞ்சக்குப்பம் முதல் குண்டு உப்பலவாடி கிராம் வரை நபார்டு வங்கி திட்டத்தின் கீழ் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் 160 மீ ஆர்.சி.சி தடுப்புச்சுவர் அமைக்கும் பணி, 575 மீ  சரிவுச்சுவர் அமைக்கும் பணி, நகரம் மற்றும் கிராமங்களில் பெய்கின்ற மழைநீர் வடிவதற்கு வடிகால் மதகு அமைத்தல், 2100 மீ பெண்ணையாற்றின் வலது புற கரையினை பலப்படுத்தும் பணி, ஆற்றின் உட்பகுதியில் உள்ள மண்திட்டுகளை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் சுந்தரிராஜா, துணை மேயர் பா.தாமரைச்செல்வன், மாநகராட்சி ஆணையாளர் மரு.எஸ்.அனு சார் ஆட்சியர் (சிதம்பரம்) சீ.கிஷன் குமார் நீர்வளத்துறை செயற்பொறியாளர்கள் காந்தரூபன், அருணகிரி, கிள்ளை பேரூராட்சி தலைவர் மல்லிகா உட்பட அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags: arunaitamizhCuddalore NewsTamilnadu News
Previous Post

திருவண்ணாமலையில் ஒன்றிய பட்ஜெட் நகலை கிழித்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Next Post

தமிழகத்தில் இயல்பைவிட வெப்பநிலை அதிகரிக்கும் : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Related Posts

திமுக எம்எல்ஏ சண்முகையாவின் சகோதரரான முருகேசன்

ஓட்டப்பிடாரம் திமுக எம்எல்ஏ சண்முகையாவின் சகோதரர் கார் விபத்தில் படுகாயம்: மதுரையில் பரபரப்பு!

05/03/2026
Ayya Vaikundar Avathar Day

அய்யா வைகுண்டர் அவதார தினம்: “சமத்துவக் கனலை விதைத்தவர்” – முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

04/03/2026

ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில் பொங்கல் விழா: லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்று கின்னஸ் சாதனை!

03/03/2026

நாங்குநேரி இரட்டை கொலை: 7 இளைஞர்கள் அதிரடி கைது! 9 பேர் கொண்ட கும்பல் நடத்திய வெறிச்செயல் – முழு பின்னணி

03/03/2026

செஞ்சி அருகே கிணற்றில் கார் பாய்ந்து விபத்து: வழக்கறிஞர் உள்பட 4 பேர் உயிரிழப்பு

03/03/2026

‘எடப்பாடியின் பொய்ப்பிரசாரம் தமிழ்நாட்டில் எடுபடாது’

21/02/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!
  • ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை: ராணுவம் அதிரடி உத்தரவு!
  • ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி
  • மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்
  • “எளிய தொண்டரை எம்.பி.யாக்கும் காங்கிரஸ்!” -கிறிஸ்டோபர் திலக் குறித்து செல்வப்பெருந்தகை பெருமிதம்

Recent Comments

  1. Pearl4024 on “தி.மு.க. அரசின் திட்டங்கள் மக்களிடம் பேசுபொருளாக மாறியுள்ளன”
  2. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved