Friday, March 6, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

1,912 தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து நலப்பெட்டகத்தை வழங்கிய ஆட்சியர்

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
15/11/2024
in செய்திகள், மாவட்டங்கள்
0
1,912 தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து நலப்பெட்டகத்தை வழங்கிய ஆட்சியர்

கடலூரில் 1,912 தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து நலப்பெட்டகத்தை ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் வழங்கினார்.

0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

அரியலூர் மாவட்டத்தில் ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தின் இரண்டாம் தொகுப்பை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார், சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன், மாநகராட்சி மேயர் சுந்தரிராஜா, மாநகராட்சி துணைமேயர் தாமரைச்செல்வன் ஆகியோர் முன்னிலையில் 1,912 தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து நகப்பெட்டகத்தை ஆட்சியர் வழங்கினார்.

AlsoRead

தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!

ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை: ராணுவம் அதிரடி உத்தரவு!

ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பேசியதாவது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், 0-6 வயது வரையுள்ள குழந்தைகளில் பலரும் ஊட்டச்சத்து குறைபாடுள்ளவர்களாக இருப்பதைத் தெரிந்துகொண்டு, மருத்துவ உதவி தேவைப்படும் குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ உதவியும், ஊட்டச்சத்து தேவைப்படும் குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து திட்டமும் அறிவித்து, ஊட்டச்சத்தை உறுதி செய் என்னும் இந்த திட்டத்தின் செயல்பாடுகளை தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தின் வாயிலாக முதல் வயதுடைய குழந்தைகளின் ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் வியக்கத்தக்க அளவில் முன்னேற்றம் அடைந்துள்ளது. ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளில் 77.3% குழந்தைகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர்.

தற்போது தொகுப்பாக குழந்தைப்பெற்ற தாய்மார்களின் ஆரோக்கியத்தினை பாதுகாக்கவும் ஊட்டச்சத்து குறைபாட்டிளை நீக்கி வலிமை பெற்றவர்களாகவும், ஆராக்கியமானவர்களாகவும் சுகாதாரம் பேணுதல், தூய்மையான குடிநீர், சுற்றுப்புறத் தூய்மை குறித்த நல்ல பழக்கவழக்கங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திட “ஊட்டச்சத்தை உறுதி செய்” என்னும் இரண்டாம் கட்ட தொகுப்பினை அரியலூர் மாவட்டத்தில்  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  துவக்கி வைத்துள்ளார்.

அதனடிப்படையில் கடலூர் மாவட்டத்தில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களாக கண்டறியப்பட்ட 1,912 தாய்மார்களுக்கு புரோட்டீன் பவுடர், பேரீச்சம்பழம், நெய், காட்டன் துண்டு, சத்துமாவு, இரும்புச்சத்து டானிக் உட்பட 7 பொருட்கள் அடங்கிய தாய்சேய் நலப்பெட்டகங்கள் வழங்கப்பட்டன.

பிறப்பு முதல் 6 மாதம் வரையிலான குழந்தைகளுக்கு திட உணவு வேறு ஏதுமின்றி தாய்ப்பால் மட்டுமே வழங்கப்படுவதால் தாய்மார்களின் ஆரோக்கியத்தை பேணுவது அத்தயாவசியமாகிறது. 0-6 மாதத்திற்குட்பட்ட குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையின் படி, மாநிலம் முழுவதும் 26,215 குழந்தைகள் கடும் ஊட்டச்சத்து குறைபாட்டிலும், 50,490 குழந்தைகள் மிதமான ஊட்டச்சத்து குறைபாட்டிலும் உள்ளனர் என கண்டறியப்பட்டுள்ளது.

குழந்தைகளை வளர்ப்பதில் பெற்றோரின் பங்கு அளப்பறியது. அதிலும், தாயின் உடல் நலனை காப்பது இன்றியமையாதது. குழந்தை கருவில் உருவான நாள் முதற்கொண்டு அருகிலுள்ள குழந்தைகள் மையங்களில் பதிவுசெய்து, அங்கு அளிக்கப்பட்டுவரும் சேவைகளை தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார்.

Tags: அரியலூர்
Previous Post

திருவண்ணாமலை பள்ளி மாணவிகளுக்கு நடந்தது என்ன? ஆசிரியர்கள் மீது பகீர் குற்றச்சாட்டு

Next Post

சேத்துப்பட்டு அருககே 7யூனிட் ஆற்று மணலை பதுக்கி வைத்த மணல் கொள்ளையர்கள் !

Related Posts

Tamil Nadu Rajya Sabha Members

தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!

05/03/2026
Iran Navy

ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை: ராணுவம் அதிரடி உத்தரவு!

05/03/2026

ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி

05/03/2026

மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்

05/03/2026

“எளிய தொண்டரை எம்.பி.யாக்கும் காங்கிரஸ்!” -கிறிஸ்டோபர் திலக் குறித்து செல்வப்பெருந்தகை பெருமிதம்

05/03/2026

சென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. தர்மாதிகாரி நியமனம்

05/03/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!
  • ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை: ராணுவம் அதிரடி உத்தரவு!
  • ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி
  • மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்
  • “எளிய தொண்டரை எம்.பி.யாக்கும் காங்கிரஸ்!” -கிறிஸ்டோபர் திலக் குறித்து செல்வப்பெருந்தகை பெருமிதம்

Recent Comments

  1. Pearl4024 on “தி.மு.க. அரசின் திட்டங்கள் மக்களிடம் பேசுபொருளாக மாறியுள்ளன”
  2. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved