Thursday, July 23, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

அரசுப் பள்ளி மாணவிகள் பாலியல் புகார்:உதவி தலைமையாசிரியர் பணியிடைநீக்கம்!

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
30/10/2024
in செய்திகள், மாவட்டங்கள்
0
அரசுப் பள்ளி மாணவிகள் பாலியல் புகார்:உதவி தலைமையாசிரியர் பணியிடைநீக்கம்!

உதவி தலைமை ஆசிரியர் உதயகுமாரை போக்ஸோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

பேரணாம்பட்டு அருகே அரசு உயர்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த பாஸ்மார்பெண்டா மலை கிராமத்தில் அரசினர் உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது.  இந்தப் பள்ளியில் ஆறாம் வகுப்பிலிருந்து ஒன்பதாம் வகுப்பு வரை சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் உதவி தலைமை ஆசிரியர் உதயகுமார், மாணவ, மாணவிகளிடம் கடுமையான முறையில் அடித்து துன்புறுத்தி வருவதாக கூறப்படுகிறது. 

AlsoRead

“ஆணவம் அழிவிற்கு வழி!” – அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

‘மின் வாகன பேட்டரிகளை முடக்கும் ஆபத்து’ – 7 செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடை!

40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு – சென்னை முதல் நெல்லை வரை பரபரப்பு!

இந்நிலையில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சில மாணவிகளிடம் உதவி தலைமை ஆசிரியர் உதயகுமார் சில்மிஷமாக நடந்து கொள்வதும், தவறான வார்த்தைகளை பயன்படுத்தி பேசுவதாகவும் மாணவிகள் கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளனர். இதனை அந்த கிராமத்தில் உள்ள சில ஊர் பெரியவர்களுக்கு தெரியவந்ததை அடுத்து, மாணவிகளின் பெற்றோர்களை வைத்து மாவட்ட ஆட்சியருக்கு தெரியப்படுத்தியதாக கூறப்படுகிறது.  அதன் அடிப்படையில் வேலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், குடியாத்தம் கோட்டாட்சியர் சுப்பு லட்சுமி தலைமையில் மாணவிகளிடம் விசாரணை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் துறையினர் பாஸ்மார்பெண்டா கிராமத்திற்கு சென்று மாணவிகளிடமும் பெற்றோர்களிடமும் விசாரணை செய்தனர். 

அவர்களின் நடத்திய விசாரணை அடிப்படையில், வழக்கு பதிவு செய்து உதவி தலைமை ஆசிரியர் உதயகுமாரை போக்ஸோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் நேற்று தலைமை ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் ஆசிரியர்களுடையே பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Tags: வேலூர்வேலூர் மாநகராட்சிவேலூர் மாவட்டம்
Previous Post

துணை முதல்வர் வருகை முன்னேற்பாடு:ஆட்சியர் தலைமையில் ஆலோசனை

Next Post

ரூ.138.41 கோடி மதிப்பில் புதிய கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டடம் அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

Related Posts

Anitha Radhakrishnan Arrest

“ஆணவம் அழிவிற்கு வழி!” – அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

03/07/2026
Electric Vehicle Safety

‘மின் வாகன பேட்டரிகளை முடக்கும் ஆபத்து’ – 7 செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடை!

03/07/2026

40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு – சென்னை முதல் நெல்லை வரை பரபரப்பு!

03/07/2026

மக்களே உஷார்! ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ள புதிய விதிகள், கட்டண உயர்வுகள்! என்னென்ன தெரியுமா?

03/07/2026

“மரணத்தைவிட கொடியது புறக்கணிப்பு” – எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதி அதிமுகவிலிருந்து விலகினார் வைகைச்செல்வன்!

03/07/2026

“திமுகவை விட்டு விலக போலீஸார் கட்டாயப்படுத்தினர்” – கைதான அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு பேட்டி!

03/07/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • “ஆணவம் அழிவிற்கு வழி!” – அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!
  • ‘மின் வாகன பேட்டரிகளை முடக்கும் ஆபத்து’ – 7 செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடை!
  • 40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு – சென்னை முதல் நெல்லை வரை பரபரப்பு!
  • மக்களே உஷார்! ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ள புதிய விதிகள், கட்டண உயர்வுகள்! என்னென்ன தெரியுமா?
  • “மரணத்தைவிட கொடியது புறக்கணிப்பு” – எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதி அதிமுகவிலிருந்து விலகினார் வைகைச்செல்வன்!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved