Thursday, April 23, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

பொருளாதாரத்தில் 5-வது இடத்தில் இந்தியா:மத்திய அமைச்சர் எல்.முருகன் பெருமிதம்!

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
25/10/2024
in செய்திகள், மாவட்டங்கள்
0
பொருளாதாரத்தில் 5-வது இடத்தில் இந்தியா:மத்திய அமைச்சர் எல்.முருகன் பெருமிதம்!

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம், பள்ளி உளவியலில் ஆய்வு நோக்கங்கள் என்ற தலைப்பிலான சர்வதேச கருத்தரங்கு நடைபெற்றது.

0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

திருவாரூரில் இந்திய பள்ளி உளவியல் சங்கத்துடன் இணைந்து தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம், பள்ளி உளவியலில் ஆய்வு நோக்கங்கள் என்ற தலைப்பிலான சர்வதேச கருத்தரங்கு நடைபெற்றது. இந்திய சமூக அறிவியல் ஆய்வு கவுன்சில் ( ஐசிஎஸ்எஸ்ஆர்) நிதியுதவியுடன் நடைபெறும் இந்த கருத்தரங்கு வரும் 26 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பல்வேறு சமூக – பொருளாதார மொழி மற்றும் பலதரப்பட்ட கல்வி நிறுவனங்களில் பயின்று வரும் மாணவர்களின் மனோ – சமூக சவால்களை குறித்து இந்தக் கருத்தரங்கில் விவாதிக்கப்படுகிறது. 

இந்த கருத்தரங்கை மத்திய தகவல் ஒளிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் டாக்டர் எல். முருகன் தொடங்கி வைத்தார்.  மனநல விழிப்புணர்வு மற்றும் உள்ளடக்கிய கல்வி நடைமுறைகளை நாடு முழுவதும் மேற்கொண்டு வரும் பல்கலைக்கழகம் மற்றும் சங்கத்தின் செயல்பாடுகளை அமைச்சர் பாராட்டினார்.  2047 ஆம் ஆண்டில் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட மத்திய அரசின் சாதனைகளை அமைச்சர் மேற்கோள் காட்டினார். 

2013ம் ஆண்டில் பொருளாதாரத்தில் பத்தாவது இடத்தில் இருந்த இந்தியா 2024 ஆம் ஆண்டில் ஐந்தாவது இடத்தில் உள்ளது எனவும், 2027 ஆம் ஆண்டில் மூன்றாவது இடத்தை அடைய நாம் முன்னேறி வருகிறோம் என தெரிவித்தார். கல்வித்துறையில் மத்திய அரசு பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளதாக தெரிவித்த அவர், எய்ம்ஸ் மருத்துவமனையில் எண்ணிக்கையை 23 ஆக உயர்த்தி உள்ளதாவும், கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு புதிய பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தேசிய கல்விக் கொள்கையின் மூலம் கல்வியும் கல்வித்துறையில் உள் கட்டமைப்புகளும் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே வருவதாக கூறினார். 

மேலும்  தேசத்தின் எதிர்காலத்தை வடிவமைத்தலில் முக்கிய பங்கு வகிக்கும் பள்ளி உளவியல் மூலம் ஒருங்கிணைந்த கல்வி சூழலை உறுதி செய்வதற்கான முக்கியப்படியாக இந்த கருத்தரங்கம் திகழ்வதாக மத்திய அமைச்சர் பாராட்டினார்.  தொடர்ந்து சிறப்புரையாற்றிய மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் கிருஷ்ணன், மாணவர்களை உணர்வு பூர்வமாகவும் கல்வியில் சிறந்து விளங்கவும் பள்ளி உளவியலாளர்கள் முக்கிய பங்கு வகிப்பதாக தெரிவித்தார். மேலும் ஆசிரியர்கள் இரு பெரும் சவால்களை சந்தித்து வருகின்றனர் என தெரிவித்தார்.

AlsoRead

ஈரானை அழிக்க அமெரிக்கா மிரட்டல்: “உயிரையும் தருவோம்” – அதிபர் மசூத் பெசஷ்கியான் ஆவேசம்!

கீழ்பென்னாத்தூர்: தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வேட்புமனு தாக்கல்

பாஜக தலைவர்களே பதில் சொல்வார்களா? – நிதி ஒதுக்கீடு முதல் FCRA வரை முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி!

மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவது போல அவர்களின் மன ஆரோக்கியத்தையும் உறுதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் ஆசிரியர்கள் உள்ளனர். இன்றைய தொழில்நுட்பம் வளர்ச்சி பெற்ற உலகில் இது போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் இந்த கருத்தரங்கு நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். மூன்று நாள் நடைபெறும் இந்த கருத்தரங்கில் சென்னை பல்கலைக்கழக பேராசிரியர் கருணாநிதி, அராப் அமெரிக்க பல்கலைக்கழக பேராசிரியர் வேல் எம். எஃப் அபுகாசன், தாய்லாந்தில் உள்ள அசம்ப்சன் பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் பார்வதி வர்மா ஆகியோர், மாணவர்களின் மன ஆரோக்கியம், பள்ளி உளவியலில் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு ஆகியவற்றில் நிபுணர்கள் தங்களது அனுபவம் மற்றும் ஆராய்ச்சி ஆகியவற்றை பகிர்ந்துள்ளனர்.

விழாவில் பேராசிரியர் வித்யா வரவேற்புரையும், பேராசிரியர் சீனிவாசன் நன்றியுரையும் வழங்கினார்.இவ்விழாவில் பதிவாளர் திருமுருகன், நிதி அலுவலர் கிரிதரன் தேர்வு கட்டுப்பாட்டாளர் பேராசிரியர் சுலோச்சனா சேகர், நூலகர் பரமேஸ்வரன் மற்றும் மூத்த பேராசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Tags: தமிழ்நாடுதிருவாரூர்திருவாரூர் மாவட்டம்
Previous Post

விருத்தாசலத்தில் பள்ளி மாணவர்களுக்கான வட்டாரக் கலைத் திருவிழா!

Next Post

மலர் தூவி வரவேற்பு :கோமுகி அணையிலிருந்து 100 கன அடி தண்ணீர் திறப்பு!

Related Posts

Trump Netanyahu Conflict

ஈரானை அழிக்க அமெரிக்கா மிரட்டல்: “உயிரையும் தருவோம்” – அதிபர் மசூத் பெசஷ்கியான் ஆவேசம்!

07/04/2026
Pichandi, TN Elections 2026

கீழ்பென்னாத்தூர்: தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வேட்புமனு தாக்கல்

06/04/2026

பாஜக தலைவர்களே பதில் சொல்வார்களா? – நிதி ஒதுக்கீடு முதல் FCRA வரை முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி!

06/04/2026

தமிழக தேர்தல் 2026: எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இன்று வேட்புமனு தாக்கல்!

06/04/2026

தந்தைக்காக வழிவிட்ட மகன்: ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிடப்போவதில்லை என வினோத் காந்தி அறிவிப்பு!

06/04/2026

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல்: 234 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியல்

05/04/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • ஈரானை அழிக்க அமெரிக்கா மிரட்டல்: “உயிரையும் தருவோம்” – அதிபர் மசூத் பெசஷ்கியான் ஆவேசம்!
  • கீழ்பென்னாத்தூர்: தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வேட்புமனு தாக்கல்
  • பாஜக தலைவர்களே பதில் சொல்வார்களா? – நிதி ஒதுக்கீடு முதல் FCRA வரை முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி!
  • தமிழக தேர்தல் 2026: எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இன்று வேட்புமனு தாக்கல்!
  • பேட்டரி துறையில் புரட்சி: கண்ணிமைக்கும் நேரத்தில் சார்ஜ் ஆகும் ‘குவாண்டம் பேட்டரி’!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved