Thursday, July 23, 2026
35 °c
Tiruvannamalai
31 ° Fri
32 ° Sat
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

இந்தியாவின் முதல் பெண் ஆசிரியை சாவித்ரி புலே

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
03/01/2024
in இந்தியா
0
இந்தியாவின் முதல் பெண் ஆசிரியை சாவித்ரி புலே
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

இந்தியாவின் முதல் பெண் ஆசிரியை சாவித்ரி புலே பிறந்த தினம் இன்று அந்தப்பெண் தினமும் இரண்டு புடவைகளைத் தன்னோடு எடுத்துக்கொண்டு தனது பணிக்குக் கிளம்புவாள். ஏனெனில், அவள் தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்ததுமே, வழி நெடுகிலும் சில ஆண்கள் சாணத்தையும் சேற்றையும் மண்ணையும் வாரி வாரி அவள் மீது வீசுவார்கள். அவற்றை அமைதியாக எதிர்கொண்டு தனது பள்ளிக்கு வந்ததும், புடவையை மாற்றிக்கொள்வாள்.

அவள் செய்த குற்றம்தான் என்ன?

கல்வியின் அவசியத்தை உணர்ந்து, பெண்களுக்கும் கல்வி கற்பித்தாள். விதவை என முடக்கப்பட்ட சிறுமிக்குப் புதுப்பாதை காட்டினாள். அனைவரும் சமம் என்று மனிதத்தை தூக்கிப்பிடித்தாள். அவளே இந்தியாவின் முதல் பெண் ஆசிரியை, சாவித்ரி புலே.

மராட்டிய மாநிலத்தில் 1831-ம் ஆண்டு பிறந்த சாவித்ரி, தனது பத்தாவது வயதில் ஜோதிராவ் என்பவருக்கு மனைவி ஆனார். அவர் கணவரும் அவரின் நண்பர்களும் சேர்ந்து அகமதாபாத்தில் மிஸ்.பாரார் கல்வி நிலையத்திலும், பிறகு புனேவில் உள்ள மிஸ்.மிட்செல் கல்வி நிலையத்திலும் சாவித்ரியைப் படிக்கவைத்தனர். 1848-ம் ஆண்டு தம்பதியர் இருவரும் இணைந்து பெண்களுக்கென முதல் பள்ளியை உருவாக்கினர். அவர்களுக்கென 1863-ம் ஆண்டு தனி நூலகத்தையும் நிறுவினர். கல்வி பணியோடு நில்லாமல் சமுதாயப் பணிகளையும் மேற்கொண்டனர்.

சிறுவயதில் கணவனை இழந்தப் பெண்களுக்கும் சிறுவயதிலே பாலியல் வன்முறைக்கு ஆளான பெண்களுக்கும் ஆதரவு அளித்தனர். அதற்கென தனியாக இல்லம் ஒன்றைத் தொடங்கினர். பெண் குழந்தைகளை சிசுக் கொலையிலிருந்து மீட்டு எடுத்தனர்.

குழந்தைத் திருமணத்தை எதிர்த்தனர். சாதியின் பெயர் சொல்லித் தாழ்த்தப்பட்ட பெண்களுக்குக் கல்வி அளித்தனர். விதவை மறுமணம், சாதிக் கலப்புத் திருமணம் என அனைத்து சமுதாயத் சீர்திருத்தங்களுக்கும் குரல் கொடுத்தனர்.புனித செயலுக்கு அவர்களுக்குக் கிடைத்தது பூங்கொத்தோ, வாழ்த்துகளோ அல்ல. சமுதாயம் புறக்கணித்தது. அவர்கள் உறவினர்களால் வீட்டைவிட்டுத் துரத்தி அடிக்கப்பட்டார்கள்.

கேட்க இயலாத வசைச் சொற்களை வீசினர். எங்கும் கல்வீச்சு அவர்களை வரவேற்றது. அதற்கெல்லாம் சாவித்ரி புலே புன்னகையை மட்டுமே தந்தார். ‘கல்வி என்னும் புனிதத்தை உலகத்துக்கு வழங்கும் எனக்கு, இந்தக் கற்கள் மலர்களாகவே தோன்றுகின்றன’ என்றார். தொடர்ந்தது சமுதாயப் பணியாற்றினார் சாவித்திரி புலே.

“கல்வி என்பது இது சரி இது தவறு என்று ஆராயும் திறனைத் தரவேண்டும். அது மெய்யும் பொய்யும் உணரவைக்க வேண்டும்’ என்ற கோட்பாட்டின் மூலம் புது பாடத்திட்டத்தை அன்றைய மராட்டிய அரசுக்குப் பரிந்துரைத்தார். திருமணங்களின்போது பெண்ணை படிக்கவைப்பேன் என்று மாப்பிள்ளையை மணமேடையில் உறுதிமொழி எடுக்கவைத்தார். அவர் எழுதிய நூல்களும் கவிதைகளும் இன்றளவும் சமூகத்தின் காயங்களுக்கு மருந்து அளித்து வருகின்றன.

1897-ல் இந்தியாவில் பிளேக் பரவிய காலகட்டத்தில் நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்துவந்து சிகிச்சை அளித்தார். இதனால் அந்த நோய் சாவித்ரியையும் தொற்றிக்கொண்டது. மார்ச்- 10,1897-ம் ஆண்டு பிரியா விடைபெற்றார்.

AlsoRead

நீட் வினாத்தாள் கசிவு குறித்து விரிவான விவாதத்திற்கு அரசு தயார்: எதிர்க்கட்சிகள் அவையை முடக்க வேண்டாம்

‘மின் வாகன பேட்டரிகளை முடக்கும் ஆபத்து’ – 7 செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடை!

மக்களே உஷார்! ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ள புதிய விதிகள், கட்டண உயர்வுகள்! என்னென்ன தெரியுமா?

பெண்கள் வீட்டைவிட்டு வெளியே வருவதே குற்றமாக கருதப்பட்ட காலத்தில், தன் கணவனின் இறுதி சடங்கைத் தானே செய்யும் கம்பீரத்தைப் பெற்றவர். ஓர் சமுதாயத்தின் பிழையைத் திருத்தும் போராளியான இவர், வாள் இல்லா வீராங்கனை ஆசிரியராகப் பலரது தலை எழுத்தை மாற்றியவர்.

குரு, மாதா, பிதா என்று பலருக்கும் உதாரணமாக வாழ்ந்து காட்டியவர். இத்தகைய திடப் பேராண்மைகொண்ட ஆசானை, வழிகாட்டியை, விடிவெள்ளியை மறந்தது காலத்தின் கொடுமை. பெண் உருவில் அவர் அற்புதத்தை நிகழ்த்தவில்லை; அற்புதமே பெண்ணாக உருவானது.

Tags: அனைவரும் சமம்சாவித்ரி புலேமுதல் பெண் ஆசிரியை
Previous Post

பாரதிதாசன் பல்கலைகழக பட்டமளிப்பு விழா எஸ்.கே.பி. கல்லூரி நிர்வாக இயக்குநர் பங்கேற்பு

Next Post

வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள்

Related Posts

நீட் வினாத்தாள் கசிவு குறித்து விரிவான விவாதத்திற்கு அரசு தயார்: எதிர்க்கட்சிகள் அவையை முடக்க வேண்டாம்

நீட் வினாத்தாள் கசிவு குறித்து விரிவான விவாதத்திற்கு அரசு தயார்: எதிர்க்கட்சிகள் அவையை முடக்க வேண்டாம்

23/07/2026
Electric Vehicle Safety

‘மின் வாகன பேட்டரிகளை முடக்கும் ஆபத்து’ – 7 செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடை!

03/07/2026

மக்களே உஷார்! ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ள புதிய விதிகள், கட்டண உயர்வுகள்! என்னென்ன தெரியுமா?

03/07/2026

மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஷிற்கு பிரதமர் மோடி புகழாரம்: நாடாளுமன்ற உரையின் முக்கிய அம்சங்கள்!

03/07/2026

இந்தியா – ஜப்பான் கூட்டு: ரூ.35,000 கோடியில் மாருதி சுசூகி கார் ஆலை தொடக்கம்

03/07/2026

டெல்லி இந்தி அகாடமி விருதுகள் அறிவிப்பு: வாஜ்பாய், சாவர்க்கர் பெயர்களில் புதிய விருதுகள்!

12/06/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • ‘ஜனநாயகன்’ கொண்டாட்டத்தில் அரசு மூழ்கியுள்ளது:
  • நீட் வினாத்தாள் கசிவு குறித்து விரிவான விவாதத்திற்கு அரசு தயார்: எதிர்க்கட்சிகள் அவையை முடக்க வேண்டாம்
  • “ஆணவம் அழிவிற்கு வழி!” – அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!
  • ‘மின் வாகன பேட்டரிகளை முடக்கும் ஆபத்து’ – 7 செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடை!
  • 40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு – சென்னை முதல் நெல்லை வரை பரபரப்பு!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved