Monday, June 8, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

நாலாயிர திவ்ய பிரபந்த இசை விரைவில் வெளியீடு இளையராஜா அறிக்கை

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
06/01/2024
in செய்திகள்
0
நாலாயிர திவ்ய பிரபந்த இசை விரைவில் வெளியீடு இளையராஜா அறிக்கை
0
SHARES
35
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

நாலாயிர திவ்ய பிரபந்தத்திற்கு இசையமைத்து முடித்து விட்டதாகவும், அதை வெளியிடும் சந்தர்ப்பத்திற்கு காத்திருப்பதாகவும், இசை அமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார்.
ஜெயசுந்தர் எழுதிய, ஆண்டாள் திருப்பாவையை விவரிக்கும், ‘மால்யதா’ என்ற ஆங்கில நுால், நேற்று முன்தினம் சென்னையில் வெளியிடப்பட்டது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட, அதன் முதல் பிரதியை, இளையராஜா பெற்றுக் கொண்டார்.

இளையராஜா பேசியதாவது

நான் சிவபக்தன். நான் எதற்கும் எதிரி அல்ல. என் தந்தை ராமசாமி, வைணவத்தில் தீவிரமாக இருந்தவர். அந்த விட்ட குறையோ தொட்ட குறையோ இங்கே வந்திருக்கிறேன். திருவாசக இசையமைத்து ஒலிப்பதிவு செய்தது போல, நாலாயிர திவ்யபிரபந்தத்திற்கும் இசையமைத்து, ஒலிப்பதிவு செய்து வைத்திருக்கிறேன். சரியான சந்தர்ப்பத்தில் வெளியிட காத்திருக்கிறேன்.

மாதம் 30 நாட்களும் எனக்கு முழுமையாக இருக்கும். காலையில் ஒரு பாடல்; மாலையில் ஒரு பாடல். காலை, 7 மணி முதல் பகல் 1 மணி வரை ஒரு ‘கால்ஷீட்’ இருக்கும். இப்போதெல்லாம் கால்ஷீட் கிடையாது. இரவு, பகலாக வேலை செய்கின்றனர். ஒரு பாடலுக்கு இசையமைத்து முடிக்க 6 மாதங்கள் ஆகின்றன. ஒரு ஆண்டு எடுத்துக் கொண்டு சாதனை படைப்பவர்களும் இருக்கின்றனர். யாரையும் சொல்வதற்காக இதை சொல்லவில்லை.

ஒரே நாளில் 3 பாடல்களுக்கு இசையமைத்து உள்ளேன். 3 நாட்களில் 3 திரைப்படங்களுக்கு பின்னணி இசையை முடித்துக் கொடுத்திருக்கிறேன். இப்படி இசையமைத்தவர்கள் உலகில் யாரும் இல்லை. ஓய்வுக்காக பவுர்ணமி தினத்தில், கோடி சுவாமியை தரிசிக்க செல்வேன். கன்னியாகுமரி கடற்கரையில் பித்து பிடித்தது போல திரிந்து கொண்டிருக்கும் மாயம்மா என்பவரையும் தரிசிப்பேன்.

AlsoRead

“பாஜகவிலிருந்து விலக இதுதான் காரணம்” – அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!

“அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – நயினார் நாகேந்திரன் பேச்சு

கேரளாவின் கடன் ரூ.5.07 லட்சம் கோடி: பினராயி விஜயன் – வி.டி. சதீசன் இடையே அரசியல் மோதல்!

திருவண்ணாமலை வந்து, காட்டுப் பாதையில் கிரிவலம் செல்வேன். 20 ஆண்டுகளுக்கும் மேலாக, ஒரு மாதமும் தவறாமல் காட்டுப்பாதையில் வெறும் காலில் கிரிவலம் சென்று வருகிறேன். அண்ணாமலை கோவிலில் சிவனை தரிசிக்கும் போது சொல்ல முடியாத உணர்வும், அமைதியும் ஆட்கொள்ளும்.

திருவண்ணாமலை சென்று வந்தபின் ஒரு நாள் வீட்டில் உறங்கி எழுந்ததும் திடீரென 10 நிமிடங்களில் 10 பாடல்கள் எழுதினேன். அடுத்த நாள் 10 பாடல்கள் எழுதினேன். எனக்குள் வந்தது எழுதினேன். இதுபற்றி புலவர் நமச்சிவாயத்திற்கு போன் செய்து 20 பாடல்கள் எழுதியதைச் சொன்னேன்.

‘மாணிக்கவாசகரும், 20 பாடல்கள் தான் எழுதினார். அவர் எழுதிய திருப்பள்ளியெழுச்சி பாடல்களையும் சேர்த்து திருவெம்பாவை என மார்கழியின், 30 நாட்களும் பாடுகின்றனர். நீங்களும் திருப்பள்ளியெழுச்சி எழுதி விடுங்கள்’ என்றார்.அதன்பின், அடுத்த நாளே திருப்பள்ளியெழுச்சி, 10 பாடல்கள் எழுதினேன். இப்படி நானும் திருவெம்பாவை எழுதினேன். இதை இதுவரை நான் எங்கும் சொன்னதில்லை இவ்வாறு அவர் பேசினார்.

Tags: இசை வெளியீடுஇளையராஜா அறிக்கைதிருவண்ணாமலைநாலாயிர திவ்ய பிரபந்தம்
Previous Post

பொங்கலுக்கு ரீலீஸ் ஆகுமா லால் சலாம்?

Next Post

உத்ராயண புண்ணியகால பிரம்மோற்சவம்

Related Posts

annamalai

“பாஜகவிலிருந்து விலக இதுதான் காரணம்” – அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!

05/06/2026
Annamalai

“அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – நயினார் நாகேந்திரன் பேச்சு

05/06/2026

கேரளாவின் கடன் ரூ.5.07 லட்சம் கோடி: பினராயி விஜயன் – வி.டி. சதீசன் இடையே அரசியல் மோதல்!

04/06/2026

டெல்லி ஓட்டலில் பயங்கர தீ விபத்து: வெளிநாட்டினர் உட்பட 21 பேர் பரிதாப பலி – விதிமீறல்களே காரணமா?

04/06/2026

ஆரணி தாலுகா அலுவலகத்தில் முடங்கிய பணிகள்: சான்றிதழ்கள் கிடைக்காமல் பொதுமக்கள், விவசாயிகள் கடும் அவதி!

04/06/2026

“மீண்டும் வெற்றிச் சரித்திரம் எழுதுவோம்! உதயசூரியன் ஒளியால் இருள் விலகும்” – கலைஞர் பிறந்தநாளில் மு.க.ஸ்டாலின் சூளுரை!

03/06/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • “பாஜகவிலிருந்து விலக இதுதான் காரணம்” – அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!
  • “அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – நயினார் நாகேந்திரன் பேச்சு
  • கேரளாவின் கடன் ரூ.5.07 லட்சம் கோடி: பினராயி விஜயன் – வி.டி. சதீசன் இடையே அரசியல் மோதல்!
  • டெல்லி ஓட்டலில் பயங்கர தீ விபத்து: வெளிநாட்டினர் உட்பட 21 பேர் பரிதாப பலி – விதிமீறல்களே காரணமா?
  • ஆரணி தாலுகா அலுவலகத்தில் முடங்கிய பணிகள்: சான்றிதழ்கள் கிடைக்காமல் பொதுமக்கள், விவசாயிகள் கடும் அவதி!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved