முதலமைச்சருக்கு நன்றி
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதுணையாக நின்ற இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோருக்கு பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் சார்பில் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் சார்பாக இதயம் கணிந்த நன்றி.
சென்னையில் மிக்ஜாம் புயல், தொடர் பெருமழை என இயற்கை பேரிடரில் பாதிக்கப்பட்ட பத்திரிகையாளர்கள், ஊடகவியாளர்களுக்கு நிவாரண உதவிகள் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்றோம். கோரிக்கை கிடைத்த உடனே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 500 பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் Branded Rain Court இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதய ஸ்டாலின் ரூ.26 கிலோ அரிசி, தரமான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு ஆகியவற்றை வழங்கியமைக்கு மன்ற இணைச் செயலாளர் பாரதி அன்பு நன்றி தெரிவித்துள்ளார்.
இதற்கு உறுதுணையாக நின்ற இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோரின் முயற்சியால் நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
“ஏழையில் சிரிப்பில் இறைவனைக் காண்போம் ” என்றார் பேரறிஞர் அண்ணா!
கிட்டத்தட்ட ஒவ்வொருவருக்கும் ரூ.9 ஆயிரத்திற்கு மேல் மதிப்புள்ள நிவாரண உதவிகளை வழங்கி கிறிஸ்துமஸ், புத்தாண்டை கொண்டாட்ட மனநிலையை இன்றைக்கே ஏற்படுத்தியது பெரும் மகிழ்ச்சியும், நிறைவும் தந்துள்ளது.
மேலும் நிவாரண உதவிகள் பெறுவதில் விடுபட்ட வர்களுக்கும் கூட உரிய நிவாரண உதவிகள் வழங்கிட உதவுகிறேன் என்று தனது உரையில் மிகப் பெரிய அன்பை ஆதரவை அள்ளிக் கொடுத்து சென்றார் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் என்று அந்த நன்றி அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.