Thursday, April 23, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

ரூ.190.40 கோடியில் 18 திருக்கோயில்களில் 25 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
13/11/2024
in செய்திகள், தமிழ்நாடு
0
ரூ.190.40 கோடியில் 18 திருக்கோயில்களில் 25 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்

ரூ.190.40 கோடியில் 18 திருக்கோயில்களில் 25 புதிய திட்டப்பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

 ரூ.190.40 கோடியில் 18 திருக்கோயில்களில் 25 புதிய திட்டப்பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 190 கோடியே 40 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 18 திருக்கோயில்களில் 25 புதிய திட்டப் பணிகள் மற்றும் 4 அலுவலகக் கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டி, 42 கோடியே 75 இலட்சம் ரூபாய் செலவில் 15 திருக்கோயில்களில் 25 முடிவுற்ற திட்டப் பணிகள் மற்றும் 2 அலுவலகக் கட்டடங்களை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற வரலாற்று சிறப்புமிக்க திட்ட செயலாக்கம், 2,268 திருக்கோயில்களில் குடமுழுக்கு, திருத்தேர்களை பழுதுபார்த்து வீதிஉலா, திருக்குளங்களை புனரமைத்தல், பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்குதல், திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுத்தல், அன்னதானத் திட்டம் விரிவாக்கம், மலைத் திருக்கோயில்கள் மற்றும் முக்கிய திருக்கோயில்களில் மருத்துவ மையங்கள் அமைத்தல், புதிய கல்வி நிறுவனங்கள் தொடக்கம், ஒருகால பூஜை திட்டம் விரிவாக்கம், துறையின் செயல்பாடுகளை கணினிமயமாக்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றத்திலிருந்து இந்து சமய அறநிலையத்துறை வாயிலாக சீரிய முறையில் செயல்படுத்தி வருவதோடு, சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட புதிய அறிவிப்புகளும் தொடர்ந்து நிறைவேற்றபட்டு வருகின்றன.

18 திருக்கோயில்களில் 25 புதிய திட்டப் பணிகள் மற்றும் 4 அலுவலகக் கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டுதல் :

மதுரை மாவட்டம், அழகர்கோயில், அருள்மிகு கள்ளழகர் திருக்கோயிலில் 49.25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பெருந்திட்ட வளாக மேம்பாட்டு பணிகள் மற்றும் பணியாளர் குடியிருப்பு கட்டும் பணிகள்; திருவண்ணாமலை, அருள்மிகு அருணாச்சலேசுவரர் திருக்கோயிலில் 44.57 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பெருந்திட்ட வளாக மேம்பாட்டு பணிகள், குபேரலிங்கம் அருகில் வணிக வளாகம் கட்டும் பணி, கோபுரங்கள் மற்றும் விமானங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கும் பணி மற்றும் ஏழு தீர்த்த குளங்களை சீரமைக்கும் பணிகள்; தண்டராம்பட்டு வட்டம், வானாபுரம், அருள்மிகு பிள்ளையார் மாரியம்மன் திருக்கோயிலில் 5.63 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய திருமண மண்டபம் கட்டும் பணி:

திருவண்ணாமலை, அருள்மிகு நந்தவக் கட்டளையில் 1.07 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய வணிக வளாகம் கட்டும் பணி: திருச்சிராப்பள்ளி மாவட்டம், சமயபுரம், அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் 25.62 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பெருவள வாய்க்கால் இருபுற கரைகளிலும் திருக்கோயில் வாகன நிறுத்துமிடத்திற்கு செல்ல சாலைகள் அமைத்தல், தடுப்புச்சுவர் கட்டுதல், புதிதாக திருக்கோயில் நுழைவுவாயில் அமைக்கும் பணி, கோபுரங்கள் மற்றும் விமானங்களை வண்ண விளக்குகளால் அங்கரிக்கும் பணிகள்; நாகப்பட்டினம் மாவட்டம், துளசியாபட்டினம், அருள்மிகு ஔவையார் மற்றும் விஸ்வநாத சுவாமி திருக்கோயிலில் 18.95 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஔவையார் மணி மண்டபம் கட்டும் பணி;

கோயம்புத்தூர் மாவட்டம், மருதமலை, அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 6.90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேற்கொள்ளும் பணி; கருமத்தம்பட்டி, அருள்மிகு சென்னியாண்டவர் திருக்கோயிலில் 2.29 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய ஐந்து நிலை இராஜகோபுரம் அமைக்கும் பணி; திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர், அருள்மிகு கொண்டத்துக்காளியம்மன் திருக்கோயிலில் 5.40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய திருமண மண்டபம் கட்டும் பணி; திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி, அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 3.80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னையில் இருந்து திருப்பதிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கான தங்கும் விடுதி கட்டும் பணி;

ஈரோடு மாவட்டம், கொடுமுடி, அருள்மிகு சடையப்பசுவாமி திருக்கோயிலில் 3.80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய கருங்கல் முன் மண்டபம் கட்டும் பணி; பெருந்துறை வட்டம், தங்கமேடு, அருள்மிகு தம்பிகலை ஜயன் சுவாமி திருக்கோயிலில் 1.10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய அன்னதானக் கூடம் கட்டும் பணி; பண்ணாரி, அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் திருக்கோயிலில் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 3 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டும் பணி;

AlsoRead

ஈரானை அழிக்க அமெரிக்கா மிரட்டல்: “உயிரையும் தருவோம்” – அதிபர் மசூத் பெசஷ்கியான் ஆவேசம்!

கீழ்பென்னாத்தூர்: தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வேட்புமனு தாக்கல்

பாஜக தலைவர்களே பதில் சொல்வார்களா? – நிதி ஒதுக்கீடு முதல் FCRA வரை முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி!

திண்டுக்கல் மாவட்டம், கீரனூர், அருள்மிகு வாகீஸ்வரர் திருக்கோயிலில் 3.80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய திருமண மண்டபம் கட்டும் பணி; செங்கல்பட்டு மாவட்டம், அரசர்கோயில், அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயிலில் 2.42 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய ஐந்து நிலை இராஜகோபுரம் கட்டும் பணி; சென்னை, திருவல்லிக்கேணி, அருள்மிகு தீர்த்தபாலீஸ்வரர் திருக்கோயிலில் 2.35 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்நோக்கு மண்டபம் கட்டும் பணி; நாமக்கல் மாவட்டம், வளப்பூர் நாடு, அருள்மிகு அறப்பளீஸ்வரர் சுவாமி திருக்கோயிலில் 2.10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய மூன்று நிலை இராஜகோபுரம் அமைக்கும் பணி; கூவைமலை, அருள்மிகு பழனியாண்டவர் திருக்கோயிலில் 1.35 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுற்றுபிரகார கல் மண்டபம் கட்டும் பணி;

தூத்துக்குடியில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மண்டல இணை ஆணையர் அலுவலகம் கட்டும் பணி; திருநெல்வேலியில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மண்டல இணை ஆணையர் அலுவலகம் கட்டும் பணி; கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் 1.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உதவி ஆணையர் அலுவலகம் கட்டும் பணி; கிருஷ்ணகிரியில் 1.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உதவி ஆணையர் அலுவலகம் கட்டும் பணி; என மொத்தம் 190.40 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 29 புதிய திட்டப் பணிகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.

15 திருக்கோயில்களில் 25 முடிவுற்ற திட்டப் பணிகள் மற்றும் 2 அலுவலகக் கட்டடங்களை திறந்து வைத்தல் :

கோவை மாவட்டம், மருதமலை, அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 4.39 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள சீரமைக்கப்பட்ட திருக்கோயில் மலைபாதை, மலைமேல் யாகசாலை மற்றும் திருக்கோயில் அடிவார நுழைவாயில்; மேட்டுப்பாளையம், அருள்மிகு வனபத்ரகாளியம்மன் திருக்கோயிலில் 1.79 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள படித்துறை, 1000 லிட்டர் திறன் கொண்ட மூன்று நீர் சுத்திகரிப்பு நிலையங்கள், குழந்தைகளுக்கு பாலூட்டும் அறை மற்றும் சேவார்த்திகள் தங்கும் விடுதி;

நாகப்பட்டினம் மாவட்டம், சிக்கல், அருள்மிகு நவநீதேஸ்வரசுவாமி திருக்கோயிலில் 1.07 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய வணிக வளாகம்; திருச்சிராப்பள்ளி மாவட்டம், சமயபுரம், அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் 4.63 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள அமாவாசை மண்டபம் மற்றும் குங்குமம் தயாரிக்கும் கூடம்; மயிலாடுதுறை மாவட்டம், திருப்புங்கூர், அருள்மிகு சிவலோகநாதர் திருக்கோயிலில் 3.20 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய திருமண மண்டபம்;

திருவண்ணாமலை மாவட்டம், அ.கோ.படைவீடு, அருள்மிகு ரேணுகாம்பாள் திருக்கோயிலில் 3.65 கோடி ரூபாய் செலவில் புதிய திருமண மண்டபம் மற்றும் செயல் அலுவலர் அலுவலகம்; காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர், அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் 2.95 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய திருமண மண்டபம்; கடலூர் மாவட்டம், திருவந்திபுரம், அருள்மிகு தேவநாதசுவாமி திருக்கோயிலில் 2.80 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய திருமண மண்டபம்; சிவகங்கை மாவட்டம், திருப்புவனம், அருள்மிகு அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்ரகாளியம்மன் திருக்கோயிலில் 2.73 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள வணிக வளாகம், பக்தர்கள் தங்கும் விடுதி மற்றும் வாகன நிறுத்துமிடம்;

கரூர் மாவட்டம், தாந்தோன்றிமலை, அருள்மிகு கல்யாண வெங்கடரமண சுவாமி திருக்கோயிலில் 2.09 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள முடி காணிக்கை மண்டபம்; விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர், அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயிலில் 1.95 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள வணிக வளாகம்; திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு, அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயிலில் 1.54 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள வணிக வளாகம் மற்றும் வாகன நிறுத்துமிடம்;

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், தானிப்பாடி, அருள்மிகு பிள்ளையார் மற்றும் மாரியம்மன் திருக்கோயிலில் 76 லட்சம் ரூபாய் செலவில் புதிய வணிக வளாகம்; கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், அருள்மிகு காளிகாம்பாள் காமாட்டீஸ்வரர் திருக்கோயிலில் 76 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள மலர் வணிக வளாகம்; ஈரோடு மாவட்டம், சென்னிமலை, அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் 61 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய வணிக வளாகம்;

நாகப்பட்டினத்தில் 4.18 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த மண்டல இணை ஆணையர் அலுவலகம்; சேலத்தில் 3.65 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த மண்டல இணை ஆணையர் அலுவலகம்; என மொத்தம் 42.75 கோடி ரூபாய் செலவிலான 27 முடிவுற்ற திட்டப் பணிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், இ.ஆ.ப., சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.சந்தரமோகன்,1இ.ஆ.ப., இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என். ஸ்ரீதர், இ.ஆ.ப., கூடுதல் ஆணையர் டாக்டர் இரா.சுகுமார், இ.ஆ.ப., தலைமைப் பொறியாளர் பொ.பெரியசாமி, இணை ஆணையர் பொ.ஜெயராமன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

திருவண்ணாமலையிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, மாவட்ட ஆட்சித் தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன், இ.ஆ.ப., அருள்மிகு அருணாச்சலேசுவரர் திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் இரா. ஜீவானந்தம் மற்றும் உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Previous Post

நவ.20ல் திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம்

Next Post

வேலூரில் வாக்காளர் பட்டியலில் இருந்து 1.23 லட்சம் பேர் நீக்கம்

Related Posts

Trump Netanyahu Conflict

ஈரானை அழிக்க அமெரிக்கா மிரட்டல்: “உயிரையும் தருவோம்” – அதிபர் மசூத் பெசஷ்கியான் ஆவேசம்!

07/04/2026
Pichandi, TN Elections 2026

கீழ்பென்னாத்தூர்: தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வேட்புமனு தாக்கல்

06/04/2026

பாஜக தலைவர்களே பதில் சொல்வார்களா? – நிதி ஒதுக்கீடு முதல் FCRA வரை முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி!

06/04/2026

தமிழக தேர்தல் 2026: எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இன்று வேட்புமனு தாக்கல்!

06/04/2026

தந்தைக்காக வழிவிட்ட மகன்: ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிடப்போவதில்லை என வினோத் காந்தி அறிவிப்பு!

06/04/2026

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல்: 234 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியல்

05/04/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • ஈரானை அழிக்க அமெரிக்கா மிரட்டல்: “உயிரையும் தருவோம்” – அதிபர் மசூத் பெசஷ்கியான் ஆவேசம்!
  • கீழ்பென்னாத்தூர்: தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வேட்புமனு தாக்கல்
  • பாஜக தலைவர்களே பதில் சொல்வார்களா? – நிதி ஒதுக்கீடு முதல் FCRA வரை முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி!
  • தமிழக தேர்தல் 2026: எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இன்று வேட்புமனு தாக்கல்!
  • பேட்டரி துறையில் புரட்சி: கண்ணிமைக்கும் நேரத்தில் சார்ஜ் ஆகும் ‘குவாண்டம் பேட்டரி’!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved