Monday, September 7, 2026
36 °c
Tiruvannamalai
32 ° Tue
32 ° Wed
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

குழந்தைகளுக்கு தமிழ் பெயர் மட்டுமே சூட்டுங்கள்! 31 இணையர்களுக்கு திருமணம் நடத்தி வைத்த முதலமைச்சர்  பேச்சு!

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
21/10/2024
in செய்திகள், தமிழ்நாடு
0
குழந்தைகளுக்கு தமிழ் பெயர் மட்டுமே சூட்டுங்கள்! 31 இணையர்களுக்கு திருமணம் நடத்தி வைத்த முதலமைச்சர்  பேச்சு!
0
SHARES
14
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

சென்னை திருவான்மியூரில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 31 ஜோடிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருமணம் நடத்தி வைத்தார். இன்று திருமணம் நடந்த 31 ஜோடிகளுக்கும் தலா ரூ.60,000 மதிப்பிலான பொருட்கள் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சீர்வரிசையாக வழங்கப்பட்டன.

தமிழ்நாடு முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நேற்று 304 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. அறநிலையத்துறை சார்பில் மணப்பெண்ணுக்கு 4 கிராம் எடை தங்கத் தாலி, தம்பதிகளுக்கு கட்டில், மெத்தை, பீரோ உள்பட ரூ.60,000 மதிப்பில் சீர்வரிசைகள் வழங்கப்பட்டன. சென்னை திருவான்மியூரில் 31 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்து, புதுமணத் தம்பதிகளுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

முதலமைச்சராக அறநிலையத்துறை நிகழ்ச்சியில் தான் அதிகமாக கலந்து கொள்கிறேன். அமைச்சர் சேகர்பாபு சீரிய முயற்சியோடு, 31 இணையர்களுக்கு திருமணம் நடத்தி வைக்கக் கூடிய இந்த நிகழ்ச்சியில், கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தக்கூடிய வாய்ப்பை பெற்றதற்கு மகிழ்ச்சியடைகிறேன். இந்து அறநிலையத்துறை மட்டுமல்லாமல், அனைத்து துறைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து நாங்கள் கலந்து கொள்வது உண்டு. கடந்த 3 ஆண்டுகளில் இந்த துறையில் சார்பில் அமைச்சர் சேகர்பாபு முயற்சியோடு பல்வேறு சாதனைகளை செய்துகொண்டு இருக்கிறோம். 

திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, கோயில்கள் பழமை மாறாமல் புதுப்பிக்க மாநில அளவில் ஒரு வல்லுநர் குழுவை அமைத்தோம். அவர்கள் தரும் ஆலோசனையின்படி, அந்த பணியை தொடர்ந்து நாம் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். கடந்த 3 ஆண்டுகளில் 2,226 கோயில்களில் குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது. ரூ.6,792 கோடி மதிப்புள்ள கோயில் நிலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு முழுவதும் 10,638 கோயில்களில் திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன. ரூ.1,103 கோடி நன்கொடை கிடைத்துள்ளது. தமிழில் குடமுழுக்கு, தமிழில் அர்ச்சனை, அனைத்து சாதி அர்ச்சகர் என முத்தாய்ப்பான பல திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. கோயில்களில் அன்னதானம் திட்டம் மூலம் நாள்தோறும் 92,000 பேர் பசியாறுகின்றனர். கடந்த ஆட்சியில் செயல்படுத்தப்படாமல் இருந்த தங்க முதலீடு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருகிறோம். 

AlsoRead

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

அறநிலையத்துறை செயல்பாடுகளை உண்மையான பக்தர்கள் பாராட்டுகின்றனர். பக்தியை பகல் வேஷ அரசியலுக்கு சிலர் பயன்படுத்துகின்றனர். அரசின் சாதனைகளை தடுக்கவே வழக்குகளை தொடர்கின்றனர். அனைவரின் உரிமைகளை காக்கும் அரசாக திமுக அரசு விளங்குகிறது.

முன்பெல்லாம், ‘பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க’ என்று வாழ்த்துவார்கள். ஆனால் இன்று ‘அளவோடு பெற்று வளமோடு வாழ்க’ என்றே வாழ்த்துகிறார்கள். இன்றைக்கு நாடாளுமன்ற தொகுதிகளெல்லாம் குறைகிறது என்ற நிலை வந்துள்ளதால், நாமும் 16 குழந்தைகளை பெற்றுக் கொள்ளலாமே என்று சொல்லும் நிலைமையும் வந்துள்ளது. உங்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழ் பெயர்களை மட்டுமே சூட்டுங்கள் ”

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

Tags: arunai tamilarunai thamizharunaitamizhதமிழ் பெயர் மட்டுமே சூட்டுங்கள்முதலமைச்சர்முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Previous Post

அறிவியல் மற்றும் பல்திறன் கண்காட்சி!அனைவரையும்கவர்ந்த  பிரம்மாண்டமாக விண்கலம் அரங்கம்!

Next Post

3 சதவீத அகவிலைப்படி உயர்வு : முதல்வருக்கு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் நன்றி

Related Posts

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

18/08/2026
அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

18/08/2026

சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

16/08/2026

கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை வேண்டும்

16/08/2026

அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

16/08/2026

மணிப்பூரில் முடக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளை திறக்க இரு தரப்பினரும் இணைந்து செயல்பட வேண்டும்

16/08/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
  • மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்
  • டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக 100 சிக்சர்கள்:
  • அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:
  • சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved