Thursday, July 23, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

சில கட்சிகளுக்கு எப்போதுமே கலவர சிந்தனை தான்: அரசியல் லாபத்துக்காக சிலர் பிரிவுகளையும் பிளவுகளையும் ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள்

முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு குற்றச்சாட்டு

admin by admin
08/12/2025
in செய்திகள், தமிழ்நாடு
0
சில கட்சிகளுக்கு எப்போதுமே கலவர சிந்தனை தான்: அரசியல் லாபத்துக்காக சிலர் பிரிவுகளையும் பிளவுகளையும் ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள்
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

‘ஒரு சிலர். அரசியல் லாபத்திற்காக பிரிவுகளையும், பிளவுகளையும் உண்டாக்குகின்றனர்,’ என்று திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மதுரை உத்தங்குடியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் ரூ.17 கோடி மதிப்பில் 7 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், ரூ.3 ஆயிரத்து 65 கோடியில் 63 முடிவுற்ற திட்டப் பணிகளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கியும் வைத்தார். மேலும். 2 ஆயிரத்து 70 கோடி மதிப்பிலான முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது; மக்களுக்காக பல திட்டங்களை நம் அரசு கொண்டு வந்ததால் தான், எதிர்க்கட்சிகள் என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்கின்றனர். வயிற்று எரிச்சலால் ஆரோக்கியமற்ற அரசியல் சூழ்ச்சிகளை செய்து பார்க்கிறார்கள். நாம் வளர்ச்சி அரசியலைப் பேசினால், அவர்கள் வேறு அரசியலை பேசுகிறார்கள். உறுதியாக சொல்கிறேன், அவர்கள் எத்தனை சூழ்ச்சி செய்தாலும், அனைத்தையும் முறியடிப்போம்.

AlsoRead

“ஆணவம் அழிவிற்கு வழி!” – அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

‘மின் வாகன பேட்டரிகளை முடக்கும் ஆபத்து’ – 7 செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடை!

40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு – சென்னை முதல் நெல்லை வரை பரபரப்பு!

மதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியல் அதை நிரூபிக்கும் விதமாக, ரூ.36,660 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்துள்ளேன். இதுதான் எங்களின் அரசியல், 10 ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு அறிவித்த எய்ம்ஸ் மருத்துவமனை என்னாச்சு? குஜராத் போன்றபாஜ ஆளும் மாநிலங்களுக்கு நிதியை கொட்டிக் கொடுக்கிறார்கள். ஆனால், தமிழகத்திற்கு எதும் செய்வதில்லை.

மதுரைக்கு மெட்ரோ ரயிலை சப்பையான காரணங்கள் சொல்லி நிராகரிக்கிறார்கள். பாஜ ஆளும் மாநிலங்களில் மெட்ரோ ரயிலுக்கு அனுமதி கொடுத்தீர்கள் மதுரையில் மெட்ரோ ஓடக் கூடாதா?
நம்முடைய சிந்தனை எல்லாம் தமிழகத்தின் வளர்ச்சியைப் பற்றி தான் ஆனால் சில கட்சிகளுக்கு எப்போதுமே கலவர சிந்தனை தான் தேவையில்லாத பிரச்னைகளை கிளப்பி, வளர்ச்சியை தடுக்கப் பார்க்கிறார்கள்.

காலம் காலமாக கார்த்திகை தீபத்திற்கு திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் தீபம் ஏற்றுவது போல கடந்த 3ம் தேதி மாலை 6 மணிக்கு பால் தீபம் ஏற்றப்பட்டது. அதன்பிறகு. அதே நேரத்தில் உச்சிப்பிள்ளையார் கோயில் தீபமண்டபத்தில் தீபம் ஏற்றி, சுவாமி புறப்பாடாகியது.

இது எல்லாம் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சிறப்பாக செய்யப்பட்டது. இது எல்லாம் உள்ளூர் மக்களுக்கு நன்றாக தெரியும்.

அவர்கள் எல்லாம் நல்லபடியாக தரிசனம் செய்து விட்டு வீடு திரும்பினர். ஆனால், இப்போது என்ன பிரச்னை நடந்து கொண்டிருக்கிறது. இந்தப் பிரச்னையை கிளப்பும் கூட்டத்தின் நோக்கம் என்ன? இதுவும் மக்களுக்கு நன்கு தெரியும்.

ஆன்மிகம் என்பது மன அமைதியை, நிம்மதி தந்து மக்களை ஒற்றுமையாக இருக்க வைக்க வேண்டும். நாலு பேருக்கு நல்லது செய்ய வேண்டும்.

இதுதான் உண்மையான ஆன்மிகமாக இருக்க முடியும். ஒரு சிலர் அரசியல் லாபத்திற்காக உண்டாக்குகின்றனர். இது கேடுகெட்ட அரசியல் தீபம் எங்கு. எப்போது ஏற்ற வேண்டுமோ, அங்கு வழக்கம் போல சரியாக, முறையாக ஏற்றப்பட்டு இருக்கிறது.

3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்களில் குடமுழுக்கு செய்துள்ளது இந்த அரசு இப்படிப்பட்ட அரசை ஆன்மிகத்திற்கு எதிரி என்று சொன்னால், சொல்பவர்களின் உள்நோக்கம் என்ன என்பது உண்மையான பக்தர்களுக்கு நன்கு தெரியும்.

டெல்லியில் இருந்து நமக்கு எத்தனை இடையூறுகள் கொடுத்தாலும், நிதி நெருக்கடிகளை ஏற்படுத்தினாலும், கவர்னர் மூலம் முட்டுக்கட்டை போட்டாலும், எல்லாவற்றையும் மீறி. இந்தியாவிலேயே நம்பர் மாநிலமாக பொருளாதார வளர்ச்சியை தமிழகம் அடைத்திருக்கிறது. எங்களின் வளர்ச்சி பயணத்தை உங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. நீங்கள் எப்படி பந்து வீசினாலும், நாங்கள் அடிப்பது சிக்சர் தான்.

அந்த டீமுக்கு பழைய அடிமைகள், புதிய அடிமைகள், பி டீம், சி டீம் சிக்கலாம் ஆனால், அந்தத் தொடரில் தாங்கள் தான் சாம்பியன் வரும் 15ம் தேதி முதல் விடுபட்ட மகளிருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப் போகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags: குற்றச்சாட்டுமதுரைமுதல்வர் ஸ்டாலின்
Previous Post

திருவண்ணாமலையில் புதிதாக அமைக்கப்பட்ட “மு.க.ஸ்டாலின் பூங்கா”

Next Post

கொடிநாள் நிதி வசூல்; தி.மலை ஆட்சியர் தொடங்கி வைத்தார்

Related Posts

Anitha Radhakrishnan Arrest

“ஆணவம் அழிவிற்கு வழி!” – அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

03/07/2026
Electric Vehicle Safety

‘மின் வாகன பேட்டரிகளை முடக்கும் ஆபத்து’ – 7 செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடை!

03/07/2026

40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு – சென்னை முதல் நெல்லை வரை பரபரப்பு!

03/07/2026

மக்களே உஷார்! ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ள புதிய விதிகள், கட்டண உயர்வுகள்! என்னென்ன தெரியுமா?

03/07/2026

“மரணத்தைவிட கொடியது புறக்கணிப்பு” – எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதி அதிமுகவிலிருந்து விலகினார் வைகைச்செல்வன்!

03/07/2026

“திமுகவை விட்டு விலக போலீஸார் கட்டாயப்படுத்தினர்” – கைதான அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு பேட்டி!

03/07/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • “ஆணவம் அழிவிற்கு வழி!” – அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!
  • ‘மின் வாகன பேட்டரிகளை முடக்கும் ஆபத்து’ – 7 செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடை!
  • 40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு – சென்னை முதல் நெல்லை வரை பரபரப்பு!
  • மக்களே உஷார்! ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ள புதிய விதிகள், கட்டண உயர்வுகள்! என்னென்ன தெரியுமா?
  • “மரணத்தைவிட கொடியது புறக்கணிப்பு” – எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதி அதிமுகவிலிருந்து விலகினார் வைகைச்செல்வன்!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved