Sunday, September 6, 2026
35 °c
Tiruvannamalai
32 ° Mon
33 ° Tue
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

வக்ப் வாரிய சட்டத்திருத்த விவகாரத்தில் நிலம் கையகப்படுத்துதல், உறுப்பினர் நியமனம் செய்யக்கூடாது : உச்சநீதிமன்றம்

Elumalai, Sub Editor by Elumalai, Sub Editor
17/04/2025
in இந்தியா, தமிழ்நாடு
0
மசோதா விவகாரங்களில் ஆளுநர் முட்டுக்கட்டையாக இருக்கமுடியாது : உச்சநீதிமன்றம் கருத்து
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

‘வக்ப் வாரிய திருத்த சட்டப்படி புதிய உறுப்பினர் நியமனம் செய்யக்கூடாது. நிலம் வகைப்படுத்துதல் செய்யக்கூடாது’ என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

வக்ப் திருத்த சட்டத்திற்கு எதிராக, காங்கிரஸ், சமாஜ்வாதி, தி.மு.க., த.வெ.க., உள்ளிட்ட கட்சிகள், ஏராளமான முஸ்லிம் அமைப்புகள் என, 90-க்கும் அதிகமான மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த மனுக்கள் அனைத்தும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா அமர்வில் ஒன்றாக சேர்த்து நேற்று முன்தினம் விசாரிக்கப்பட்டது. அப்போது, ‘வக்ப் சொத்துக்களை உறுதிப்படுத்தும் அதிகாரத்தை மாவட்ட கலெக்டர்களுக்கு கொடுத்தது எந்த வகையில் நியாயம்; இந்து மத சொத்துக்களை நிர்வகிக்கும் குழுவில் பிற மதத்தை சேர்ந்தவர்களையும் அனுமதிக்க முடியுமா?’ என, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருந்தது.

இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறியதாவது:

மக்களுக்கு பதிலளிக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. லட்சக்கணக்கானோரிடம் இருந்து கிராமங்கள் வக்ப் சொத்தாக எடுத்துக் கொள்ளப்படுவதாக புகார் வந்தது. பல இடங்கள் வக்ப் சொத்தாக உரிமை கோரப்படுகின்றன. இந்த சட்டத்தை நிறுத்தி வைப்பது என்பது ஒரு கடுமையான நடவடிக்கையாக இருக்கும். இந்த வழக்கில் ஆவணங்களை தாக்கல் செய்ய ஒரு வாரம் அவகாசம் அளிக்க வேண்டும் என்றார்.

தொடர்ந்து நீதிபதிகள் கூறியதாவது:

சட்டத்தில் சில நேர்மறையான விஷயங்கள் உள்ளன . சட்டத்திற்கு முழு தடை விதிக்க மாட்டோம். தற்போதைய சூழ்நிலை மாறுவதையும் நாங்கள் விரும்பவில்லை. நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளபோது, தற்போதுள்ள சூழ்நிலைக்கு எந்த இடையூறும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றனர்.

தொடர்ந்து, சொலிசிட்டர் ஜெனரல், இந்த வழக்கில் சில ஆவணங்கள் தாக்கல் செய்ய ஒரு வாரம் அவகாசம் வழங்க வேண்டும் எனக்கூறியதுடன், அதுவரை புதிய நியமனங்கள் இருக்காது எனவும் தெரிவித்தார்.

AlsoRead

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

இதனைத் தொடர்ந்து நீதிபதிகள், வக்ப் வாரியங்கள், மத்திய வக்ப் கவுன்சிலில் நியமனங்கள் இருக்காது என மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. வக்ப் வாரியங்கள், வக்ப் கவுன்சிலில் அலுவல் உறுப்பினர்கள் இருவரை தவிர அனைவரும் முஸ்லிம்களாக இருக்க வேண்டும். வக்ப் சொத்துகள் குறித்து மாவட்ட கலெக்டர்கள் மேற்கொண்டு வரும் விசாரணை முடிவுகளை செயல்படுத்தக்கூடாது.

புதிய சட்டப்படி வக்ப் வாரியத்தில் எந்த உறுப்பினர் நியமனமும் இருக்கக்கூடாது. ஏற்கனவே வக்ப் என அறிவிக்கப்பட்ட சொத்துகளில் எந்த நடவடிக்கையும் கூடாது. நிலம் வகைப்படுத்துதல் உறுப்பினர் நியமனம் தொடர்பான அனைத்திலும் தற்போதைய நிலை தொடர வேண்டும். மத்திய, மாநில அரசுகள், வக்ப் வாரியம் ஏழு நாட்களில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Tags: Land acquisitionSupreme Court ordersWaqf Board Amendment Act issue
Previous Post

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பிஆர் கவாய் நியமனம்

Next Post

கோயில்களுக்குள் நடக்கும் அரசியல்? நிம்மதியாக சாமி கும்பிட வழி கிடைக்குமா?

Related Posts

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

18/08/2026
அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

18/08/2026

சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

16/08/2026

கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை வேண்டும்

16/08/2026

அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

16/08/2026

மணிப்பூரில் முடக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளை திறக்க இரு தரப்பினரும் இணைந்து செயல்பட வேண்டும்

16/08/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
  • மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்
  • டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக 100 சிக்சர்கள்:
  • அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:
  • சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved