Monday, June 8, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

மாவட்ட தொழில் மையத்தின் ஆய்வுக்கூட்டம்

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
30/12/2023
in செய்திகள், மாவட்டங்கள்
0
மாவட்ட தொழில் மையத்தின் ஆய்வுக்கூட்டம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் மாவட்ட தொழில் மையம் சார்பில் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடைபெற்றது.

அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:

தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் பொருட்டு தமிழ்நாடு அரசு வரும் ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய நாட்களில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டினை சென்னையில் நடத்த நிலையான மற்றும் நீடித்த வளர்ச்சியினை நோக்கமாக கொண்டு ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை அடைவதில் இம்மாநாடு முக்கிய பங்கு வகிக்கும்.

இவ்வுலக முதலீட்டார்கள் மாநாட்டிற்கு முன்னோடியாக குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவன தொழில்களில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் முதலீடுகளை ஈர்க்கும் கருத்தரங்கு நமது மாவட்டத்திற்கு குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் முதலீட்டிற்கான இலக்காக ரூ.1638 கோடி நிர்ணயிக்கப்பட்டு இதுவரை ரூ.1639.45 கோடிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாற்றிக் கொள்ளப்பட்டன. இதன் மூலம் 4693 பேர் நேரடியாக வேலை வாய்ப்பு பெற உள்ளனர். மறைமுக வேலை வாய்ப்பாக பல்லாயிரம் பேருக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது. நமது மாவட்டம் முழு இலக்கை எட்டியுள்ளது. மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

தமிழ்நாட்டில் நிலவும் தொழில்துறைக்கு உகந்த சூழல் அமைப்பு. மேம்பாட்டிற்கு வழங்கப்படும் முக்கியத்துவம், வணிகரீதியான வசதி வாய்ப்புகள் ஆகியவை தொழில் துறையில் முதலீடு செய்வோர்க்கு சிறந்த வாய்ப்புகளை வழங்குகிறது. விண்வெளி, தகவல் தொழில் நுட்பம், செயற்கை நுண்ணறிவு, ஆட்டோ மொபைல், மின்சார வாகனங்கள், ஜவுளி. தரவு பகுப்பாய்வு மற்றும் மேம்பட்ட பொருட்கள் உட்பட பல்வேறு துறைகள் அரசிடமிருந்து சிறப்பு கவனம் மற்றும் ஆதரவைப் பெற்று முதலீட்டு வாய்ப்புகளை பெற்றிட உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 முக்கிய தளமாக செயல்படும்.

குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை உலக முதலீட்டாளர்கள் மாநாடு நிகழ்வில் காட்சிப்படுத்துவதற்கும், அதன் மூலம் வாங்குபவர் விற்பனையாளர் மற்றும் பல்வேறு பங்குதாரர்களை இணைக்கும் தளமாக உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 அமையும். மேலும் இம்முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட நிறுவனங்களுக்கு அனைத்து விதமான அனுமதிகள் மற்றும் உரிமங்கள் ஆகியவற்றை அனைத்து துறைகளிடமிருந்து விரைவாக உரிய காலத்தில் பெற்றிட ஒற்றைச் சாளரத் தகவு வழியாக பெற்றுத் தர மாவட்டத் தொழில் மையம் மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்தியாவிலே தொழில் முனைவோர்கள் நமது பண்டைக் கால வணிகம் 12ஆம் நூற்றாண்டில் தமிழ் அவ்வையாரின் புலவர் ‘திரைகடலோடியும் திரவியம் தேடு” என்ற பாடல், முற்காலத் தமிழர்களின் வணிகம் தெளிவாக கூறுகிறது, சங்க இலக்கியங்கள் முற்காலத் தமிழர்களின் கடல் வணிகம் பற்றிய தகவல்களைத் தருகின்றன. ‘பட்டினப்பாலை” பண்டைய சோழர் காலத்தில் கடல் கடந்து வணிகம் செய்ததையும், கொங்கு நாட்டிலிருந்து தங்கம், பாண்டிய நாட்டிலிருந்து முத்துக்கள், சேர நாட்டின் சந்தனம் மற்றும் குடகு மலையிலிருந்து மிளகு ஆகியவை மிகவும் முக்கியமான ஏற்றுமதி மூலம் வணிகம் செய்தனர். 1906 ஆம் ஆண்டு வ.உசிதம்பரனார் சுதேசி கப்பல் நிறுவனத்தை நிறுவி வர்த்தகம் மற்றும் வளர்ச்சித் துறைகளில் தடம் பதித்த வரலாறு உண்டு.

தமிழகம் லீடர் தகுதியை பெற்றதற்கான இந்தியாவின் மக்கள் தொகையில்; 6 சதவிகிதம் கொண்டது தமிழ்நாடு. ஆனால் இந்திய அளவில் உள்ளாட்டு உற்பத்தி மதிப்பில் 2வது இடமும், ஏற்றுமதியில் 3வது இடமும் பெற்ற மாநிலம் தமிழ்நாடு. நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மதிப்பிடும் போது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் புனுP-9 சதவிகித பங்களிப்பை அளிக்கின்றது. 2021 மார்ச் வரை 2,300 நிறுவனங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் சீரிய முயற்சியால் தற்போது 7,400க்கும் மேல் உயர்ந்துள்ளது.

AlsoRead

“பாஜகவிலிருந்து விலக இதுதான் காரணம்” – அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!

“அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – நயினார் நாகேந்திரன் பேச்சு

கேரளாவின் கடன் ரூ.5.07 லட்சம் கோடி: பினராயி விஜயன் – வி.டி. சதீசன் இடையே அரசியல் மோதல்!

சென்னையைச் சார்ந்த நிறுவனங்கள் கடந்த ஆண்டு 1.5 முதலீடுகளை ஈர்த்துள்ளது. பில்லியன் டாலர் தரவரிசையில் இந்திய அளவில் கடைசி இடத்திலிருந்த தமிழ்நாடு. 3 ஆம் நிலைக்கு முன்னேறி “லீடர்” தகுதியை பெற்றுள்ளது. என்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம். விரைவில் முதல் இடத்திற்கு வர அனைவரும் பாடுபட வேண்டும்.

தமிழ்நாடு இந்திய அளவில் தொழில் துறையில் உயர்ந்துள்ளதற்கு உதரணமாக ஏப்ரல் முதல் அக்டோபர் வரை ஜி.எஸ்.டி. வசூல் செய்ததில் உத்திரபிரதேச மாநிலத்தில் 18 ஆயிரத்து 880 கோடியில் செலுத்தியதில் 13 ஆயிரத்து 89 கோடி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் பீகார் மாநிலத்தில் 4 ஆயிரத்து 731 கோடி செலுத்தியதில் 7 ஆயிரத்து 338 கோடி வழங்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் 7 ஆயிரத்து 384 கோடி செலுத்தியதில் 5 ஆயிரத்து 727 கோடி வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 23 ஆயிரத்து 661 கோடி செலுத்தியதில் 2 ஆயிரத்து 976 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதிலிருந்து தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு ஜி.எஸ்.டி. வரி செலுத்தியதே தொழில் வளர்ச்சிக்கு ஒரு சான்றாகும்.


நமது மாவட்டத்தில் தொழில் செய்து கொண்டு இருப்பவர்கள் உதாரணத்திற்கு அரிசி ஆலை வைத்துயிருப்பவர்கள் அரிசியை மட்டுமே விற்பனை செய்து வருகிறார்கள். அதன் உபபொருட்களை புதிய உத்திகளை பயன்படுத்தி தொழிலை விவாக்கம் செய்ய வேண்டும், மணிலா, எள் போன்ற எண்ணெய் வித்துக்களை உலக தரத்தில் உற்பத்தி செய்து மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என மாவட்ட பெருந்திரள் கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலுதெரிவித்தார்.

சட்டபேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ், பாராளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, மாநில தடகள சங்க துணைத்தலைவர் மரு.எ.வ.வே.கம்பன், சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், மாவட்ட தொழில்மைய பொதுமேலாளர் ரவி, உதவி இயக்குநர் (தொழில் நுட்பம்) பாலசுப்பிரமணி, அனைத்து தொழிற் சங்க பிரதிநிதிகள் மற்றும் அரசி வியாபாரி சங்க பிரதிநிதிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags: அமைச்சர் எ.வ.வேலுஆய்வுக்கூட்டம்திருவண்ணாமலைமாவட்ட தொழில் மையம்
Previous Post

திருவண்ணாமலை தினமும் தீபத்திருவிழா போல் மாறிவிட்டது ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு பேச்சு

Next Post

வங்கிகள் இணைந்து நடத்திய மாபெரும் கல்விக்கடன் முகாம்

Related Posts

annamalai

“பாஜகவிலிருந்து விலக இதுதான் காரணம்” – அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!

05/06/2026
Annamalai

“அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – நயினார் நாகேந்திரன் பேச்சு

05/06/2026

கேரளாவின் கடன் ரூ.5.07 லட்சம் கோடி: பினராயி விஜயன் – வி.டி. சதீசன் இடையே அரசியல் மோதல்!

04/06/2026

டெல்லி ஓட்டலில் பயங்கர தீ விபத்து: வெளிநாட்டினர் உட்பட 21 பேர் பரிதாப பலி – விதிமீறல்களே காரணமா?

04/06/2026

ஆரணி தாலுகா அலுவலகத்தில் முடங்கிய பணிகள்: சான்றிதழ்கள் கிடைக்காமல் பொதுமக்கள், விவசாயிகள் கடும் அவதி!

04/06/2026

“மீண்டும் வெற்றிச் சரித்திரம் எழுதுவோம்! உதயசூரியன் ஒளியால் இருள் விலகும்” – கலைஞர் பிறந்தநாளில் மு.க.ஸ்டாலின் சூளுரை!

03/06/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • “பாஜகவிலிருந்து விலக இதுதான் காரணம்” – அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!
  • “அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – நயினார் நாகேந்திரன் பேச்சு
  • கேரளாவின் கடன் ரூ.5.07 லட்சம் கோடி: பினராயி விஜயன் – வி.டி. சதீசன் இடையே அரசியல் மோதல்!
  • டெல்லி ஓட்டலில் பயங்கர தீ விபத்து: வெளிநாட்டினர் உட்பட 21 பேர் பரிதாப பலி – விதிமீறல்களே காரணமா?
  • ஆரணி தாலுகா அலுவலகத்தில் முடங்கிய பணிகள்: சான்றிதழ்கள் கிடைக்காமல் பொதுமக்கள், விவசாயிகள் கடும் அவதி!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved