Monday, September 7, 2026
36 °c
Tiruvannamalai
32 ° Tue
32 ° Wed
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

உலகக் கோப்பையால் ஃபிஃபாவுக்கு ஜாக்பாட்

48 அணிகள்... ரூ.1,500 கோடி டாலர் வருமானம்

admin by admin
23/07/2026
in செய்திகள், விளையாட்டு
0
உலகக் கோப்பையால் ஃபிஃபாவுக்கு ஜாக்பாட்
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

23-வது ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், போட்டியை நடத்திய ஃபிஃபா அமைப்பு வரலாறு காணாத அளவிலான வருவாயை ஈட்டியுள்ளது. கடந்த உலகக் கோப்பையை விட இரு மடங்குக்கும் அதிகமாக சுமார் 1,500 கோடி அமெரிக்க டாலர் வருமானம் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

AlsoRead

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக 100 சிக்சர்கள்:

அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிக்கோ ஆகிய மூன்று நாடுகள் இணைந்து நடத்திய இந்த உலகக் கோப்பைத் தொடரில், முதல் முறையாக 48 அணிகள் பங்கேற்றன. ஜூன் 11-ம் தேதி தொடங்கிய போட்டிகள் ஜூலை 19-ம் தேதி நடைபெற்ற இறுதிப் போட்டியுடன் நிறைவடைந்தன. உலகக் கோப்பை வரலாற்றில் ஸ்பெயின் அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

எதிர்பார்ப்பை மீறிய வருமானம்

கத்தாரில் நடைபெற்ற 2022 உலகக் கோப்பையில் ஃபிஃபாவுக்கு 760 கோடி அமெரிக்க டாலர் வருமானம் கிடைத்திருந்தது. இந்த முறை அதிக அணிகள், அதிக போட்டிகள் என்பதால் 1,100 கோடி டாலர் வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் டிக்கெட் விற்பனை, ஒளிபரப்பு உரிமை, விளம்பர ஒப்பந்தங்கள், ஸ்பான்சர்ஷிப் உள்ளிட்டவற்றின் மூலம் சுமார் 1,500 கோடி டாலர் வருவாய் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஒளிபரப்பு உரிமை மூலம் மட்டும் 430 கோடி டாலர் வருமானம் கிடைத்துள்ளது. இதில் ஐரோப்பாவில் இருந்து 38 சதவீதமும், வட அமெரிக்காவில் இருந்து 27 சதவீதமும் வருமானம் கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

48 அணிகள் குறித்து எழுந்த விமர்சனங்கள் தவிடுபொடியாகின

48 அணிகள் பங்கேற்பதால் போட்டித் தரம் குறையும், ரசிகர்கள் வருகை குறையும் என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால் அவற்றை முறியடிக்கும் வகையில் 104 போட்டிகளையும் 66 லட்சத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் நேரில் கண்டு ரசித்தனர். போட்டி அரங்குகளில் சராசரியாக 99.7 சதவீத இருக்கைகள் நிரம்பியிருந்ததாக ஃபிஃபா தெரிவித்துள்ளது.

டைனமிக் டிக்கெட் விலை… ஃபிஃபாவுக்கு கூடுதல் லாபம்

இந்த உலகக் கோப்பையில் ஆட்டத்தின் முக்கியத்துவத்திற்கு ஏற்ப டிக்கெட் விலை மாறும் “டைனமிக் பிரைசிங்” முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும், டிக்கெட் விற்பனையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

முக்கிய போட்டிகளுக்கான டிக்கெட் விலை ஆயிரக்கணக்கான டாலர்களை எட்டியது. அமெரிக்கா–பாராகுவே ஆட்டத்தின் குறைந்தபட்ச டிக்கெட் விலை 1,000 டாலராகவும், நியூ ஜெர்ஸியில் நடைபெற்ற ஸ்பெயின்–அர்ஜென்டினா இறுதிப் போட்டிக்கான அதிகபட்ச டிக்கெட் விலை 32,970 டாலராகவும் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நகரங்களுக்கு ஏமாற்றம்

உலகக் கோப்பையால் சுற்றுலா, ஹோட்டல், உள்ளூர் வணிகம் பெரிதும் வளர்ச்சி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், போட்டிகளை நடத்திய பல நகரங்களில் எதிர்பார்த்த அளவுக்கு சுற்றுலாப் பயணிகள் வரவில்லை. இதனால் ஹோட்டல் முன்பதிவுகளும் குறைவாக இருந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், அமெரிக்காவில் உள்ள பப், பார்கள் மற்றும் உணவகங்களில் ரசிகர்கள் கூட்டம் அதிகரித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிக லாபம் பெற்றவர்கள்

உலகக் கோப்பை மூலம் ஃபிஃபா, ஒளிபரப்பு நிறுவனங்கள், ஸ்பான்சர்ஷிப் நிறுவனங்கள், விளையாட்டு ஆடை உற்பத்தியாளர்கள் மற்றும் சூதாட்ட நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டியதாக கூறப்படுகிறது. அமெரிக்காவில் ஒளிபரப்பு உரிமை பெற்றிருந்த நிறுவனம் 30 விநாடி விளம்பர இடங்களை பல லட்சம் டாலர்களுக்கு விற்பனை செய்ததாகவும், அடிடாஸ், கோககோலா உள்ளிட்ட நிறுவனங்களின் விற்பனையும் கணிசமாக உயர்ந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், ரசிகர்களுக்கான அணிகளின் ஜெர்சிகள், கொடிகள், பேனர்கள் உள்ளிட்ட பொருட்களின் விற்பனையும் அதிகரித்துள்ளது. அதேபோல், உலகக் கோப்பையை ஒட்டி நடைபெற்ற விளையாட்டு பந்தயங்களில் ஆயிரக்கணக்கான கோடி டாலர்கள் பரிவர்த்தனை செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tags: உலகக் கோப்பைஃபிஃபாவுக்கு ஜாக்பாட்வருமானம்
Previous Post

அரசு, அமைச்சர்களை விமர்சிப்பது பொது அமைதிக்கு எதிரான குற்றமல்ல

Next Post

வினாத்தாள் கசிவு விவகாரத்தில் காங்கிரஸ் தீர்வை விரும்பவில்லை:

Related Posts

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

18/08/2026
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக 100 சிக்சர்கள்:

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக 100 சிக்சர்கள்:

18/08/2026

அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

18/08/2026

சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

16/08/2026

கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை வேண்டும்

16/08/2026

அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

16/08/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
  • மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்
  • டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக 100 சிக்சர்கள்:
  • அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:
  • சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved