Friday, July 24, 2026
33 °c
Tiruvannamalai
33 ° Sat
33 ° Sun
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

கர்நாடகா செல்லும் முடிவை முதல்வர் விஜய் கைவிட வேண்டும்

அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

admin by admin
24/07/2026
in செய்திகள், தமிழ்நாடு
0
கர்நாடகா செல்லும் முடிவை முதல்வர் விஜய் கைவிட வேண்டும்
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

மேகேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக முதல்வர் விஜய் கர்நாடகா செல்லும் முடிவை கைவிட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கர்நாடகாவில் ஆகஸ்ட் 3-ம் தேதி மேகேதாட்டு அணை தொடர்பாக நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் விஜய் பங்கேற்று, கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமாருடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக வேளாண்மைத் துறை அமைச்சர் வினோத் தெரிவித்திருப்பது அதிர்ச்சியளிப்பதாகவும், இது கடுமையாக கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்துள்ளார்.

மேகேதாட்டு அணை விவகாரம் தமிழ்நாடு – கர்நாடகா இடையேயான இருதரப்பு பிரச்சினை அல்ல; அது கர்நாடக அரசின் ஒருதலைப்பட்ச கோரிக்கை மட்டுமே. எனவே, அந்த விவகாரத்தில் கர்நாடக அரசுடன் தமிழ்நாடு பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய அவசியமில்லை என்று அன்புமணி கூறியுள்ளார்.

கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவது, மேகேதாட்டு அணை விவகாரத்தை இரு மாநிலங்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டிய பிரச்சினையாக ஏற்றுக்கொண்டதற்கு சமமாகிவிடும் என்றும், அதன்பிறகு அணை கட்டக்கூடாது என்பதே கோரிக்கையாக இருக்காது; அணையின் கொள்ளளவு மற்றும் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடும் நடைமுறைகள் குறித்தே விவாதம் நடைபெறும் நிலை உருவாகும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

மேலும், மேகேதாட்டு அணை விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் அமைப்பதை பாமக ஆரம்பத்திலிருந்தே எதிர்த்து வருவதாகவும், அதைவிட மோசமான பாதிப்பை கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தும் முடிவு ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேகேதாட்டு போன்ற முக்கிய பிரச்சினைகளில் தமிழக அரசு தன்னிச்சையாக முடிவு எடுக்காமல், விவசாய அமைப்புகள் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி அதன் பிறகே நிலைப்பாட்டை தீர்மானிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

AlsoRead

சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றினால்தான் ரீல் ஹீரோ, ரியல் ஹீரோ ஆக முடியும்

மேகேதாட்டு அணை விவகாரம்: ஆகஸ்ட் 3-ல் கர்நாடகா செல்லும் முதல்வர் விஜய்

ஜனநாயகன் படம் மூளைக்கு சுறுசுறுப்பு தரும்

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்த வேண்டும் என்ற பாமகவின் கோரிக்கையை அரசு ஏற்காமல், நேரடியாக கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தைக்கு சம்மதித்திருப்பது தமிழ்நாட்டின் நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

எனவே, மேகேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக கர்நாடகா சென்று பேச்சுவார்த்தை நடத்தும் முடிவை முதல்வர் விஜய் கைவிட்டு, அதற்கு பதிலாக சட்டப்போராட்டங்கள் மூலம் மேகேதாட்டு அணை கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Tags: அன்புமணி ராமதாஸ்கர்நாடகாமுதல்வர் விஜய்
Previous Post

சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றினால்தான் ரீல் ஹீரோ, ரியல் ஹீரோ ஆக முடியும்

Related Posts

சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றினால்தான் ரீல் ஹீரோ, ரியல் ஹீரோ ஆக முடியும்

சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றினால்தான் ரீல் ஹீரோ, ரியல் ஹீரோ ஆக முடியும்

24/07/2026
மேகேதாட்டு அணை விவகாரம்: ஆகஸ்ட் 3-ல் கர்நாடகா செல்லும் முதல்வர் விஜய்

மேகேதாட்டு அணை விவகாரம்: ஆகஸ்ட் 3-ல் கர்நாடகா செல்லும் முதல்வர் விஜய்

24/07/2026

ஜனநாயகன் படம் மூளைக்கு சுறுசுறுப்பு தரும்

24/07/2026

குதிரை பேரம் வழக்கு: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சரணடைந்தார் செந்தில் பாலாஜி

24/07/2026

முதல்வர் மவுனம் காப்பதால் தொடரும் காவல் மரணங்கள்

23/07/2026

வினாத்தாள் கசிவு விவகாரத்தில் காங்கிரஸ் தீர்வை விரும்பவில்லை:

23/07/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • கர்நாடகா செல்லும் முடிவை முதல்வர் விஜய் கைவிட வேண்டும்
  • சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றினால்தான் ரீல் ஹீரோ, ரியல் ஹீரோ ஆக முடியும்
  • மேகேதாட்டு அணை விவகாரம்: ஆகஸ்ட் 3-ல் கர்நாடகா செல்லும் முதல்வர் விஜய்
  • மதுரை, வேலூர் உள்பட 8 மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிப்பு
  • ஜனநாயகன் படம் மூளைக்கு சுறுசுறுப்பு தரும்

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved