Wednesday, July 29, 2026
18 °c
Columbus
21 ° Thu
24 ° Fri
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

பெண்களை இழிவுபடுத்துவோர் மீது நடவடிக்கை இல்லை:

தவெக அரசை சி.வி.சண்முகம் விமர்சனம்

admin by admin
29/07/2026
in செய்திகள், தமிழ்நாடு
0
பெண்களை இழிவுபடுத்துவோர் மீது நடவடிக்கை இல்லை:
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

பெண்களை தரம் தாழ்த்திப் பேசுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், மாற்றம் வேண்டுமென்றே மக்கள் தவெக அரசுக்கு வாக்களித்ததாகவும் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றம்சாட்டியுள்ளார்.

செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

AlsoRead

சீமான் தொடர்பான அவதூறு புகார்கள்: பாரபட்சமான நடவடிக்கையை வேடிக்கை பார்க்கமாட்டோம்

கனிமவளக் கொள்ளைக்கு எதிராக போராடிய நிர்வாகி மீது தாக்குதல்

டாஸ்மாக் கடைகளை தனியார்மயமாக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும்

“திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் மாறி மாறி ஆட்சியிலும், எதிர்க்கட்சியிலும் இருந்துள்ளன. ஆனால், இதுவரை எந்தக் கட்சியும் பெண்களை அவதூறாக சித்தரித்ததில்லை.

எனக்கும் எடப்பாடி கே. பழனிசாமிக்கும் கருத்து வேறுபாடு இருக்கலாம். அது வேறு விஷயம். என் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறீர்கள். ஆனால், அதிமுக பெண்களை தவறாக சித்தரிப்பவர்களை ஊக்குவிப்பது உங்கள் தலைமைக்கு அழகா? இதுபோன்ற நிலையை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்திருந்தால் அனுமதித்திருக்க மாட்டார். இதை மக்களும், அதிமுக தொண்டர்களும் கவனித்து வருகின்றனர்.

மாற்றம் வேண்டும் என்பதற்காகவே மக்கள் தவெக அரசுக்கு வாக்களித்தனர். ஆனால், பெண்களை தரம் தாழ்த்திப் பேசுவோர் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

விழுப்புரம் மாவட்டத்தில் ‘சிங்கப் பெண் படை’ உருவாக்கப்பட்டிருந்தாலும், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பெண்கள் பொது வாழ்க்கைக்கு வர அச்சப்படுகின்றனர். காவல்துறையின் செயல்பாடுகளிலும் இன்னும் மாற்றம் ஏற்படவில்லை.

என்னைப் பற்றி விமர்சிப்பது குறித்து எங்களுக்கு கவலை இல்லை. ஆனால், பெண்களை இழிவுபடுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாதது ஏற்க முடியாதது. விழுப்புரம் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்பவர்கள் மற்றும் பெண்களை துன்புறுத்துபவர்கள் சுதந்திரமாகச் செயல்படுகிறார்கள் என்ற நிலை உள்ளது.

விழுப்புரம் மாவட்டத்திற்கு திறமையான காவல் கண்காணிப்பாளரை நியமித்ததற்காக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கிறோம். அதே நேரத்தில், காவல்துறைக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கி, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என சி.வி.சண்முகம் தெரிவித்தார்.

Tags: சி.வி.சண்முகம் விமர்சனம்தவெக அரசுநடவடிக்கை இல்லை
Previous Post

மேகேதாட்டு விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு அண்ணாமலை கண்டனம்

Next Post

மேகேதாட்டு விவகாரத்தில் அரசியல் வேண்டாம்: தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தர வேண்டும்

Related Posts

சீமான் தொடர்பான அவதூறு புகார்கள்: பாரபட்சமான நடவடிக்கையை வேடிக்கை பார்க்கமாட்டோம்

சீமான் தொடர்பான அவதூறு புகார்கள்: பாரபட்சமான நடவடிக்கையை வேடிக்கை பார்க்கமாட்டோம்

29/07/2026
கனிமவளக் கொள்ளைக்கு எதிராக போராடிய நிர்வாகி மீது தாக்குதல்

கனிமவளக் கொள்ளைக்கு எதிராக போராடிய நிர்வாகி மீது தாக்குதல்

29/07/2026

டாஸ்மாக் கடைகளை தனியார்மயமாக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும்

29/07/2026

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வாரம் ஒருநாள் சிக்கன் பிரியாணி

29/07/2026

கனிம வளப் பாதுகாப்பில் தவெக அரசு உறுதியான கொள்கை அறிவிப்பை வெளியிட வேண்டும்

29/07/2026

மேகேதாட்டு விவகாரத்தில் அரசியல் வேண்டாம்: தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தர வேண்டும்

29/07/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • சீமான் தொடர்பான அவதூறு புகார்கள்: பாரபட்சமான நடவடிக்கையை வேடிக்கை பார்க்கமாட்டோம்
  • கனிமவளக் கொள்ளைக்கு எதிராக போராடிய நிர்வாகி மீது தாக்குதல்
  • டாஸ்மாக் கடைகளை தனியார்மயமாக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும்
  • அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வாரம் ஒருநாள் சிக்கன் பிரியாணி
  • கனிம வளப் பாதுகாப்பில் தவெக அரசு உறுதியான கொள்கை அறிவிப்பை வெளியிட வேண்டும்

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved