Wednesday, July 29, 2026
20 °c
Columbus
21 ° Thu
24 ° Fri
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

மேகேதாட்டு விவகாரத்தில் அரசியல் வேண்டாம்: தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தர வேண்டும்

– மாணிக்கம் தாகூர்

admin by admin
29/07/2026
in செய்திகள், தமிழ்நாடு
0
மேகேதாட்டு விவகாரத்தில் அரசியல் வேண்டாம்: தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தர வேண்டும்
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

மேகேதாட்டு அணை விவகாரத்தில் அரசியல் சாயம் பூசுவதை தவிர்த்து, தமிழக அரசு மேற்கொள்ளும் அனைத்து சட்டரீதியான முயற்சிகளுக்கும் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மத்திய நீர்வளத்துறை இணையமைச்சர் ராஜ்பூஷன், நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது, மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கு உச்ச நீதிமன்ற தீர்ப்பில் எந்த தடையும் இல்லை என தெரிவித்திருப்பது தமிழக மக்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.

காவிரி நடுவர் மன்றத்தின் 2007-ஆம் ஆண்டு இறுதித் தீர்ப்பும், 2018-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், காவிரி படுகை மாநிலங்களை பாதிக்கும் வகையில் எந்த கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என்று தெளிவாக கூறியுள்ள நிலையில், மத்திய அமைச்சர் கர்நாடக அரசுக்கு ஆதரவாக பேசியிருப்பது ஏற்க முடியாதது என விமர்சித்தார்.

நடுவர் மன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையில் தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 177.25 டி.எம்.சி. காவிரி நீர் வழங்கப்பட வேண்டும் என்றும், ஒவ்வொரு மாதமும் வழங்க வேண்டிய நீரின் அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ள போதிலும், கர்நாடக அரசு அந்த உத்தரவை முழுமையாக பின்பற்றவில்லை என்று அவர் குற்றம்சாட்டினார்.

AlsoRead

சீமான் தொடர்பான அவதூறு புகார்கள்: பாரபட்சமான நடவடிக்கையை வேடிக்கை பார்க்கமாட்டோம்

கனிமவளக் கொள்ளைக்கு எதிராக போராடிய நிர்வாகி மீது தாக்குதல்

டாஸ்மாக் கடைகளை தனியார்மயமாக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும்

மேலும், ரூ.9,000 கோடி மதிப்பில் 67.15 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட மேகேதாட்டு அணையை கட்ட கர்நாடக அரசு மேற்கொண்டு வரும் முயற்சியை தமிழகம் எந்த நிலையிலும் ஏற்றுக்கொள்ளாது என்றும், அந்த அணை கட்டப்பட்டால் காவிரி டெல்டா பகுதி கடுமையாக பாதிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேகேதாட்டு அணை கட்டும் திட்டத்தை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், 2019-ஆம் ஆண்டு கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது தமிழகத்திற்கு செய்யப்பட்ட துரோகம் என்றும் அவர் விமர்சித்தார்.

மேலும், மேகேதாட்டு விவகாரத்தில் தவெக மற்றும் காங்கிரஸ் இணைந்து தமிழக நலன்களை விட்டுக்கொடுத்ததாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறியிருப்பது அரசியல் காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

கர்நாடகத்தில் எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், தமிழகத்தின் உரிமைகளுக்கு எதிரான நிலைப்பாட்டையே தொடர்ந்து கடைப்பிடித்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், மேகேதாட்டு விவகாரத்தில் அரசியல் ஆதாயம் தேடாமல், தமிழக அரசு மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளுக்கும் அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து ஆதரவு அளிப்பதே தமிழகத்தின் உரிமையை பாதுகாக்கும் வழியாக அமையும் என்று மாணிக்கம் தாகூர் வலியுறுத்தியுள்ளார்.

Tags: அரசியல் வேண்டாம்மாணிக்கம் தாகூர்மேகேதாட்டு அணைமேகேதாட்டு விவகாரம்
Previous Post

பெண்களை இழிவுபடுத்துவோர் மீது நடவடிக்கை இல்லை:

Next Post

கனிம வளப் பாதுகாப்பில் தவெக அரசு உறுதியான கொள்கை அறிவிப்பை வெளியிட வேண்டும்

Related Posts

சீமான் தொடர்பான அவதூறு புகார்கள்: பாரபட்சமான நடவடிக்கையை வேடிக்கை பார்க்கமாட்டோம்

சீமான் தொடர்பான அவதூறு புகார்கள்: பாரபட்சமான நடவடிக்கையை வேடிக்கை பார்க்கமாட்டோம்

29/07/2026
கனிமவளக் கொள்ளைக்கு எதிராக போராடிய நிர்வாகி மீது தாக்குதல்

கனிமவளக் கொள்ளைக்கு எதிராக போராடிய நிர்வாகி மீது தாக்குதல்

29/07/2026

டாஸ்மாக் கடைகளை தனியார்மயமாக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும்

29/07/2026

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வாரம் ஒருநாள் சிக்கன் பிரியாணி

29/07/2026

கனிம வளப் பாதுகாப்பில் தவெக அரசு உறுதியான கொள்கை அறிவிப்பை வெளியிட வேண்டும்

29/07/2026

பெண்களை இழிவுபடுத்துவோர் மீது நடவடிக்கை இல்லை:

29/07/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • சீமான் தொடர்பான அவதூறு புகார்கள்: பாரபட்சமான நடவடிக்கையை வேடிக்கை பார்க்கமாட்டோம்
  • கனிமவளக் கொள்ளைக்கு எதிராக போராடிய நிர்வாகி மீது தாக்குதல்
  • டாஸ்மாக் கடைகளை தனியார்மயமாக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும்
  • அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வாரம் ஒருநாள் சிக்கன் பிரியாணி
  • கனிம வளப் பாதுகாப்பில் தவெக அரசு உறுதியான கொள்கை அறிவிப்பை வெளியிட வேண்டும்

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved