Monday, September 14, 2026
33 °c
Tiruvannamalai
29 ° Tue
29 ° Wed
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

கனிம வளப் பாதுகாப்பில் தவெக அரசு உறுதியான கொள்கை அறிவிப்பை வெளியிட வேண்டும்

- தி.வேல்முருகன்

admin by admin
29/07/2026
in செய்திகள், தமிழ்நாடு
0
கனிம வளப் பாதுகாப்பில் தவெக அரசு உறுதியான கொள்கை அறிவிப்பை வெளியிட வேண்டும்
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

தமிழகத்தின் கனிம வளங்கள் தமிழக மக்களின் தேவைக்கே பயன்படுத்தப்படும் என்ற உறுதியான கொள்கை அறிவிப்பை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு கனிம வளங்களை எடுத்துச் செல்வதற்கான கட்டுப்பாடுகளில் தளர்வு வழங்குமாறு கேரள முதல்வர், தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியிருப்பது, தமிழகத்தின் இயற்கை வளங்களை மீண்டும் எல்லை தாண்டி சுரண்ட அனுமதி கோரும் முயற்சியாகவே கருதப்பட வேண்டும் என்றார்.

தேசிய நெடுஞ்சாலை மற்றும் விழிஞ்சம் துறைமுகம் உள்ளிட்ட கட்டுமானப் பணிகளுக்காக தமிழகத்தின் கல், ஜல்லி உள்ளிட்ட கனிம வளங்கள் தேவைப்படுவதாக கேரள அரசு தெரிவித்துள்ள நிலையில், தனது மாநிலத்தின் இயற்கை வளங்களை பாதுகாப்பதில் கடுமையான நிலைப்பாட்டை கடைப்பிடிக்கும் கேரள அரசு, தமிழக வளங்களை பயன்படுத்த அனுமதி கோருவது நியாயமற்றது என்றும் அவர் விமர்சித்தார்.

விழிஞ்சம் துறைமுகம், காட்டுப்பள்ளி துறைமுகம் மற்றும் நாட்டின் பல விமான நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய கட்டமைப்புகள் பெருநிறுவனங்களின் ஒப்பந்த நிர்வாகத்தில் செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், துறைமுகங்கள், விமான நிலையங்கள் மற்றும் விரைவுச் சாலைகள் என்ற பெயரில் இயற்கை வளங்கள் வேகமாக சுரண்டப்படும் சூழல் உருவாகியுள்ளதாக குற்றம்சாட்டினார்.

தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படும் கற்கள், எம்–சாண்ட், மணல் ஆகியவை வெறும் கட்டுமானப் பொருட்கள் அல்ல; அவை தமிழரின் மலைகள், நீராதாரங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் எதிர்கால வாழ்வுரிமையையே எடுத்துச் செல்கின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

AlsoRead

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

காலநிலை மாற்றம் மற்றும் இயற்கைப் பேரிடர்கள் அதிகரித்து வரும் சூழலில், இயற்கை வளங்களை விற்று வளர்ச்சியை நோக்காமல், அவற்றை பாதுகாப்பதே உண்மையான முன்னேற்றம் என குறிப்பிட்ட அவர், தமிழக அரசு தற்போது அமல்படுத்தியுள்ள கனிம வளப் போக்குவரத்து கட்டுப்பாடுகளில் எந்தவித தளர்வும் வழங்கக்கூடாது என்றும் வலியுறுத்தினார்.

மேலும், “தமிழகத்தின் கனிம வளங்கள் தமிழக மக்களின் தேவைக்கே பயன்படுத்தப்படும். அண்டை மாநிலங்களின் கட்டுமானங்களுக்கோ, பெருநிறுவனங்களின் லாபத்திற்கோ, வெளிநாடுகளுக்கோ தமிழகத்தின் இயற்கை வளங்கள் வழங்கப்படமாட்டாது” என்ற தெளிவான கொள்கை அறிவிப்பை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்றும் தி.வேல்முருகன் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

Tags: கனிம வளப் பாதுகாப்புதவெக அரசுதி.வேல்முருகன்
Previous Post

மேகேதாட்டு விவகாரத்தில் அரசியல் வேண்டாம்: தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தர வேண்டும்

Next Post

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வாரம் ஒருநாள் சிக்கன் பிரியாணி

Related Posts

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

18/08/2026
அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

18/08/2026

சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

16/08/2026

கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை வேண்டும்

16/08/2026

அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

16/08/2026

மணிப்பூரில் முடக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளை திறக்க இரு தரப்பினரும் இணைந்து செயல்பட வேண்டும்

16/08/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
  • மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்
  • டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக 100 சிக்சர்கள்:
  • அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:
  • சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved