Monday, September 14, 2026
31 °c
Tiruvannamalai
29 ° Tue
29 ° Wed
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

டாஸ்மாக் கடைகளை தனியார்மயமாக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும்

டிடிவி தினகரன் வலியுறுத்தல்

admin by admin
29/07/2026
in செய்திகள், தமிழ்நாடு
0
டாஸ்மாக் கடைகளை தனியார்மயமாக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும்
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

டாஸ்மாக் மதுபானக் கடைகளை தனியார்மயமாக்கும் முடிவை ஆரம்ப நிலையிலேயே மறுபரிசீலனை செய்து கைவிட வேண்டும் என்றும், மதுபானக் கடைகளை படிப்படியாக மூடும் நடவடிக்கையை தமிழக அரசு தொடர வேண்டும் என்றும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் நகர்ப்புற பகுதிகளில் செயல்பட்டு வரும் சுமார் 2,500 டாஸ்மாக் மதுபானக் கடைகளை தனியார் வசம் ஒப்படைக்கவும், அதற்கான சட்டத் திருத்தத்தை வரவிருக்கும் சட்டமன்ற கூட்டத்தொடரில் கொண்டு வரவும் அரசு திட்டமிட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் கவலை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூலித்தல், நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு மதுபானம் விற்பனை செய்தல், அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்தல் போன்ற புகார்கள் தொடர்ந்து இருந்து வரும் நிலையில், டாஸ்மாக் கடைகளை தனியார் வசம் ஒப்படைப்பது முறைகேடுகளையும் சட்டவிரோத மதுவிற்பனையையும் அதிகரிக்குமே தவிர குறைக்காது என்று குற்றம்சாட்டினார்.

AlsoRead

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

ஆட்சிக்கு வந்த பிறகு வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகே இருந்த 710 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதாக அரசு தெரிவித்திருந்த நிலையில், மீதமுள்ள கடைகளையும் படிப்படியாக மூட வேண்டிய அரசு, அவற்றை தனியார் வசம் ஒப்படைக்க முயற்சிப்பது நிர்வாகத் திறமையின்மையை வெளிப்படுத்துவதாக அவர் விமர்சித்தார்.

மேலும், டாஸ்மாக் கடைகள் தனியார்மயமாக்கப்பட்டால், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அக்கடைகளில் பணியாற்றி வரும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வேலைவாய்ப்பும், அவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகும் அபாயம் உருவாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

எனவே, டாஸ்மாக் மதுபானக் கடைகளை தனியார்மயமாக்கும் முடிவை தமிழக அரசு ஆரம்ப நிலையிலேயே மறுபரிசீலனை செய்து கைவிடுவதுடன், மதுபானக் கடைகளை படிப்படியாக மூடும் நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

Tags: அரசு கைவிட வேண்டும்டாஸ்மாக் கடைடிடிவி தினகரன்
Previous Post

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வாரம் ஒருநாள் சிக்கன் பிரியாணி

Next Post

கனிமவளக் கொள்ளைக்கு எதிராக போராடிய நிர்வாகி மீது தாக்குதல்

Related Posts

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

18/08/2026
அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

18/08/2026

சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

16/08/2026

கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை வேண்டும்

16/08/2026

அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

16/08/2026

மணிப்பூரில் முடக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளை திறக்க இரு தரப்பினரும் இணைந்து செயல்பட வேண்டும்

16/08/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
  • மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்
  • டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக 100 சிக்சர்கள்:
  • அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:
  • சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved