Friday, July 31, 2026
33 °c
Tiruvannamalai
32 ° Sat
31 ° Sun
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

ராமர் கோயில் காணிக்கை திருட்டு: நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகளின் நூதன போராட்டம்

admin by admin
31/07/2026
in இந்தியா, செய்திகள்
0
ராமர் கோயில் காணிக்கை திருட்டு: நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகளின் நூதன போராட்டம்
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

அயோத்தி ராமர் கோயில் காணிக்கை தொடர்பான விவகாரத்தைக் கண்டித்தும், மாணவர்கள் மீதான நடவடிக்கைக்கு பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் 10-வது நாளான இன்று, அவை கூடுவதற்கு முன்பு மகர் த்வார் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சுயேட்சை எம்.பி. பப்பு யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

போராட்டத்தின்போது, பப்பு யாதவ் காவி உடை அணிந்து போலி சாமியார் வேடத்தில் தோன்றி, உண்டியலில் காணிக்கை வசூலித்து அதை திருடுவது போன்ற நாடகத்தை அரங்கேற்றினார். மேலும், ராகுல் காந்தி உண்டியலில் காணிக்கை செலுத்துவது போன்ற காட்சியும் இடம்பெற்றது.

தொடர்ந்து, ஜூலை 20-ஆம் தேதி நடைபெற்ற பேரணியின்போது போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் நடத்திய நடவடிக்கைக்கு பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்பினர்.

AlsoRead

ஆவின் பால் விவகாரம்: உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்க வேண்டும்

தமிழக முதல்வர் தற்போது கர்நாடகா வர வேண்டாம்

3.70 லட்சம் குடும்பங்களுக்கு கூடுதல் மின்கட்டணம்: கணக்கெடுப்பு முறையை அரசு சீரமைக்க வேண்டும்

இதையடுத்து, மக்களவையிலும் மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டு அமளியில் ஈடுபட்டனர். உறுப்பினர்களை அமைதிப்படுத்த சபாநாயகர் ஓம் பிர்லா முயற்சி மேற்கொண்டாலும் அது பலனளிக்காததால், மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

மாநிலங்களவையிலும் அமளி தொடர்ந்ததால், அவைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், அவையை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக அறிவித்தார்.

பாஜக விமர்சனம்

இதற்கிடையே, நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே, “அடிப்படையற்ற கருத்துகளை தெரிவிப்பது ராகுல் காந்தியின் வழக்கமாகிவிட்டது. கடந்த 12 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இல்லாததால், அக்கட்சியினர் நிதானத்தை இழந்தது போல் தெரிகிறது” என்று விமர்சித்தார்.

Tags: அயோத்தி ராமர் கோயில்காணிக்கை திருட்டுபோராட்டம்
Previous Post

இந்திய ஸ்மார்ட்போன் ஏற்றுமதி 23.4 சதவீதம் உயர்வு

Next Post

காவிரி, மேகேதாட்டு விவகாரம்: உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்ட வேண்டும்

Related Posts

ஆவின் பால் விவகாரம்: உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்க வேண்டும்

ஆவின் பால் விவகாரம்: உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்க வேண்டும்

31/07/2026
தமிழக முதல்வர் தற்போது கர்நாடகா வர வேண்டாம்

தமிழக முதல்வர் தற்போது கர்நாடகா வர வேண்டாம்

31/07/2026

3.70 லட்சம் குடும்பங்களுக்கு கூடுதல் மின்கட்டணம்: கணக்கெடுப்பு முறையை அரசு சீரமைக்க வேண்டும்

31/07/2026

காவிரி, மேகேதாட்டு விவகாரம்: உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்ட வேண்டும்

31/07/2026

அசாமில் வெள்ள பாதிப்பு தீவிரம்: 3 லட்சம் பேர் பாதிப்பு

30/07/2026

மேகேதாட்டு தீர்மான திருத்தத்துக்கு எதிராக அதிமுக கொறடா வழக்கு

30/07/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • ஆவின் பால் விவகாரம்: உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்க வேண்டும்
  • தமிழக முதல்வர் தற்போது கர்நாடகா வர வேண்டாம்
  • 3.70 லட்சம் குடும்பங்களுக்கு கூடுதல் மின்கட்டணம்: கணக்கெடுப்பு முறையை அரசு சீரமைக்க வேண்டும்
  • காவிரி, மேகேதாட்டு விவகாரம்: உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்ட வேண்டும்
  • ராமர் கோயில் காணிக்கை திருட்டு: நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகளின் நூதன போராட்டம்

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved