Monday, August 17, 2026
28 °c
Tiruvannamalai
31 ° Mon
32 ° Tue
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

மணிப்பூரில் முடக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளை திறக்க இரு தரப்பினரும் இணைந்து செயல்பட வேண்டும்

-உச்சநீதிமன்றம்

admin by admin
16/08/2026
in இந்தியா
0
மணிப்பூரில் முடக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளை திறக்க இரு தரப்பினரும் இணைந்து செயல்பட வேண்டும்
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

மணிப்பூரில் குகி – நாகா சமூகத்தினரிடையே ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக முடக்கப்பட்டுள்ள தேசிய நெடுஞ்சாலைகளை மீண்டும் திறக்க இரு தரப்பினரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில் குகி – நாகா ஆகிய பழங்குடியின சமூகத்தினரிடையிலான மோதல் காரணமாக, காங்போக்பி மாவட்டம் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. இதனால் உணவு, மருந்து, எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், முடக்கப்பட்டுள்ள சாலைகளை மீண்டும் திறக்க உத்தரவிடக் கோரி ‘குகி பெண்கள் மனித உரிமைகள் அமைப்பு’ சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பக்ஷி மற்றும் வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

AlsoRead

அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

குழந்தைகள் பாலியல் சுரண்டல் உள்ளடக்கங்களை கட்டாயம் புகாரளிக்க வழிகாட்டு நெறிமுறை

கர்நாடக வனப்பகுதியில் வனத்துறையினர் துப்பாக்கிச்சூடு

அப்போது நீதிபதிகள் கூறியதாவது:-

“நெடுஞ்சாலைகள் முடக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர். சாலைகளை முடக்குவது யாருக்கும் பயனளிக்காது. எனவே, இரு தரப்பினரும் பரஸ்பரம் குற்றம்சாட்டுவதை விடுத்து, நெடுஞ்சாலைகளை திறப்பதற்கான நடைமுறை தீர்வை முன்வைக்க வேண்டும்.

வலுக்கட்டாயமாக சாலைத் தடுப்புகளை அகற்ற முயன்றால், அது மீண்டும் வன்முறைக்கு வழிவகுக்கக்கூடும். எனவே, பிரச்சினைக்கு அமைதியான முறையில் தீர்வு காண்பது அவசியம்.

தற்போது முடக்கப்பட்டுள்ள சாலைகளின் விவரங்களையும், அவற்றை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான திட்டத்தையும் சம்பந்தப்பட்ட தரப்பினர் தாக்கல் செய்ய வேண்டும்” என்று நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

மணிப்பூரில் நீடித்து வரும் சமூக மோதலால் அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் பாதிக்கப்படாமல் இருப்பதற்கும், பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு சாலைகளை மீண்டும் திறப்பதற்கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தையும் உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

Tags: உச்சநீதிமன்றம்தேசிய நெடுஞ்சாலைமணிப்பூர்
Previous Post

குழந்தைகள் பாலியல் சுரண்டல் உள்ளடக்கங்களை கட்டாயம் புகாரளிக்க வழிகாட்டு நெறிமுறை

Next Post

அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

Related Posts

அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

16/08/2026
குழந்தைகள் பாலியல் சுரண்டல் உள்ளடக்கங்களை கட்டாயம் புகாரளிக்க வழிகாட்டு நெறிமுறை

குழந்தைகள் பாலியல் சுரண்டல் உள்ளடக்கங்களை கட்டாயம் புகாரளிக்க வழிகாட்டு நெறிமுறை

16/08/2026

கர்நாடக வனப்பகுதியில் வனத்துறையினர் துப்பாக்கிச்சூடு

16/08/2026

ஜார்க்கண்ட்டில் 15-வது நாளாக மாணவர்கள் போராட்டம்

08/08/2026

ராமர் கோயில் காணிக்கை திருட்டு: நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகளின் நூதன போராட்டம்

31/07/2026

அசாமில் வெள்ள பாதிப்பு தீவிரம்: 3 லட்சம் பேர் பாதிப்பு

30/07/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி
  • கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை வேண்டும்
  • அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
  • மணிப்பூரில் முடக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளை திறக்க இரு தரப்பினரும் இணைந்து செயல்பட வேண்டும்
  • குழந்தைகள் பாலியல் சுரண்டல் உள்ளடக்கங்களை கட்டாயம் புகாரளிக்க வழிகாட்டு நெறிமுறை

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved