Friday, March 6, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

நாட்டேரிகிராமத்தில்புதியகல்வெட்டுகள்

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
16/12/2023
in Uncategorized
0
0
SHARES
21
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

திருவண்ணாமலை  மாவட்டம்,  வெம்பாக்கம்  வட்டம், நாட்டேரி  கிராமத்தில் 5 க்கும்  மேற்பட்ட கல்வெட்டுகள் கண்டறியப்பட்டன. திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் தொடர் களப்பணிகளின் போது நாட்டேரி கிராமத்தில் ஆவணப்படுத்தப்படாத கல்வெட்டுகள் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் ஆய்வு நடுவத்தைச் சேர்ந்த ச. பாலமுருகன், லோகேஷ், சி.பழனிச்சாமி, மதன்மோகன், தண்டராம்பட்டு ஸ்ரீதர், நந்தகுமார் ஆகியோர்கள் ஊர்பொதுமக்கள் உதவியுடன் கூட்டாக ஆய்வு செய்து கல்வெட்டுகளை  கண்டறிந்தனர்.

AlsoRead

“இந்தித் திணிப்பு வெறியில் எல்லை மீறுது பாஜக” – முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை; திமுக போராட்டம்

VSHORADS ஏவுகணை சோதனை வெற்றி: இந்திய வான் பாதுகாப்பு துறையில் புதிய புரட்சி!

வங்கதேசத்தில் 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: கொல்கத்தாவிலும் நில அதிர்வு – வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள்!

நாட்டேரி கிராமத்தில் ஏரிக்கரை அருகே உள்ள பாழடைந்த கோயிலில் முதலாம் குலோத்துங்கன் காலத்து கல்வெட்டுகள் 50க்கும் மேற்பட்ட துண்டுகளாக கிடைக்கின்றன. கல்வெட்டுகள் அமைந்துள்ள கற்கள் சிதறி காணப்படுவதாலும் இந்த கோயிலிலில் இருந்து கற்கள் பலவற்றை எடுத்துச் சென்று அருகில் உள்ள நாட்டேரி பெரிய ஏரியில் கலிங்குப்பகுதியில் பயன்படுத்தப்பட்டதாலும், எஞ்சிய கற்கள் ஊரில் உள்ள சிவன் கோயில் கட்டப் பயன்படுத்தப்பட்டதாலும் கல்வெட்டுகளின் முழுவிவரம் அறியப்பெறவில்லை. எனினும் கிடைத்த கல்வெட்டுகளின் படி, இவை நிலதானத்தைப் பற்றிய விரிவான தகவல்களை அளிக்கின்றன. இவ்வூர் இறைவன் பெயர் போந்தை பெருமான் என்றும் அந்த கோயிலுக்கு நிலம் இறையிலியாக விடப்பட்தென்றும் தெரியவருகிறது. மேலும் இவ்வூரில் பெருங்குறி மகாசபை என்ற அமைப்பு இருத்தென்றும் இந்த அமைப்பு ஊர் நிர்வாகத்தையும் கோயில் நிர்வாகத்தையும் நிர்வகித்த செய்திகள் தெரியவருகின்றன. மேலும் இவ்வூர் கல்வெட்டில் சுந்தரசோழப்பேரேரி என்ற குறிப்பும் காணப்படுகிறது. தற்போதை நாட்டேரி என்பது இந்த சுந்தரசோழப் பேரேரி என்பதலிருந்தும் வந்திருக்கலாம்.  மேலும் இந்த ஊரில் உள்ள அனுமன் கோயில் எதிரில் ஒரு தூணில் சிதைந்த நிலையில் ஒரு கல்வெட்டும் உள்ளது. இந்த கல்வெட்டு 10/11 நூற்றாண்டு எழுத்தமைதியில் உள்ளது. இக்கல்வெட்டில் பெருங்குறி மகாசபையின் செயல்பாடுகள் பற்றிய  தகவல் கிடைக்கின்றது. மேலும் இக்கோயில் அருகே உள்ள பலகைக்கல்லில் விஜயநகர அரசன் கம்பணன் காலத்து கல்வெட்டு உள்ளது. இக்கல்வெட்டில் இப்பகுதியை ஜெயங்ககொண்ட சோழமண்டலத்து தாமர் கோட்டத்து தாமர் நாட்டு பிரம்மதேசப்பற்றில் உள்ளதாக குறிப்பிடுகிறது. இக்கல்வெட்டில் அவ்வூரில்  திருவிடையாட்டமாக நிலம் தானம் செய்யப்பட்டது பற்றி குறிப்பிடுகிறது. எனவே இவ்வூரில் விஷ்ணு கோயில் இருந்ததற்கான குறிப்பும் கிடைக்கப்பெறுகிறது. இக்கல்வெட்டு குறிப்பிடும் திருபோந்தை ஆழ்வார் என்பதும்   பிரம்மதேசம் சந்திரமௌலீஸ்வரர் கோயில் இறைவன் போந்தை ஆழ்வார் என்பதும் ஒன்றே என்பது குறிப்பிடத்தக்கது. பிரம்மதேசம் ஊரில் உள்ள செல்லியம்மன் ஆலய கல்வெட்டுகள், கைலாசநாதர் கோயில் கல்வெட்டுகள், சந்திரமௌலீஸ்வரர் கோயில் கல்வெட்டுகள்  நாட்டேரி கல்வெட்டுகள் ஆகியவற்றை  முழுமையாக  கணக்கில் கொண்டால் சுமார் 130 க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் இருக்கும். இவற்றை மேலும் ஆய்வுக்கு உட்படுத்தினால் சோழர்காலத்தைப் பற்றியும் அப்பகுதி நீர்மேலாண்மைப் பற்றியும் மேலும் பல அரிய வரலாற்றுத் தகவல்கள் கிடைக்கப்பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிரம்மதேசம் கைலாச நாதர் கோயில் கல்வெட்டுகளும், நாட்டேரி கல்வெட்டுகளும் பாதுகாப்பின்றி உள்ளதால் உடன் சீரமைத்து வைக்க அரசு முன்வர வேண்டும் என வரலாற்று ஆர்வலர்கள் கோருகின்றனர்.

 

Previous Post

தேசூரில்  1500  ஆண்டுகளுக்கு முற்பட்ட நடுகற்கள் கண்டுபிடிப்பு

Next Post

திருவண்ணாமலையின் புதிய வரலாற்றைக் கூறும் சோழர் கால நடுகல் கல்வெட்டு கண்டுபிடிப்பு

Related Posts

Anti-Hindi Protest

“இந்தித் திணிப்பு வெறியில் எல்லை மீறுது பாஜக” – முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை; திமுக போராட்டம்

04/03/2026
VSHORADS Missile Test

VSHORADS ஏவுகணை சோதனை வெற்றி: இந்திய வான் பாதுகாப்பு துறையில் புதிய புரட்சி!

28/02/2026

வங்கதேசத்தில் 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: கொல்கத்தாவிலும் நில அதிர்வு – வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள்!

28/02/2026

‘அரசுப்பள்ளிகள் பெருமையின் அடையாளம்’

10/12/2025

140 ஆண்டு கால ஆஷஸ் டெஸ்ட் வரலாற்றில் இதுபோன்ற சம்பவம் நடந்ததே இல்லை..

21/11/2025

வி.ஐ.டி பல்கலைக்கழக வேந்தர் குடும்பத்தில் திருமண வரவேற்பு

28/09/2025

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!
  • ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை: ராணுவம் அதிரடி உத்தரவு!
  • ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி
  • மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்
  • “எளிய தொண்டரை எம்.பி.யாக்கும் காங்கிரஸ்!” -கிறிஸ்டோபர் திலக் குறித்து செல்வப்பெருந்தகை பெருமிதம்

Recent Comments

  1. Pearl4024 on “தி.மு.க. அரசின் திட்டங்கள் மக்களிடம் பேசுபொருளாக மாறியுள்ளன”
  2. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved