Friday, March 6, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

‘2026 மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி இல்லை’ : மம்தா பானர்ஜி தடாலடி அறிவிப்பு

Elumalai, Sub Editor by Elumalai, Sub Editor
12/02/2025
in இந்தியா
0
‘2026 மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி இல்லை’ : மம்தா பானர்ஜி தடாலடி அறிவிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

‘2026ம் ஆண்டு நடைபெறவுள்ள மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரசுடன் கூட்டணி அமைக்கப் போவதில்லை’ என்று மேற்குவங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரசின் தலைவருமான மம்தா பானர்ஜி தடாலடியாக அறிவித்துளளார்.

2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை ஒற்றுமையுடன் சந்திப்பதற்காக காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள், சமாஜ்வாதி உள்ளிட்ட 28 கட்சிகள் ஒன்றிணைந்து ’I-N-D-I-A’ என்ற பெயரில் கூட்டணி அமைத்தன. ஆனாலும் ’I-N-D-I-A’ கூட்டணி என்ற அமைப்பு இந்தியா முழுவதும் ஒரே மாதிரியாகச் செயல்படாமல் ‘ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு நிலைப்பாடு; ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒரு நிலைப்பாடு’ என்கிற நிலையில் அது பயணித்துக் கொண்டிருக்கிறது.

முக்கியமாக, ’I-N-D-I-A’ கூட்டணியை முழுமையாக ஒழுங்குபடுத்துவதில் காங்கிரஸ் முயற்சிகளை மேற்கொள்ளவில்லை என்கிற விமர்சனமும் முன்வைக்கப்படுகிறது.

இந்த நிலையில் டெல்லி சட்டசபைத் தேர்தலில் இக்கூட்டணியில் உள்ள காங்கிரசும் ஆம் ஆத்மியும் தனித்தனியாகப் போட்டியிட்டன. இதையடுத்து, மீண்டும் ’I-N-D-I-A’ கூட்டணி பற்றிய செய்தி விவகாரமெடுத்துள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற டெல்லி சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக தனிபெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியது. ’I-N-D-I-A’ கூட்டணியில் உள்ள ஆம் ஆத்மி – காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டதே பாஜகவின் வெற்றிக்கு வழிவகுத்ததாக பரவலாக கூறப்பட்டு வருகிறது. அப்படியெனில் இந்தக் கூட்டணி எதற்கு என்று மற்ற கூட்டணிக் கட்சிகள் கடுமையாக விமா்சித்து வருகின்றன.

இந்த சூழலில், ”அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மேற்குவங்க சட்டப்பேரவைத் தோ்தலிலும் காங்கிரசுடன் திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி அமைக்கப் போவதில்லை” என்று அக்கட்சியின் தலைவர் மம்தா பானா்ஜி அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவர் கூறும்போது, ”டெல்லியில் ஆம் ஆத்மிக்கு காங்கிரஸ் உதவவில்லை. ஹரியானாவில் காங்கிரசுக்கு ஆம் ஆத்மி உதவவில்லை. இதனால், அவ்விரு மாநிலங்களிலும் பாஜக வெற்றிபெற்றுள்ளது. ’I-N-D-I-A’ கூட்டணிக் கட்சிகள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். இல்லையெனில், பாஜகவை வீழ்த்துவது கடினம்.

AlsoRead

ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி

ஈரான் போர்க்கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்: “பிரதமரின் மௌனம் ஆபத்தானது” -ராகுல் காந்தி கடும் விமர்சனம்

பிஹார்: முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் நிதிஷ் குமார்! மாநிலங்களவை தேர்தலில் போட்டி

அதேசமயம், காங்கிரசுக்கு மேற்கு வங்கத்தில் எந்தச் செல்வாக்கும் இல்லாததால் திரிணாமுல் தனித்துப் போட்டியிடும். மாநிலத்தில் தொடா்ந்து 4வது முறையாக திரிணாமுல் ஆட்சியமைக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலின்போது ’I-N-D-I-A’ கூட்டணியில் காங்கிரசும், திரிணாமூல் காங்கிரசும் ஓரணியாக இருந்தபோதும், தோ்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு மேற்கு வங்கத்தில் தனித்துப் போட்டியிடும் முடிவை மம்தா பானா்ஜி அறிவித்தாா்.

இதன்பின்னரே, அரவிந்த் கெஜ்ரிவாலும் இத்தகைய முடிவை எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இரு கட்சிகளும் தனித்து நின்று போட்டியிட்டதால் பாஜக மிகச் சாதாரணமாக டெல்லியை கைப்பற்றிவிட்டது.

Tags: CongressMamtha banerjeeTamilNews
Previous Post

மோசடி கணக்குகளை அடையாளம் காண ‘மியூல்ஹன்டர் ஏஐ’ தொழில்நுட்பம் : மத்திய அமைச்சர் அமித் ஷா தகவல்

Next Post

தவெக-வில் 28 அணிகள் உருவாக்கம் : குழந்தைகளுக்கும் ஒரு அணி

Related Posts

Vikram Misri

ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி

05/03/2026
Rahul Gandhi

ஈரான் போர்க்கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்: “பிரதமரின் மௌனம் ஆபத்தானது” -ராகுல் காந்தி கடும் விமர்சனம்

05/03/2026

பிஹார்: முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் நிதிஷ் குமார்! மாநிலங்களவை தேர்தலில் போட்டி

05/03/2026

மத்திய கிழக்கு போர் பதற்றம்: இந்தியாவுக்கு எண்ணெய் வழங்க முன்வந்த ரஷ்யா – முழு விவரம்!

04/03/2026

சந்திர கிரகணம்: திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை சாத்தப்பட்டது – தரிசன நேரத்தில் மாற்றம்!

03/03/2026

ஈரான் – இஸ்ரேல் மோதல்: இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து பிரதமர் மோடி பேச்சு

02/03/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!
  • ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை: ராணுவம் அதிரடி உத்தரவு!
  • ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி
  • மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்
  • “எளிய தொண்டரை எம்.பி.யாக்கும் காங்கிரஸ்!” -கிறிஸ்டோபர் திலக் குறித்து செல்வப்பெருந்தகை பெருமிதம்

Recent Comments

  1. Pearl4024 on “தி.மு.க. அரசின் திட்டங்கள் மக்களிடம் பேசுபொருளாக மாறியுள்ளன”
  2. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved