Monday, July 27, 2026
34 °c
Tiruvannamalai
32 ° Tue
32 ° Wed
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

சபாநாயகரை நீக்கக்கோரும் தீர்மானம் தோல்வி

Elumalai, Sub Editor by Elumalai, Sub Editor
17/03/2025
in தமிழ்நாடு
0
வலுவான நிதிநிலை கொண்ட மாநிலங்கள் : தமிழகத்திற்கு 11 ஆவது இடம்
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

அதிமுக கொண்டுவந்த சபாநாயகரை நீக்கக்கோரும் தீர்மானம் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

ராதாபுரம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வான அப்பாவு, கடந்த 4 ஆண்டுகளாக சபாநாயகராக பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில், சபாநாயகர் அப்பாவுவை அந்த பதவியில் இருந்து நீக்கக்கோரும் தீர்மானத்தை சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் உதயகுமார் (அ.தி.மு.க.) கடந்த ஜனவரி மாதம் கொடுத்து இருந்தார். தற்போது நடக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே, அதாவது நேற்று (17ம் தேதி) அந்த தீர்மானத்தின் மீது விவாதிக்க முடிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், நேற்று காலை சட்டமன்ற கூட்டத்தின் தொடக்கத்தில் திருக்குறளை படித்து அவையை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்ததும், மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் டாக்டர் செரியன் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. அதன் பிறகு கேள்வி நேரம் நடைபெற்றது.

கேள்வி நேரம் முடிந்ததும் நேரமில்லா நேரமான ‘ஜீரோ அவர்’ எடுக்கப்பட்டது. அப்போது உதயகுமார் தனது தீர்மானத்தை உடனே வாக்கெடுப்புக்கு விடும்படி கோரினார். தீர்மானம் உடனே எடுத்துக் கொள்ளப்பட்டது. இதனால், சபாநாயகர் அப்பாவு, தனது இருக்கையில் இருந்து எழுந்து வெளியே சென்றார்.

பின்னர் துணை சபாநாயகர், சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து வாக்கெடுப்பை நடத்தினார். பின்னர் அந்த தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி பேசினார். இந்நிலையில், இந்த தீர்மானம் மீது நடந்த விவாதத்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதில் அளித்துப் பேசினார்.அதன் பின்னர் குரல் வாக்கெடுப்புக்கு தீர்மானம் விடப்பட்டது.

AlsoRead

காவிரி உரிமை பேச்சுவார்த்தைக்காக கர்நாடகா செல்லும் முடிவை முதல்வர் கைவிட வேண்டும்

88வது பிறந்த நாளில் அரசியல் துறவறம் அறிவித்தார் பாமக நிறுவனர் ராமதாஸ்

மாணவர் போராட்டத்தை திசைதிருப்ப முயற்சி; அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்

தீர்மானத்தை ஏற்று ‘ஆம்’ என்று ஒலிக்கும் மொத்த குரலையும், ‘இல்லை’ என்று ஒலிக்கும் குரலையும் துணை சபாநாயகர் கணக்கிட்டுக் கொண்டார். இதில், இந்த தீர்மானம் தோல்வி அடைந்தது என அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து டிவிஷன் முறையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இந்த நிலையில், நேரம் குறிக்கப்பட்டு அவையின் நுழைவு வாயில்கள் அடைக்கப்பட்டன. அந்த நேரத்தில் வெளியே சென்றிருந்தால், அவர் அமைச்சர் என்றாலும் அல்லது எம்.எல்.ஏ. என்றாலும் யாரும் அவைக்குள் வர முடியாது என்பது விதியாகும்.

அந்த வாக்கெடுப்பை சட்டசபை செயலாளர் நடத்தினார். தமிழக சட்டசபையில் 6 டிவிஷன்கள் உள்ளன. ஒவ்வொரு டிவிஷனிலும் உள்ள எம்.எல்.ஏ.க்களை எழுந்து நிற்க செய்து அவர்களின் வாக்குகளை சட்டசபை செயலாளர் பெற்று, அதை எண்ணிக் கணித்து, அதை துணை சபாநாயகரிடம், சட்டசபை செயலாளர் அளிப்பார். அதன் அடிப்படையில் தீர்மானத்தின் முடிவை துணை சபாநாயகர் அறிவிப்பார்.

இந்நிலையில், சபாநாயகரை நீக்கக்கோரிய நம்பிக்கையில்லா தீர்மானம் மீது குரல் மற்றும் டிவிசன் என 2 முறையில் நடந்த வாக்கெடுப்பு தோல்வி அடைந்தது என அறிவிக்கப்பட்டுள்ளது. டிவிஷன் முறையில் இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 63 வாக்குகளும், எதிர்ப்பு தெரிவித்து 154 வாக்குகளும் விழுந்தன.

இதனால், சபாநாயகரை நீக்கக்கோரி அ.தி.மு.க. கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்துள்ளது என அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, சபாநாயகர் அப்பாவு மீண்டும் சபாநாயகர் இருக்கையில் வந்தமர்ந்து, அடுத்த அலுவல்களை மேற்கொள்ள உத்தரவு பிறப்பித்துள்ளார். தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு வழக்கம்போல் அவையை வழிநடத்தும் பணியைத் தொடங்கினார்..

Tags: Motion to remove Speaker failsTamilnadu NewsTn Assembly
Previous Post

80 கோடி பேருக்கு இலவச உணவு? சாதனையா? வேதனையா?

Next Post

பா.ஜ.க., தலைவர் அண்ணாமலை கைது

Related Posts

காவிரி உரிமை பேச்சுவார்த்தைக்காக கர்நாடகா செல்லும் முடிவை முதல்வர் கைவிட வேண்டும்

காவிரி உரிமை பேச்சுவார்த்தைக்காக கர்நாடகா செல்லும் முடிவை முதல்வர் கைவிட வேண்டும்

25/07/2026
88வது பிறந்த நாளில் அரசியல் துறவறம் அறிவித்தார் பாமக நிறுவனர் ராமதாஸ்

88வது பிறந்த நாளில் அரசியல் துறவறம் அறிவித்தார் பாமக நிறுவனர் ராமதாஸ்

25/07/2026

மாணவர் போராட்டத்தை திசைதிருப்ப முயற்சி; அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்

25/07/2026

கர்நாடகா செல்லும் முடிவை முதல்வர் விஜய் கைவிட வேண்டும்

24/07/2026

சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றினால்தான் ரீல் ஹீரோ, ரியல் ஹீரோ ஆக முடியும்

24/07/2026

மேகேதாட்டு அணை விவகாரம்: ஆகஸ்ட் 3-ல் கர்நாடகா செல்லும் முதல்வர் விஜய்

24/07/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • இந்திய ரூ.200, ரூ.500 நோட்டுகளுக்கு நேபாளம் அனுமதி
  • யுனெஸ்கோ உலகப் பாரம்பரியப் பட்டியலில் சாரநாத்
  • தர்மேந்திர பிரதானின் ராஜினாமா: ‘பொது வாழ்வில் நேர்மையின் உயரிய எடுத்துக்காட்டு’
  • பாஜக அரசை அகற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது
  • காவிரி உரிமை பேச்சுவார்த்தைக்காக கர்நாடகா செல்லும் முடிவை முதல்வர் கைவிட வேண்டும்

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved