Thursday, July 23, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

கலைஞரின் தமிழ் பற்று தெரியும் ; எம்.ஜி.ஆரின் தமிழ் பற்று தெரியுமா?

கலைஞர் கருணாநிதியின் தமிழ் பற்று குறித்து நாம் அறிந்ததே. ஆனால் எம்ஜிஆரும் தமிழ் மீது அளவற்ற பற்று வைத்திருந்தார்.

K.Madhavan, Chief Editor by K.Madhavan, Chief Editor
09/04/2025
in தமிழ்நாடு
0
கலைஞரின் தமிழ் பற்று தெரியும் ; எம்.ஜி.ஆரின் தமிழ் பற்று தெரியுமா?

முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் மற்றும் கருணாநிதி

0
SHARES
59
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

கலைஞர் மு.கருணாநிதியின் தமிழ் பற்றி, தமிழ் புலமை, அற்புதமான தமிழ் செழுமை பற்றி ஒட்டுமொத்த உலகிற்கே தெரியும். எம்.ஜி.ஆரும்., தமிழ் மொழியை எந்த அளவு நேசித்தார், தமிழுக்காக எவ்வளவு செய்திருக்கிறார் என்பதை கேட்டாலே ஆச்சர்யமாக உள்ளது. அந்த அளவு தமிழ் மீது பற்றுடன் வாழ்ந்திருக்கிறார் எம்.ஜி.ஆர்.,

அதுகுறித்து இன்று இந்த கட்டுரையில் தெரிஞ்சுக்குவோமா?

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் தமிழில் ஆழ்ந்த புலைமை கொண்டிருந்ததோடு தமிழ் மொழி மீது அதிக பற்றும் கொண்டவராகத் திகழ்ந்தார். தன்னை உயர்த்தியது தமிழும் தமிழ்நாடும் தான் என்பதை தனது செயல்பாடுகள் மூலம் எம்.ஜி.ஆர். வெளிப்படுத்தியிருக்கிறார். தமிழுக்காக உழைத்தவர்களின் பெயர்கள் நிலைத்து நிற்க பெரும் முயற்சி செய்தார்.

1974-ம் ஆண்டு பாண்டிச்சேரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரசாரத்துக்கு எம்.ஜி.ஆர். சென்றார். மாஹே என்ற இடத்தில் பிரசாரக் கூட்டம். அந்தப் பகுதியில் மலையாள மொழி பேசும் மக்கள் அதிகம். மக்கள் அளித்த வரவேற்பை ஏற்றுக் கொண்டு எம்.ஜி.ஆர். பேசத் தொடங்கினார். அவரது பேச்சை இடைமறித்து, மலையாளத்தில் பேசுமாறு கூட்டத்தில் இருந்த பலர் கேட்டுக் கொண்டனர்.

தமிழ் மீது பற்றுக் கொண்ட எம்.ஜி.ஆர் பொறுமையாக பதிலளித்தார். ‘‘எனக்கு நன்றாகத் தெரிந்த மொழி தமிழ் மட்டும் தான். சிறுவயதில் நாடக மேடை மூலம் தமிழ் கற்றுக் கொண்டேன். வெளியில் மட்டுமின்றி, வீட்டிலும் தமிழில் தான் பேசுவேன்.

நான் வளர்ந்து, புகழ்பெற்று, இன்று உங்கள் முன் நிற்பதற்கு என்னை அரவணைத்து ஆளாக்கிய தமிழகம் தான் காரணம். எனவே, தமிழில் தான் பேசுவேன். விருப்பம் உள்ளவர்கள் என் பேச்சைக் கேட்கலாம்.’’ என்றார் புரட்சித் தலைவர். அங்கிருந்த கூட்டத்தினர் அவரது தமிழ் உணர்வைக் கண்டு வியந்தனர்.

தமிழுக்கு தொண்டாற்றி ‘முத்தமிழ் காவலர்’ என்று போற்றப்பட்டவர் கி.ஆ.பெ. விசுவநாதம். உலகின் தொன்மையான மொழிகளில் ஒன்றான தமிழ் மொழிக்கு என்று ஒரு தனிப்பல்கலைக் கழகம் அமைக்க வேண்டும் என்பது அவரது விருப்பம்.

எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது அவரிடம் தனது விருப்பத்தைச் சொன்னார். உடனடியாக அதற்கு எம்.ஜி.ஆர். மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார். கி.ஆ.பெ.விசுவநாதத்தையே அதற்கான திட்டங்களை தயாரிக்கும்படி எம்.ஜி.ஆர். கேட்டுக்கொண்டதோடு, ஒரு குழுவை அமைத்து அதற்கு அவரையே தலைவராகவும் நியமித்தார்.

அப்படி எம்.ஜி.ஆர். ஆட்சியில் 1981-ம் ஆண்டு பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ம் தேதி உருவாக்கப்பட்டது தான் தஞ்சைத் தமிழ் பல்கலைக்கழகம். தமிழறிஞர் டாக்டர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனாரின் குடும்பத்தாருடன் எம்.ஜி.ஆருக்கு நல்ல தொடர்பு உண்டு. தெ.பொ.மீனாட்சி சுந்தரனாரின் மறைவுக்குப் பிறகு, அவர் துணைவேந்தராகப் பணியாற்றிய மதுரைப் பல்கலைக் கழகத்தில் அவரது திருவுருவச் சிலையை எம்.ஜி.ஆர். திறந்து வைத்தார்.

தனது இறுதிமூச்சு வரை தமிழுக்காகவே முழங்கியவர் தேவநேயப் பாவாணர். அவருக்கு எம்.ஜி.ஆருடன் நல்ல நட்பு உண்டு. 1981-ம் ஆண்டு மதுரையில் உலகத் தமிழ் மாநாட்டை நடத்தி, தமிழுக்கு சிறப்பு சேர்த்தார் மக்கள் திலகம். மாநாட்டில் பாவாணரின் பேச்சை எம்.ஜி.ஆர். ஆர்வத்துடன் ரசித்தார். தேவநேயப் பாவாணர் தமிழில் மட்டுமின்றி பல மொழிகளிலும் தேர்ச்சி மிக்கவர்.

உலகில் உள்ள எத்தனை மொழிகளுக்கு தமிழ் மூலமொழியாக விளங்குகிறது என்பதையும் எத்தனை மொழிச் சொற்களுக்கு தமிழே வேர்ச் சொல்லாக விளங்குகிறது என்பதையும் ஆதாரபூர்வமான கருத்துக்களுடன் பாவாணர் சுவைபடப் பேசிக் கொண்டே போனார். சாப்பாட்டு நேரமும் கடந்து விட்டது. சாப்பாட்டையும் மறந்து அவரது பேச்சை எம்.ஜி.ஆர். ரசித்துக் கேட்டார். கூட்டமும் ஆர்ப்பரித்தது.

பாவாணரின் மறைவுக்குப் பிறகு, அவரது பெயர் நிலைத்து நிற்கும் வகையில் மாவட்ட நூலகங்களுக்கு பாவாணரின் பெயரை சூட்ட அன்றைய முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். உத்தரவிட்டார். இதேபோல், அரசு அலுவலர்கள் தமிழில் கையொப்பம் இடவேண்டும் என்று ஆணையிட்டதோடு, அதற்கு தானே முன்னுதாரணமாகவும் இருந்தவர் எம்.ஜி.ஆர்.

AlsoRead

“ஆணவம் அழிவிற்கு வழி!” – அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு – சென்னை முதல் நெல்லை வரை பரபரப்பு!

“மரணத்தைவிட கொடியது புறக்கணிப்பு” – எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதி அதிமுகவிலிருந்து விலகினார் வைகைச்செல்வன்!

இதேபோல், மதுரையில் தமிழன்னைக்கு சிலை அமைப்பதில் தொடங்கி, தமிழ் மொழியை உலக அளவில் கொண்டு செல்வதற்கு அவர் எடுத்த பல முயற்சிகள் மூலம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு இருந்த தமிழ்ப் பற்றை நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது.

-மா.பாண்டியராஜ்.

Tags: Kalignar KarunanidhiM.KarunanidhiMakkal ThilakamMG.RamachandranTamil Devotion
Previous Post

விரக்தியில் பேசுகிறார் எடப்பாடி- திருமாவளவன் கருத்து

Next Post

“நான் தான் இனிமேல் பாமக தலைவர்” : அன்புமணியின் பதவியை பறித்த நிறுவனர் ராமதாஸ்

Related Posts

Anitha Radhakrishnan Arrest

“ஆணவம் அழிவிற்கு வழி!” – அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

03/07/2026
Vigilance Search TN Government Offices

40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு – சென்னை முதல் நெல்லை வரை பரபரப்பு!

03/07/2026

“மரணத்தைவிட கொடியது புறக்கணிப்பு” – எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதி அதிமுகவிலிருந்து விலகினார் வைகைச்செல்வன்!

03/07/2026

“திமுகவை விட்டு விலக போலீஸார் கட்டாயப்படுத்தினர்” – கைதான அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு பேட்டி!

03/07/2026

தம்பி குடும்பத்தை தாக்கிய வழக்கு: அமைச்சர் மரிய வில்சன் கோர்ட்டில் ஆஜராக உத்தரவு

03/07/2026

முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் அதிரடி கைது!

03/07/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • “ஆணவம் அழிவிற்கு வழி!” – அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!
  • ‘மின் வாகன பேட்டரிகளை முடக்கும் ஆபத்து’ – 7 செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடை!
  • 40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு – சென்னை முதல் நெல்லை வரை பரபரப்பு!
  • மக்களே உஷார்! ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ள புதிய விதிகள், கட்டண உயர்வுகள்! என்னென்ன தெரியுமா?
  • “மரணத்தைவிட கொடியது புறக்கணிப்பு” – எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதி அதிமுகவிலிருந்து விலகினார் வைகைச்செல்வன்!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved