Friday, March 6, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

திமுக கூட்டணியை பலவீனப்படுத்த ஒரே துருப்பிச் சீட்டு வி.சி.க.,தான் :  திருமா வீடியோ பதிவு

Elumalai, Sub Editor by Elumalai, Sub Editor
20/04/2025
in தமிழ்நாடு
0
வலுவிழந்து வரும் அ.தி.மு.க ; தொல்.திருமாவளவன் கருத்து
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

திமுக கூட்டணியை பலவீனப்படுத்த எதிரணியினருக்கு இருக்கும் ஒரே துருப்புச் சீட்டு வி.சி.க.,தான். அதை கவனமாக கடந்துசெல்லவேண்டும் என வி.சி.க., தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

விசிக தி.மு.க.,வை மட்டுமே நம்பி இருப்பதுபோன்ற தோற்றத்தை உருவாக்கி திமுக கூட்டணியை சிதைக்க சில புல்லுருவிகள் திட்டமிட்டு பேசி வருகிறார்கள். அதில் நாம் கவனமாக இருக்கவேண்டும்” என விடுதலை சிறுத்தைக் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து திருமாவளவன் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:-

ஒரு நாள் கூட ஓய்வு இல்லை. ஒரு மணி நேரம் கூட தனிமை இல்லை என்கிற நிலை நீடிக்கிறது. கட்சி பணியில் கவனம் செலுத்த முடியாத நிலையிலும் கூட, மஞ்சள் நீராட்டு, திருமண நிகழ்ச்சிகளுக்கும் அழுத்தம் கொடுத்து அழைத்து செல்வதில் நமது கட்சியினர் குறியாக இருக்கிறீர்கள். 24 மணி நேரமும் உங்களுடன் இருக்க வேண்டும் என்பதில் எனக்கு எந்த சங்கடமும் இல்லை.

ஆனால் எந்த பணிக்கு முன்னுரிமை தர வேண்டும் என்பது முக்கியமானது. ஏதோ நாம் தி.மு.க.,வை மட்டுமே நம்பிக்கிடக்கிறோம் என்ற தோற்றத்தை உருவாக்குகிறார்கள். அந்த அற்பர்களின் தோற்றத்தை நாம் கடந்து செல்கிறோம் என்றாலும் கூட இயக்கத் தோழர்கள் அதில் தெளிவைப் பெற வேண்டும். தேர்தல் அரசியலில் எந்த முடிவையும் நம்மால் எடுக்க முடியும். அது ஒன்றும் பெரிய கம்ப சூத்திரம் இல்லை.

AlsoRead

தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!

மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்

“எளிய தொண்டரை எம்.பி.யாக்கும் காங்கிரஸ்!” -கிறிஸ்டோபர் திலக் குறித்து செல்வப்பெருந்தகை பெருமிதம்

எல்லா கதவுகளையும் திறந்து வைத்து இருப்பது. ஒரே நேரத்தில் பலரோடு பேரம் பேசுவது. கூடுதல் பேரம் பலிக்கும் இடத்தில் உறவை வைத்துக் கொள்வது, கூட்டணியை தீர்மானிப்பது எல்லாம் பெரிய ராஜதந்திரம் இல்லை. அது சுயநலம் சார்ந்த சந்தர்ப்பவாத அரசியல். நாம் அதை பொருட்படுத்தவில்லை, ஈடுபாடுகாட்டவில்லை.

எந்த எதிர்பார்ப்பும், நிபந்தனையும் இல்லாமல் ஒரு கூட்டணியில் தொடர்கிறோம் என்று சொன்னால் அதற்கும் ஒரு துணிச்சல், தெளிவு, தொலைநோக்கு பார்வை வேண்டும். இதை புரிந்து கொள்ள முடியாத புள்ளர்கள், அற்பர்கள் வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்ற வகையில் நமக்கு எதிரான அவதூறுகளை தொடர்ந்து பரப்பி வருகிறார்கள்.

வி.சி.க., பிற அரசியல் கட்சிகளை போல் இல்லாமல், ஒரு முன் மாதிரியாக இயங்கக் கூடிய அரசியல் கட்சி என்பதை காலம் சுட்டிக்காட்டி வருகிறது. தொடர்ந்து அதை உறுதிப்படுத்தும். தி.மு.க., கூட்டணியை பலவீனப்படுத்த அவர்களிடம் உள்ள ஒரே துருப்புச்சீட்டு வி.சி.க., தான்.

கூட்டணி உறவு

எங்களது தொலைநோக்குப் பார்வையை பொறுத்துக் கொள்ளாத அற்பர்கள் அவதுாறு பரப்புகின்றனர். தோழர்கள் மிக கவனமாக இருக்க வேண்டும்.ஆளும் கட்சியோடு இருக்கும் முரண் என்பது வேறு, கூட்டணி தொடர்பாக நாம் கையாளும் உத்தி என்பது வேறு. ஆளும் கட்சியோடு நாம் வைக்கும் கோரிக்கை வேறு. தி.மு.க., உடன் நாம் வைத்திருக்கும் கூட்டணி உறவு என்பது வேறு. இதனை நாம் புரிந்து கொண்டு கவனமாக இயங்க வேண்டும். தேர்தல் நெருங்கும் நேரத்தில் கட்சியினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவ்வாறு திருமாவளவன் பேசியுள்ளார்.

Tags: DMK allianceThol ThirumavalavanVCK Party
Previous Post

42 ஆண்டு கட்சிப் பணி செய்தவருக்கு கிடைத்த ‘தர்மஅடி’

Next Post

மனம் மாறிய துரை வைகோ : முதன்மை செயலர் பதவி விலகல் வாபஸ்

Related Posts

Tamil Nadu Rajya Sabha Members

தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!

05/03/2026
PMK Swaminathan

மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்

05/03/2026

“எளிய தொண்டரை எம்.பி.யாக்கும் காங்கிரஸ்!” -கிறிஸ்டோபர் திலக் குறித்து செல்வப்பெருந்தகை பெருமிதம்

05/03/2026

சென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. தர்மாதிகாரி நியமனம்

05/03/2026

காங்கிரஸ் கூட்டணி ஒப்பந்தம் ‘க்ளோஸ்’: வைரல் சைகை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்!

05/03/2026

தமிழக காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளராக கிறிஸ்டோபர் திலக் அறிவிப்பு – முழு விவரங்கள்

05/03/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!
  • ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை: ராணுவம் அதிரடி உத்தரவு!
  • ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி
  • மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்
  • “எளிய தொண்டரை எம்.பி.யாக்கும் காங்கிரஸ்!” -கிறிஸ்டோபர் திலக் குறித்து செல்வப்பெருந்தகை பெருமிதம்

Recent Comments

  1. Pearl4024 on “தி.மு.க. அரசின் திட்டங்கள் மக்களிடம் பேசுபொருளாக மாறியுள்ளன”
  2. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved