வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மேல்ஆலத்தூரில் இருந்து அகரம் சேரி செல்லும் பாலாற்றுக்கு இடையே கிராம மக்களால் அமைக்கப்பட்டு இருந்த தற்காலிக மண் சாலை பாலாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.
இதனால் மேல் ஆலத்தூர், கொத்தகுப்பம், பட்டு, கூடநகரம், பீமாபுரம், அலங்காநல்லூர், ஆலாம்பட்டறை, உள்ளிட்ட சுமார் 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பள்ளிகொண்டா மற்றும் தேசிய நெடுஞ்சாலைக்குச் செல்ல 15 கிலோமீட்டர் சுற்றிச் செல்லும் சூழல் உருவாகியுள்ளது.
இந்த தற்காலிக மண் சாலை அமைத்து பாலாற்றில் வெள்ளம் ஏற்படும் போதெல்லாம் அடித்துச் செல்லப்படுகிறது.
தற்போது மேல்ஆளத்தூர், அகரம் சேரி, பாலாற்றின் குறுக்கே பாலம் அமைக்க தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்தும் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர் .
இந்த தற்காலிக மண் பாலத்தை உடனடியாக தரைப்பாலமாக அமைத்துத் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



