Sunday, September 6, 2026
35 °c
Tiruvannamalai
32 ° Mon
33 ° Tue
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்- ஓரணியில் தமிழ்நாடு

ஆரணியில் உறுதிமொழி பொதுக்கூட்டம் நடைபெற்றது

admin by admin
22/09/2025
in செய்திகள்
0
தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்- ஓரணியில் தமிழ்நாடு
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே பையூர் கிராமத்தில் திமுக சார்பில்
“தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்- ஓரணியில் தமிழ்நாடு” என்ற உறுதிமொழி பொதுக்கூட்டம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் திருவண்ணாமலை மாவட்ட செயலாளரும் ஆரணி நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ். தரணிவேந்தன் தலைமையில் நடைபெற்றது.

AlsoRead

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

தி.மு.க மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.அம்பேத்குமார், ஓ.ஜோதி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சிவானந்தம், பாண்டுரங்கன், அன்பழகன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் கே.வி.ராஜ்குமார், வேல்முருகன், மாவட்ட துணைச் செயலாளர் ஜெயராணி ரவி, மாவட்ட பொருளாளர் தட்சிணாமூர்த்தி, மாவட்ட அவைத் தலைவர் ராஜசேகரன், மாவட்ட துணை செயலாளர் லோகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆரணி நகர பொறுப்பாளர் வ. மணிமாறன் வரவேற்பு உரையாற்றினார். நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள், பொதுமக்கள், “தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் – ஓரணியில் தமிழ்நாடு” என்ற உறுதிமொழியை ஏற்றனர்.
தொடர்ந்து, சமூக நீதி கண்காணிப்புக்குழு தலைவரும், திராவிட இயக்க தமிழர் பேரவைத்தலைவருமான பேராசிரியர் சுப.வீரபாண்டியன் சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது:-

“தமிழ்நாடு முதலமைச்சரைப் பார்த்து ஒருவர் கேட்கிறார், முதலீடுகளை வாங்கச் சென்றீர்களா அல்லது முதலீடுகளை ஈர்க்கச் சென்றீர்களா என்று.
எங்களுக்கு வருத்தம் இல்லை. அவர்களுக்குத் தெரியாது. இரண்டும் தான். தமிழ்நாட்டிற்கு எவ்வளவு முதலீடு? 15ஆயிரம் கோடி நம்முடைய முதலமைச்சர் முதலீடுகள் ஈர்த்து வந்துள்ளார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பெரியார் படத்தை முதலீடாக கொடுத்து வந்துள்ளார். இன்றைய தலைமுறையை காப்பாற்றவும் அடுத்த தலைமுறைக்கும் விதை போட்டு வந்துள்ளோம். எத்தனை ஆயிரம் பேருக்கு வேலை? இதுதான் திராவிட மாடல்.

முன்னாள் ஆளுநர் தமிழசை சௌந்தராஜன் இப்போது பேசி இருக்கின்றார். திமுகவை வீட்டிற்கு அனுப்பும் ஆசை எங்களுக்கும் இருக்கிறது. விஜய்க்கும் இருக்கிறது. இது புதிய கூட்டணி. அறிவிக்கப்படாத கூட்டணி. புரிந்து கொள்ளுங்கள். உங்களை வீட்டிற்கு அனுப்பும் கடமை மக்களுக்கு உள்ளது.. ஏற்கனவே உங்களை வீட்டிற்கு அனுப்பி விட்டார்கள். காமராஜர், ராஜாஜி இருவரும் இருக்கும் போதே வீழ்த்த முடியாத இயக்கம் திமுக. நீங்களும் (பிஜேபி) விஜய்யும் இணைந்து விளையாட்டைத் தொடங்கலாம் தவிர வெற்றி பெற முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் ஆரணி நகர மன்றத் தலைவர் ஏ.சி.மணி, ஒன்றிய செயலாளர்கள் எஸ். எஸ்.அன்பழகன், வழக்கறிஞர் சுந்தர், துரைமாமது, எஸ். மோகன், ஒன்றிய பொறுப்பாளர் ராஜ்குமார் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Tags: எம்.எஸ். தரணிவேந்தன்ஓரணியில் தமிழ்நாடுதமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
Previous Post

வாலாஜா பகுதியில் 2 போலி மருத்துவர்கள் கைது

Next Post

டெல்லியில் முக்காடு போட்டு வந்த எடப்பாடி தமிழ்நாட்டையே முக்காடு போட வைத்து விடுவார்

Related Posts

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

18/08/2026
அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

18/08/2026

சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

16/08/2026

கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை வேண்டும்

16/08/2026

அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

16/08/2026

மணிப்பூரில் முடக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளை திறக்க இரு தரப்பினரும் இணைந்து செயல்பட வேண்டும்

16/08/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
  • மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்
  • டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக 100 சிக்சர்கள்:
  • அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:
  • சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved