Friday, March 6, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

7 போரை நிறுத்தி இருக்கிறேன் எனக்கு நோபல் பரிசு தந்தே ஆக வேண்டும்

டிரம்ப் மீண்டும் அடம்

admin by admin
22/09/2025
in உலகம்
0
7 போரை நிறுத்தி இருக்கிறேன் எனக்கு நோபல் பரிசு தந்தே ஆக வேண்டும்
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

இந்தியா, பாகிஸ்தான் மோதலை நிறுத்திய எனக்கு கட்டாயம் நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் தமது ஆசையை வெளிப்படுத்தி உள்ளார்.

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றாலும் அவரின் அதிரடி நடவடிக்கைகள் குறையவில்லை. மே 10-ம் தேதி முதல் பேச ஆரம்பித்த நோபல் பரிசு விவகாரத்தை மீண்டும் பேச ஆரம்பித்து இருக்கிறார். உலக நாடுகள் இடையே 7 போர்களை நிறுத்தியவன், இந்தியா-பாக். மோதலும் என்னால் தான் தீர்த்து வைக்கப்பட்டது என்று விடாமல் அறிவித்து வருகிறார் டிரம்ப். அவரின் கூற்றை இந்தியா முற்றிலும் நிராகரித்துள்ளது. 3-ம் நாட்டின் தலையீட்டை அனுமதித்தது இல்லை என்றும் விளக்கம் அளித்துவிட்டது.

AlsoRead

ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை: ராணுவம் அதிரடி உத்தரவு!

இந்தியப் பெருங்கடலில் ஈரான் போர்க்கப்பலை மூழ்கடித்த அமெரிக்கா: 100-க்கும் மேற்பட்ட வீரர்கள் பலி

இந்தியப் பெருங்கடலில் ஈரான் போர்க்கப்பல் மூழ்கடிப்பு: 100-க்கும் மேற்பட்ட வீரர்கள் மாயம்; நீர்மூழ்கித் தாக்குதலா?

ஆனாலும், இந்தியா, பாகிஸ்தான் மோதலை முன்வைத்து அதை நான் தான் தீர்த்து வைத்தேன், எனவே எனக்கு நோபல் பரிசை தர வேண்டும் என்று தமது ஆசையை போட்டு அமெரிக்காவில் கல்வி நிறுவனத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது உடைத்திருக்கிறார். அந்த நிகழ்ச்சியில் டிரம்ப் பேசியதாவது: உலக அரங்கில், மதிக்கப்படும் பல விஷயங்களை செய்கிறோம். சமாதான உடன்படிக்கைகளை ஏற்படுத்துகிறோம். இந்தியா-பாகிஸ்தான், தாய்லாந்து-கம்போடியா நாடுகள் இடையேயான போர்களை நிறுத்தினோம்.

இந்தியா-பாகிஸ்தான் நாடுகளை நினைத்து பாருங்கள், வர்த்தக ஒப்பந்தங்களை முன் வைத்து போரை நிறுத்தினேன். இந்தியா, பாகிஸ்தான், தாய்லாந்து, கம்போடியா, அர்மீனியா, அஜர்பைஜான், கொசோவோ, செர்பியா. இஸ்ரேல், ஈரான், எகிப்து, எத்தியோப்பியா, ருவாண்டா, காங்கோ நாடுகள் இடையே எழுந்த போர்களை நாங்கள் நிறுத்தினோம்.

இந்த போர்களில் 60 சதவீதம் வர்த்தகத்தை சுட்டிக்காட்டி நிறுத்தினோம். இந்தியாவை போன்று நானும் சொன்னேன். இங்கே பாருங்கள், நீங்கள் சண்டை போட போகிறீர்கள் என்றால், அவர்களிடம் (இந்தியாவை இங்கே குறிப்பிடுகிறார்) அணு ஆயுதங்கள் இருந்தால், நாம் எந்த வர்த்தகமும் செய்ய போவது இல்லை என்று நான் சொன்னேன். உடனே அவர்கள் போரை நிறுத்திவிட்டனர்.

எனக்கு நோபல் பரிசு கிடைக்க வேண்டும் என்று நான் சொன்னேன். ஆனால் அவர்களோ, நீங்கள் ரஷ்யா, உக்ரைன் போரை நிறுத்தினால் நோபல் பரிசு கிடைக்கும் என்று சொன்னார்கள். அது ஒரு போர், அதுவும் மிக பெரிய போர். நான் ஏழு போர்களை நிறுத்திவிட்டேன் என்று சொல்லி இருக்கிறேன். இவ்வாறு டிரம்ப் பேசினார்.

Tags: அமெரிக்கா டிரம்ப்
Previous Post

தூத்துக்குடி கப்பல் கட்டும் தளங்கள் மூலம் 55,000 பேருக்கு வேலைவாய்ப்பு

Next Post

வேலையாட்கள் பற்றாக்குறையால் செங்கத்தில் பருவம் தவறி நெல் பயிரிடும் விவசாயிகள்

Related Posts

Iran Navy

ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை: ராணுவம் அதிரடி உத்தரவு!

05/03/2026
Donald Trump

இந்தியப் பெருங்கடலில் ஈரான் போர்க்கப்பலை மூழ்கடித்த அமெரிக்கா: 100-க்கும் மேற்பட்ட வீரர்கள் பலி

04/03/2026

இந்தியப் பெருங்கடலில் ஈரான் போர்க்கப்பல் மூழ்கடிப்பு: 100-க்கும் மேற்பட்ட வீரர்கள் மாயம்; நீர்மூழ்கித் தாக்குதலா?

04/03/2026

“ஈரான் உச்ச தலைவர் பதவிக்கு யார் வந்தாலும் கொல்லுவோம்” – இஸ்ரேல் பகிரங்க மிரட்டல்

04/03/2026

ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம்: 700-க்கும் மேற்பட்ட கப்பல்கள் நடுக்கடலில் தவிப்பு

04/03/2026

ஹோர்முஸ் நீரிணை மூடல்: உலகப் பொருளாதாரத்தை நிலைகுலையச் செய்யும் கச்சா எண்ணெய் விலை உயர்வு அபாயம்!

03/03/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!
  • ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை: ராணுவம் அதிரடி உத்தரவு!
  • ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி
  • மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்
  • “எளிய தொண்டரை எம்.பி.யாக்கும் காங்கிரஸ்!” -கிறிஸ்டோபர் திலக் குறித்து செல்வப்பெருந்தகை பெருமிதம்

Recent Comments

  1. Pearl4024 on “தி.மு.க. அரசின் திட்டங்கள் மக்களிடம் பேசுபொருளாக மாறியுள்ளன”
  2. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved