Tuesday, June 23, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

அமெரிக்கா – ஈரான் மீண்டும் பேச்சுவார்த்தை

அடுத்த வாரம் இஸ்லாமாபாத்தில் சந்திப்பு?

admin by admin
09/05/2026
in உலகம், செய்திகள்
0
அமெரிக்கா – ஈரான் மீண்டும் பேச்சுவார்த்தை
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

அமெரிக்காவும் ஈரானும் அடுத்த வாரம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளதாக ‘தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

AlsoRead

திருக்கோவிலூர் ஜமாபந்தியில் 240 மனுக்கள் ஏற்பு; 6 பேருக்கு உடனடித் தீர்வு

திருவண்ணாமலை: எ.வ.வேலு பள்ளியில் படை வீராங்கனைகள் பதவியேற்பு விழா; இராணுவ மேஜர் பங்கேற்பு!

செய்யாறு தடுப்பணை பணி மீண்டும் விறுவிறுப்பு!

அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:-

அமெரிக்காவும் ஈரானும் ஒரு மாத காலத்திற்கு தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கான திட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது. இதற்காக 14 அம்சங்கள் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்த வரைவு தயாரிக்கும் பணியில் இரு தரப்பும் மத்தியஸ்தர்கள் மூலம் ஈடுபட்டு வருகின்றன.

இந்த ஒப்பந்தத்தில் ஈரானின் அணுசக்தி திட்டம், ஹார்முஸ் ஜலசந்தியில் நிலவும் பதற்றத்தை குறைப்பது, ஈரானிடம் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை மற்றொரு நாட்டுக்கு மாற்றுவது உள்ளிட்ட அம்சங்களை அமெரிக்கா முன்வைத்துள்ளது.

அதேவேளை, அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடைகளை நீக்க வேண்டும் என்பதையும் சேர்த்து பல கோரிக்கைகளை ஈரான் முன்வைத்துள்ளது. இதனால் பேச்சுவார்த்தை முன்னேற்றம் தாமதமாகும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், அமெரிக்காவின் வர்ஜீனியாவில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டொனால்டு ட்ரம்ப், “மோதலை முடிவுக்கு கொண்டு வரும் திட்டம் தொடர்பாக ஈரானிடம் இருந்து இன்று இரவு பதில் வரும் என்று எதிர்பார்க்கிறோம். இந்த செயல்முறையை ஈரான் வேண்டுமென்றே தாமதப்படுத்துகிறதா என்பது இன்னும் தெளிவாகவில்லை. விரைவில் தெரிந்துவிடும்” என்றார்.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ கூறுகையில், “ஈரான் அரசியல் மற்றும் நிர்வாக ரீதியாக பல்வேறு பிளவுகளுடன் செயலிழந்த நிலையில் உள்ளது. அது பேச்சுவார்த்தைக்கு தடையாக இருக்கலாம். இருப்பினும், ஈரானின் பதில் தீவிரமான பேச்சுவார்த்தைக்கு வழிவகுக்கும் என்று நம்புகிறோம்” என்றார்.

அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஈரான் மீது தாக்குதலை தொடங்கின. அதற்கு ஈரான் பதிலடி தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து பாகிஸ்தான் மேற்கொண்ட மத்தியஸ்த முயற்சியின் காரணமாக ஏப்ரல் 8-ம் தேதி போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.

இதன் தொடர்ச்சியாக ஏப்ரல் 11-ம் தேதி இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா – ஈரான் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் அந்த பேச்சுவார்த்தையில் எந்தவித உடன்பாடும் எட்டப்படவில்லை.

பின்னர் போர் நிறுத்தத்தை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தேதி குறிப்பிடாமல் நீட்டித்தார். அதேநேரத்தில் ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்க கடற்படை தொடர்ந்து முற்றுகையிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Tags: அமெரிக்கா - ஈரான்டொனால்டு ட்ரம்ப்பேச்சுவார்த்தை
Previous Post

பெரும்பான்மை உறுதியாகாத நிலையிலும் விஜய்க்கு திரையுலக வாழ்த்து மழை

Next Post

கவர்னர் அர்லேகர் இன்று மாலை கேரளா புறப்படுவதாக தகவல்;

Related Posts

Thirukkovilur Jamabandi

திருக்கோவிலூர் ஜமாபந்தியில் 240 மனுக்கள் ஏற்பு; 6 பேருக்கு உடனடித் தீர்வு

19/06/2026
EV Velu School Thiruvannamalai

திருவண்ணாமலை: எ.வ.வேலு பள்ளியில் படை வீராங்கனைகள் பதவியேற்பு விழா; இராணுவ மேஜர் பங்கேற்பு!

18/06/2026

செய்யாறு தடுப்பணை பணி மீண்டும் விறுவிறுப்பு!

12/06/2026

“அனுமதியின்றி மண் கொள்ளை; அதிகாரிகள் அலட்சியம்” – விவசாயிகள் வேதனை!

12/06/2026

திருவண்ணாமலை: குறைதீர்வு கூட்டத்தைப் புறக்கணித்து விவசாயிகள் போராட்டம்

12/06/2026

டெல்லி இந்தி அகாடமி விருதுகள் அறிவிப்பு: வாஜ்பாய், சாவர்க்கர் பெயர்களில் புதிய விருதுகள்!

12/06/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • திருக்கோவிலூர் ஜமாபந்தியில் 240 மனுக்கள் ஏற்பு; 6 பேருக்கு உடனடித் தீர்வு
  • திருவண்ணாமலை: எ.வ.வேலு பள்ளியில் படை வீராங்கனைகள் பதவியேற்பு விழா; இராணுவ மேஜர் பங்கேற்பு!
  • செய்யாறு தடுப்பணை பணி மீண்டும் விறுவிறுப்பு!
  • “அனுமதியின்றி மண் கொள்ளை; அதிகாரிகள் அலட்சியம்” – விவசாயிகள் வேதனை!
  • திருவண்ணாமலை: குறைதீர்வு கூட்டத்தைப் புறக்கணித்து விவசாயிகள் போராட்டம்

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved