Thursday, April 23, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

ஈரானில் வீழ்த்தப்பட்ட அமெரிக்க விமானி அதிரடி மீட்பு: “வரலாற்றுச் சாதனை” என ட்ரம்ப் பெருமிதம்!

Balaji by Balaji
05/04/2026
in உலகம்
0
Donald Trump

Donald Trump

0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

அமெரிக்க போர் விமானம் ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவத்தில் காணாமல் போயிருந்த விமானி, கடும் துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக அமெரிக்க முன்னாள் அதிபர் Donald Trump தெரிவித்துள்ளார்.

ஈரான் வான் பரப்பில் பறந்த அமெரிக்க விமானப்படையின் எப்-35 மற்றும் எப்-15 வகை போர் விமானங்கள் அண்மையில் சுட்டு வீழ்த்தப்பட்டன. இந்த சம்பவத்தில் ஒரு விமானி பாதுகாப்பாக திரும்பிய நிலையில், மற்றொரு விமானி காணாமல் போனார்.

AlsoRead

ஈரானை அழிக்க அமெரிக்கா மிரட்டல்: “உயிரையும் தருவோம்” – அதிபர் மசூத் பெசஷ்கியான் ஆவேசம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா – மத்திய கிழக்கு பதற்றம் காரணமா?

ஹார்முஸ் ஜலசந்தியில் இந்தியக் கப்பல்களுக்கு அனுமதி: ஈரான் வெளியுறவு அமைச்சரின் முக்கிய அறிவிப்பு!

இந்த சூழலில், காணாமல் போன விமானியை கண்டுபிடிக்க அமெரிக்காவும் ஈரானும் தீவிர தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டன. அவரை உயிருடன் பிடிப்பவர்களுக்கு 60,000 டாலர் வெகுமதி வழங்கப்படும் என ஈரான் அறிவித்திருந்தது.

இதையடுத்து, சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தின் விமானி மீட்கப்பட்டு, தற்போது பாதுகாப்பாக ஈரானை விட்டு வெளியேறியுள்ளார் என்று அமெரிக்க உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதுகுறித்து ட்ரம்ப் தனது சமூக வலைதளப் பதிவில், “அமெரிக்க ராணுவம் மிகுந்த துணிச்சலுடன் செயல்பட்டு, வரலாற்றிலேயே குறிப்பிடத்தக்க தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஒன்றை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. மீட்கப்பட்டவர் மிகவும் மதிப்புக்குரிய கர்னல் ஆவார்” என கூறினார்.

மேலும், அந்த விமானி ஈரானின் அபாயகரமான மலைப்பகுதிகளில் பதுங்கி இருந்ததாகவும், அவரை மீட்க பல சக்திவாய்ந்த ஆயுதங்களுடன் கூடிய விமானங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.

மீட்பு நடவடிக்கையின் போது கடுமையான துப்பாக்கிச் சண்டை நடைபெற்றதாகவும், அதற்குப் பிறகு விமானி பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும் கூறினார். இந்த நடவடிக்கை அமெரிக்காவின் வான் ஆதிக்கத்தை வெளிப்படுத்துகிறது என்றும், இதில் எந்த அமெரிக்க வீரரும் உயிரிழக்கவோ காயமடையவோ இல்லை என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டார்.

இந்நிலையில், இந்த மீட்பு நடவடிக்கை குறித்து ஈரான் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ பதிலும் அளிக்கவில்லை.

Tags: Breaking International NewsDonald Trump NewsFighter Jet ShootdownIran Airspace IncidentIran US TensionPentagon UpdateUS Military Rescue OperationUS Pilot Rescue
Previous Post

வில்லிவாக்கத்தில் பரபரப்புரையை ரத்து செய்த விஜய்; தொண்டர்களை சமாதானம் செய்த ஆதவ் அர்ஜுனா

Next Post

7 ஆண்டுகளுக்கு பிறகு ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா – மத்திய கிழக்கு பதற்றம் காரணமா?

Related Posts

Trump Netanyahu Conflict

ஈரானை அழிக்க அமெரிக்கா மிரட்டல்: “உயிரையும் தருவோம்” – அதிபர் மசூத் பெசஷ்கியான் ஆவேசம்!

07/04/2026
Iran Oil Trade

7 ஆண்டுகளுக்கு பிறகு ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா – மத்திய கிழக்கு பதற்றம் காரணமா?

05/04/2026

ஹார்முஸ் ஜலசந்தியில் இந்தியக் கப்பல்களுக்கு அனுமதி: ஈரான் வெளியுறவு அமைச்சரின் முக்கிய அறிவிப்பு!

26/03/2026

ஈரானுக்கு அமெரிக்காவின் 15 அம்ச போர் நிறுத்த திட்டம்: பேச்சுவார்த்தையை நிராகரித்த தெஹ்ரான்

25/03/2026

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை: ஈரானின் புதிய உச்ச தலைவர் மோஜ்தபா கமேனி முடிவுக்கு கரணம் என்ன?

25/03/2026

ஈரான் – இஸ்ரேல் போர் பதற்றம்: பிலிப்பைன்ஸில் ‘தேசிய எரிசக்தி அவசரநிலை’ பிரகடனம்!

25/03/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • ஈரானை அழிக்க அமெரிக்கா மிரட்டல்: “உயிரையும் தருவோம்” – அதிபர் மசூத் பெசஷ்கியான் ஆவேசம்!
  • கீழ்பென்னாத்தூர்: தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வேட்புமனு தாக்கல்
  • பாஜக தலைவர்களே பதில் சொல்வார்களா? – நிதி ஒதுக்கீடு முதல் FCRA வரை முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி!
  • தமிழக தேர்தல் 2026: எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இன்று வேட்புமனு தாக்கல்!
  • பேட்டரி துறையில் புரட்சி: கண்ணிமைக்கும் நேரத்தில் சார்ஜ் ஆகும் ‘குவாண்டம் பேட்டரி’!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved