Thursday, April 23, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

ஈரானுக்கு அமெரிக்காவின் 15 அம்ச போர் நிறுத்த திட்டம்: பேச்சுவார்த்தையை நிராகரித்த தெஹ்ரான்

Balaji by Balaji
25/03/2026
in உலகம்
0
US Iran conflict

US Iran conflict

0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

மேற்கு ஆசியாவில் நீடித்து வரும் பதற்ற நிலைமையில், போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்கா முன்வைத்துள்ள 15 அம்ச திட்டம் மத்தியஸ்தர்கள் மூலம் ஈரானுக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், அந்த திட்டத்தைத் தொடர்ந்து நடத்தப்பட வேண்டிய பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா விடுத்த அழைப்பை ஈரான் நிராகரித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி ஈரானுக்கு எதிராக தாக்குதலைத் தொடங்கியதைத் தொடர்ந்து, இரு தரப்பும் கடுமையான எதிர்தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றன. 25 நாட்களை கடந்த இந்த மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது.

இந்நிலையில், ஈரானுடன் பேச்சுவார்த்தை முன்னேற்றமாக உள்ளதாகக் கூறிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், மார்ச் 23ஆம் தேதி முதல் 5 நாட்களுக்கு தாக்குதலை நிறுத்துவதாக அறிவித்திருந்தார். எனினும், அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை என ஈரான் தெளிவுபடுத்தியது.

இதற்கிடையில், திட்டமிட்ட இலக்கை அடையும் வரை தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் அறிவித்துள்ளது. அதேசமயம், இஸ்ரேலுக்கும் மேற்காசியாவில் உள்ள அமெரிக்க தளங்களுக்கும் எதிராக ஈரான் தனது தாக்குதல்களை தொடர்ந்து வருகிறது.

பாகிஸ்தானின் உதவியுடன் மத்தியஸ்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அமெரிக்காவின் 15 அம்ச திட்டம் ஈரானிடம் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், இந்த முயற்சிகளை ஈரான் ராணுவம் கடுமையாக விமர்சித்துள்ளது. “எந்த சூழ்நிலையிலும் எங்கள் நிலைப்பாடு மாறாது; சமரசம் எங்களுக்கான வழி அல்ல” என ஈரான் ராணுவத் தலைமையகப் பேச்சாளர் லெப்டினன்ட் கர்னல் இப்ராஹிம் சோல்பகாரி அரசு தொலைக்காட்சியில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், போர் நிறுத்தத் திட்டம் குறித்து அமெரிக்கா முன்வந்தது இஸ்ரேலுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெள்ளை மாளிகை இதுவரை அதிகாரப்பூர்வ பதில் அளிக்கவில்லை.

AlsoRead

ஈரானை அழிக்க அமெரிக்கா மிரட்டல்: “உயிரையும் தருவோம்” – அதிபர் மசூத் பெசஷ்கியான் ஆவேசம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா – மத்திய கிழக்கு பதற்றம் காரணமா?

ஈரானில் வீழ்த்தப்பட்ட அமெரிக்க விமானி அதிரடி மீட்பு: “வரலாற்றுச் சாதனை” என ட்ரம்ப் பெருமிதம்!

இதேவேளை, ஈரானின் அரசு கட்டிடங்களை குறிவைத்து இஸ்ரேல் புதிய மற்றும் தீவிரமான தாக்குதல்களை தொடங்கியுள்ளது. பதிலுக்கு, ஈரானும் இஸ்ரேல் மற்றும் பாரசீக வளைகுடா பகுதிகளை குறிவைத்து தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. குவைத் சர்வதேச விமான நிலையம் மீதான தாக்குதலும் இதில் அடங்கும்.

இந்த சூழலில், ஒரு பக்கம் போர் நிறுத்த முயற்சிகளை முன்னெடுத்து வரும் அமெரிக்கா, மறுபக்கம் தனது படை வலிமையை மேற்கு ஆசியாவில் அதிகரித்து வருகிறது. கடற்படைக்கு ஆதரவாக பாராட்ரூப்பர்கள் அனுப்பப்பட்டுள்ளதுடன், மேலும் இரண்டு கடற்படை பிரிவுகளை அனுப்ப பென்டகன் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான வீரர்கள் அந்தப் பகுதியில் திரள உள்ளனர்.

Tags: ceasefire planDonald Trumpgeopolitical newsIran rejects talksIsrael Iran WarIsrael strikes IranMiddle East TensionUS Iran ConflictUS military deployment
Previous Post

அதிமுக கூட்டணி தொகுதிப் பங்கீடு நிறைவு: 27 இடங்களில் பாஜக போட்டி – முழு விவரம் இதோ!

Next Post

அஞ்சிலும் அஞ்சாத ஆட்கள்? தமாகாவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள்: அதிமுக வியூகமா? அக்னிப்பரீட்சையா?

Related Posts

Trump Netanyahu Conflict

ஈரானை அழிக்க அமெரிக்கா மிரட்டல்: “உயிரையும் தருவோம்” – அதிபர் மசூத் பெசஷ்கியான் ஆவேசம்!

07/04/2026
Iran Oil Trade

7 ஆண்டுகளுக்கு பிறகு ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா – மத்திய கிழக்கு பதற்றம் காரணமா?

05/04/2026

ஈரானில் வீழ்த்தப்பட்ட அமெரிக்க விமானி அதிரடி மீட்பு: “வரலாற்றுச் சாதனை” என ட்ரம்ப் பெருமிதம்!

05/04/2026

ஹார்முஸ் ஜலசந்தியில் இந்தியக் கப்பல்களுக்கு அனுமதி: ஈரான் வெளியுறவு அமைச்சரின் முக்கிய அறிவிப்பு!

26/03/2026

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை: ஈரானின் புதிய உச்ச தலைவர் மோஜ்தபா கமேனி முடிவுக்கு கரணம் என்ன?

25/03/2026

ஈரான் – இஸ்ரேல் போர் பதற்றம்: பிலிப்பைன்ஸில் ‘தேசிய எரிசக்தி அவசரநிலை’ பிரகடனம்!

25/03/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • ஈரானை அழிக்க அமெரிக்கா மிரட்டல்: “உயிரையும் தருவோம்” – அதிபர் மசூத் பெசஷ்கியான் ஆவேசம்!
  • கீழ்பென்னாத்தூர்: தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வேட்புமனு தாக்கல்
  • பாஜக தலைவர்களே பதில் சொல்வார்களா? – நிதி ஒதுக்கீடு முதல் FCRA வரை முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி!
  • தமிழக தேர்தல் 2026: எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இன்று வேட்புமனு தாக்கல்!
  • பேட்டரி துறையில் புரட்சி: கண்ணிமைக்கும் நேரத்தில் சார்ஜ் ஆகும் ‘குவாண்டம் பேட்டரி’!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved