காஞ்சிபுரம் மாவட்டம் முகலிவாக்கம் உட்பட்ட மதனபுரம் யமுனா தெருவில் வி.ஜி.என். லட்சுமி அவென்யூவில் வசிக்கும் செல்லம்மாள் என்பவர் 20 ஆண்டுகளாக புறம்போக்கு இடத்தில் குடிசையில் வசித்து வந்தார் அருகில் அடுக்கு குடியிருப்புகள் கட்டப்பட்ட நிலையில் அந்த இடத்தில் மின் இணைப்பு,குடிநீர், சொத்து வரியை செலுத்தி வந்தார்.
மேலும் இந்த இடத்துக்கு வட்டாட்சியரிடம் பட்டா கேட்டு இருந்தார் வட்டாட்சியர் பட்டா வழங்குவதாக கூறிய நிலையில் திடீரென்று செல்லம்மாள் வசித்து வந்த இடம் தனக்கு சொந்தமானது என்று கூறி சென்னையைச் சேர்ந்த முருகவேல் என்பவர் ஜேசிபி இயந்திரத்தை கொண்டு வீட்டை இடித்து தரைமட்டமாக்கி தகடுகளால் வேலி அமைத்து விட்டார்.
இது குறித்து செல்லம்மாள் மாவட்ட ஆட்சியரிடம் நேரில் சென்று, அபகரித்த தன்னுடைய இடத்தை மீட்டுத் தருமாறு மனு அளித்தார். இது குறித்து உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு அளிக்க சென்ற போது மனுவை வாங்காமல் வெளியே போகும் படி கூறுகிறார்கள் என்று அவர் கண்ணீர் மல்க கூறினார். எனவே இது குறித்து ஆட்சியர் விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.



