தூய்மையே சேவை இயக்கம் என்பது தூய்மை மற்றும் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் ஒரு திட்டமாகும். சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிப்பது இதன் முக்கிய நோக்கமாகும். அதன்படி தூய்மை குறித்து பேரணிகள், பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி நேற்றைய தினம் திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் கொடியசைத்து தொடங்கி வைத்து பேரணியில் பங்கேற்று சுற்றுப்புற தூய்மை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இப்பேரணியில் தூய்மை குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை 200 க்கும் மேற்பட்ட மாணவிகள் ஏந்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பேரணியானது காந்தி சிலையில் தொடங்கி அண்ணாமலையார் திருக்கோயில் கோபுரம் வரை சென்று நிறைவடைந்தது.
நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை மேயர் ராஜாங்கம், மாநகராட்சி ஆணையர் செல்வபாலாஜி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



