திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அடுத்த கெங்கபுரம், கொழப்பலூர், ஆவணியாபுரம், அன்மருதை, முனுகப்பட்டு பகுதி வழியாக செய்யாற்று படுகை செல்கிறது. இந்த ஆற்றுப்படுகையொட்டி விவசாயிகள் பல ஏக்கர் பரப்பளவில் விவசாய தொழில் செய்து வருகின்றனர். மேலும் ஆவணியாபுரம் பகுதியில் இந்த ஆற்றுப்படுகையில் அணைக்கட்டு கட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் மழைக்காலங்களில் மழை, வெள்ளம் ஆற்றுப்படுகை வழியே செல்வதால் விவசாயத்திற்கு பயன்படுவதில்லை. இதனால் விவசாயிகள் தடுப்பணை கட்ட கோரி கடந்த திமுக ஆட்சியில் கோரிக்கை வைத்திருந்தனர். இதையடுத்து கெங்காபுரம் பகுதியில் சுமார் ₹12.24 கோடியில் தடுப்பணை கட்டுவதற்கு ஒருங்கிணைந்த நீர்வள மேம்பாட்டு திட்டம் சார்பில் நிதி ஒதுக்கப்பட்டு தடுப்பணை கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வந்தது.
இதனைத் தொடர்ந்து சட்டமன்ற தேர்தல் முடிந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் மீண்டும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருவதால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



